- Advertisement -

தரித்திரம் நீக்கும் தை மாத மகாலட்சுமி வழிபாடு

- Advertisement -

தை மாதம் என்பது சிறப்புக்குரிய மாதம் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட தை மாதத்தில் தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. அப்படி நாம் வழிபாடு செய்யும் பட்சத்தில் அந்த வருடம் முழுவதுமே நமக்கு சிறப்பான வருடமாக அமையும் என்றும் கூறப்படுகிறது. மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு என்று பல வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றில் எந்த வழிமுறையை நம்மால் பின்பற்ற முடியுமோ அந்த வழிமுறையை பின்பற்றி வழிபாடு செய்தாலே போதும். ஏன் துளசி செடியை மகாலட்சுமி தாயாக நினைத்து தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் கூட மகாலட்சுமி தாயாரின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் ஒரு சில குறிப்பிட்ட நாட்கள் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக திகழ்கின்றன. அந்த நாட்களில் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய தரித்திர நிலை முற்றிலும் நீங்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

தை மாத மகாலட்சுமி வழிபாடு

மகாலட்சுமி தாயாருக்கு உகந்த கிழமையாக திகழ்வது வெள்ளிக்கிழமை என்று நம் அனைவருக்குமே தெரியும். அதனால் தை மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். அதேபோல் பௌர்ணமி அமாவாசை போன்ற தினங்களிலும் மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்ய வேண்டும். இதோடு மகாலஷ்மி தாயார் குரிய நட்சத்திரமான ஸ்வாதி நட்சத்திர நாளன்று நாம் வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு அளவில்லா செல்வ வளம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சுவாதி நட்சத்திரம் என்பது ஜனவரி மாதம் 22ஆம் தேதி தை மாதம் ஒன்பதாம் நாள் நவமி திதியுடன் சேர்ந்து வருகிறது. நவமி என்பது ராமருக்கு உகந்த திதி என்று நம் அனைவருக்கும் தெரியும். அதேபோல் புதன்கிழமையும் பெருமாளுக்கு உரிய கிழமையாக கருதப்படுகிறது. இவை அனைத்தும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் மகாலட்சுமி தாயாரை பூஜை செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் அருள் என்பது நமக்கு கிடைக்கும். அந்த பூஜையை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

அனைவரின் இல்லங்களிலும் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி படம் இருக்கும். மகாலட்சுமி தாயாரின் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். வாசனை நிறைந்த மலர்களை சாற்றுங்கள். மகாலட்சுமி தாயாருக்குரிய சுலோகமாக கருதப்படுகிறது தான் கனகதாரா ஸ்தோத்திரம். ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்தோத்திரத்தை யார் ஒருவர் மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்து பாராயணம் செய்கிறார்களோ அவர்களுடைய தரித்திர நிலை நீங்கி செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை சுவாதி நட்சத்திர நாள் அன்று ஒருமுறை படிக்க வேண்டும். அடுத்த நாள் இரண்டு முறை படிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டே படிக்க வேண்டும். அடுத்த மாத சுவாதி நட்சத்திரம் வருவதற்கு முதல் நாள் 27 முறை இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை படிப்பது போல் வரும். அதோடு அந்த வழிபாட்டை நிறைவு செய்துவிடலாம். தை மாத சுவாதி நட்சத்திர நாள் என்று தொடங்கி மாசி மாத சுவாதி நட்சத்திர நாளுக்கு முந்திய நாள் இந்த வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டை செய்யும் பொழுது மகாலட்சுமி தாயாருக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய கற்கண்டை நெய்வேத்தியமாக வைக்கலாம். அதேபோல் நெல்லிக்கனி தீபம் ஏற்றி கனகதாரா ஸ்தோத்திர வழிபாட்டை செய்தாலும் நல்ல பலன் கிடைக்கும். நெல்லிக்கனி தீபம் ஏற்றத் தெரியாது என்பவர்கள் நெல்லிக்கனியை மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து விட்டும் இந்த கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: கொடுமையான கஷ்டங்களை போக்கும் நரசிம்மர் மந்திரம்

மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டை மேற்கொள்பவர்கள் கண்டிப்பான முறையில் பெருமாளின் வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் மகாலஷ்மி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். இருவரையும் மனதார நினைத்துக் கொண்டு இந்த முறையில் கனகதாரா ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்பவர்களுக்கு இருவரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -