- Advertisement -

தசமி திதியில் செய்ய வேண்டிய அம்மன் வழிபாடு

- Advertisement -

நாளைய தினம் அப்படி ஒன்றும் விசேஷமான நாள் இல்லையே என்று பல பேர் சிந்திக்கலாம். ஆனால் நாளைக்கு ஒரு விசேஷம் இருக்கிறது. தினம் தினம் புது புது பிரச்சனைகள் வருகிறது அப்போது தினம் வரக்கூடிய சக்தி வாய்ந்த வழிபாட்டு முறைகளை நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அல்லவா அப்போது தானே பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை கண்டுபிடிக்க சரியான வழிபாட்டை மேற்கொள்ள முடியும்.

தற்போது இன்றைய சூழ்நிலையில், இன்று உங்களுடைய வாழ்வில் ஏதேனும் தீர்க்க முடியாத துயரங்கள், துன்பங்கள் தடைகள் இருக்கும் பட்சத்தில் நாளைய தினம் உங்களுக்கு ஒரு வரப் பிரசாதம். நாளைக்கு என்ன அப்படி அற்புதம் வாய்ந்த நல்ல நாள் தெரியுமா? நாளைய தினம் தசமி. தசமி என்றால் வெற்றி. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்பவர்களுக்கெல்லாம், நாளைய தின வழிபாடு நிச்சயம் கை கொடுக்கும்.

- Advertisement -

நாளை வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் தசமி திதியில், செய்ய வேண்டிய ஒரு எளிமையான அம்மன் வழிபாட்டை தான் என்று தான் தெரிந்து கொள்ள போகின்றோம். தசமி என்றால் வெற்றி அல்லவா. இந்த நாளில் நீங்கள் செய்யும் வழிபாடு நிச்சயம் வெற்றி தரும். உங்கள் வீட்டு பக்கத்தில் எந்த அம்மன் கோவில் இருந்தாலும், அந்த கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் குடும்ப நலனிற்காக, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக, இந்த வழிபாட்டை மேற்கொள்வது சிறப்பான பலனை தரும். வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வையுங்கள். ஒரே ஒரு எலுமிச்சம் பழத்தை உள்ளங்கைகளில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களுடைய கோரிக்கையை அம்மனிடம் வையுங்கள். இப்போது முக்கியமாக உங்கள் வாழ்க்கைக்கு என்ன தேவைப்படுகிறது. அந்த பிரார்த்தனையை மட்டும் முழு மனதோடு செய்துவிட்டு, அந்த எலுமிச்சம் பழத்தை அர்ச்சகர் தட்டில் வைத்து, அம்மன் பாதத்தில் வைத்து எடுத்து தரும்படி சொல்லுங்கள்.

அம்மன் கோவிலிலேயே அமர்ந்து பிரார்த்தனை நிறைவேற மனதார வேண்டிக்கொண்டு, அம்மன் பாதத்தில் இருக்கும் எலுமிச்சம் பழத்தை மீண்டும் வாங்கி பூஜை கூடைக்குள் வைத்து, வீட்டிற்கு கொண்டு வந்து, உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்தால், நிச்சயமாக நீங்கள் நினைத்த வேண்டுதல் நிறைவேறும்.

- Advertisement -

இதோடு மட்டுமா, நாளைய தினம் நீங்கள் மேற்கொள்ளும் எந்த முயற்சிகளாக இருந்தாலும் அது வெற்றி தரும். விஜயதசமி அன்று மட்டும்தான், தசமி திதிக்கு சக்தி இருக்கிறது என்பது அர்த்தம் அல்ல. மாதம்தோறும் வரக்கூடிய தசமி திதியில், நாம் மேற்கொள்ள கூடிய முயற்சிகளும் நல்ல வெற்றியை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் வெள்ளிக்கிழமை விநாயகர் வழிபாடு

நாளைய தினம் தசமி திதியோடு  சேர்த்து ஹஸ்தம் நட்சத்திரமும் இருக்கிறது. சந்திர பகவானால் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், ஜாதக கட்டத்தில் சந்திரன் சரியில்லை என்றால், நாளை தினம் சந்திரனுக்கு இரண்டு நெய்தீபங்கள் ஏற்றி, வேண்டிக் கொள்ளுங்கள். மன குழப்பம் நீங்கும். சந்திர பகவானின் ஆசி முழுமையாக கிடைக்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -