- Advertisement -
சமையல் குறிப்புகள்

மசாலாவை இப்படி அரைத்து ‘தட்டைபயறு குழம்பு’ வைத்தால், இதன் ருசிக்கு உங்கள் நாக்கு அடிமையாகி விடும்.

- Advertisement -

தட்டை பயிரை வைத்து ஒரு குழம்பு ரெசிபியை எப்படி செய்வது என்பதை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் 1 – கப் (200 கிராம்) அளவு தட்டை பயிரை எடுத்து நன்றாக கழுவி, குக்கரில் போட்டு, 3 கப் அளவு தண்ணீர் ஊற்றி, கொஞ்சமாக உப்பு போட்டு ஆறிலிருந்து எட்டு விசில் விட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். வேகவைத்த இந்த தட்டை பயிர் அப்படியே இருக்கட்டும்.

அடுத்தபடியாக ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் தோல் உரித்த சின்ன வெங்காயம் – 10 பல், வர மிளகாய் – 6, தோலுரித்த பூண்டு – 3 பல், சோம்பு – 1 ஸ்பூன், மல்லித் தூள் – 2 ஸ்பூன், இந்த எல்லா பொருட்களையும் சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் ஊற்றி விழுது போல அரைத்துக் கொள்ளவேண்டும். இதுவும் அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது குழம்பு செய்ய போகலாம். அடுப்பில் ஒரு கடாயை வைத்துக்கொள்ளுங்கள். அதில் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் அளவு ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, மீடியம் சைஸ் தக்காளி – 2 பொடியாக நறுக்கியது, இவைகளை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்பு, தக்காளியை சேர்த்து வதக்கி விடுங்கள். தக்காளி பச்சை வாடை நீங்கி, குழைந்து வதங்கியதும் மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மசாலா விழுதை கடாயில் சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு மீண்டும் ஒருமுறை நன்றாக கலந்து, ஒரு மூடி போட்டு வெங்காயத்தின் பச்சை வாடை, அதாவது மிக்ஸியில் போட்டு அரைத்த சின்ன வெங்காயத்தின் பச்சை வாடை போகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

உப்பு சேர்க்கும்போது ஜாக்கிரதையாக சேர்த்துக்கொள்ளுங்கள். ஏற்கனவே தட்டை பயிரை வேக வைக்கும் போது பாதி உப்பு சேர்த்து இருக்கின்றோம் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மொத்தமாக இந்த மசாலா பொருட்கள் அனைத்தும் சேர்த்து 5 லிருந்து 7 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வேண்டும்.

அதன் பின்பு வேக வைத்திருக்கும் தட்டை பயிரை கடாயில் கொட்டி ஒரு கரண்டியை வைத்து நன்றாக கொஞ்சம் மசித்து விடுங்கள். அப்போதுதான் தட்டைப்பயிறு மசிந்து மசாலாவுடன் சேர்ந்து சுவையாக இருக்கும். மீண்டும் இந்த கிரேவியை ஒரு மூடி போட்டு 2 லிருந்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து மேலே கொத்தமல்லித் தழைகளைத் தூவி பரிமாறினால் சூப்பரான வித்தியாசமான தட்டைப் பயிறு குழம்பு தயார். அல்லது தட்டைப்பயிறு கிரேவி என்றும் இதை சொல்லலாம். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -