- Advertisement -

ஒவ்வொரு மனிதரிடமும் தங்களுடைய விருப்பம் என்னவென்று கேட்டால் கடன் இல்லாத வாழ்க்கை வாழ்வது என்று தான் சொல்வார்கள் அவ்வளவு துன்பத்தை தரக்கூடியது இந்த கடன் பிரச்சனை. அப்பேர்ப்பட்ட பெருந்துயரான கடனில் இருந்து வெளிவருவதற்கு எத்தனையோ பரிகாரங்கள் பூஜை வழிமுறைகள் உண்டு. இவை அனைத்திலும் இந்த ஒரு மந்திர முறை அது சக்தி வாய்ந்ததாக சொல்லப்படுகிறது. அது குறித்த தகவலை மந்திரம் பற்றிய இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த கடன் பிரச்சனையிலிருந்து நம்மை காக்கக் கூடிய தெய்வமாக இருப்பவர் பைரவர். ஒருவர் கடனினால் பெரிதும் துன்பப்படுவதற்கு அவருடைய உருவினையை காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஊழ்வினையை தீர்க்கக் கூடியவரும் அதில் வரக்ஸகூடிய துன்பங்களில் இருந்து நம்மை காக்க கூடிய வரும் ஈசனின் சொரூபமான இந்த பைரவர் தான்.

- Advertisement -

அவரை நினைத்து நாம் தினந்தோறும் சொல்லும் இந்த ஒரு மந்திரம் நம்முடைய பெருந்துயரை நீக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த மந்திரத்தை அஷ்டமி நாளில் துவங்குவது மிகவும் நல்லது. ஏனெனில் வைரவருக்கு உகந்த வழிபாட்டு தினங்களில் அது அஷ்டமி. அப்படி அஷ்டமி நாளில் துவங்க முடியாதவர்கள் மற்ற நாளிலும் துவங்கலாம் தவறு கிடையாது.

இந்த வழிபாட்டை துவங்குவதற்கு பூஜை அறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதற்கு முன்பாக நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். தீபம் கிழக்கு நோக்கி எறியட்டும் நீங்கள் வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ளுங்கள். கீழே ஏதேனும் ஒரு துணியை விரித்து அதன் மேல் அமர்ந்து கொள்ளுங்கள். இப்போது தீபத்தை பார்த்தவாறு பைரவரை மனதார நினைத்துக் கொண்டு கீழ்வரும் இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

மந்திரம்

“ஓம் ஸ்வனாத் வஜாய வித்மஹே!
சூல ஹஸ்தாய வித்மஹே!
தன்னோ பைரவ ப்ரசோதயாத்!!”

 

இந்த மந்திரத்தை தினமும் ஒரு முறை சொன்னாலும் போதும் அதற்கு மேலும் சொல்லுவது உங்கள் விருப்பம். எத்தனை முறை நாம் சொல்கிறோமோ அத்தனை பலனை நம்மால் விரைவில் அனுபவிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது. அதே போல் அஷ்டமி நாளில் ஆலயத்திற்கு சென்று பைரவ வழிபாடு செய்வதும் இந்த கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர உதவி புரியும்.

- Advertisement -

இந்த கடன் பிரச்சனை தீர வெறும் மந்திரம் சொன்னால் மட்டும் போதுமா என்றால் நிச்சயமாக போதாது. ஏனெனில் வெறும் மந்திரத்தால் மாங்காய் பழுக்க வைக்க முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். இந்த வழிபாடு உங்களின் முயற்சிக்குப் பெருந்துணையாக இருக்கும் இதுவரை கடனை அடைக்க உங்களுக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை நீங்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகிறது இன்று வைத்துக் கொள்வோம்.

இதையும் படிக்கலாமே: நோய் நொடி தீர்க்கும் மந்திரம்

இந்த வழிபாட்டுடன் சேர்த்து உங்கள் முயற்சியை செய்யும்போது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் அதும் விரைவிலே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது இதுதான் இந்த மந்திரத்தினுடைய சக்தி இந்த மந்திர வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து பைரவரின் பரிபூரண அருளாசியுடன் கடன் எல்லாம் நிம்மதியான வாழ்க்கை வாழ வழித் தேடி கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -