- Advertisement -

தீராத பிரச்சினையை கூட தீர்க்கும் பரிகாரம்

- Advertisement -

எப்பேர்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சனைக்கு என்று ஒரு முடிவு கண்டிப்பாக இருக்கும். அதை கண்டறிந்து அந்த பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஒருவேளை நம்மால் கண்டறிய முடியவில்லை என்னும் பட்சத்தில் நமக்கு கடவுள் உதவி செய்ய வேண்டும் என்பதற்காக தான் அந்த பிரச்சினை தீர வேண்டும் என்று கடவுளை வழிபாடு செய்கிறோம். அப்படி நம்மால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய ஒரு நாளாக தான் ஏப்ரல் ஒன்றாம் தேதி திகழ்கிறது. அன்றைய தினத்தில் நாம் முருகப்பெருமானை நினைத்து செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பிரச்சினை தீர்க்கும் பரிகாரம்

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் முருகப்பெருமானுக்கு உகந்த கிழமையாக திகழ்கிறது. அதிலும் ஏப்ரல் மாதத்தில் முதல் நாள் செவ்வாய்க்கிழமை அன்று ஆரம்பிப்பதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினம் கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த நாளில் நாம் முருகப் பெருமானை கண்டிப்பான முறையில் வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதோடு ஒரு எளிமையான பரிகாரத்தை செய்யும் பொழுது அந்த பிரச்சனைக்குரிய தீர்வு நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையில் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் தான் செய்ய வேண்டும். செவ்வாய் ஹோரை என்பது காலை 6 மணியிலிருந்து 7 மணி, மதியம் 1 மணியிலிருந்து 2 மணி, இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்கு வரும். இதில் நாம் காலையில் வரக்கூடிய செவ்வாய் ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்தோம் என்றால் அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே இருக்கும்.

இதற்கு நமக்கு தேவைப்படும் கூடியது செவ்வாய் பகவானுக்குரிய தானியமான துவரம் பருப்பு தான். ஒரு மூடி போட்ட பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை போட வேண்டும். பிறகு அதில் ஆறு ஒரு ரூபாய் நாணயத்தை போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அதில் ஏதாவது ஒரு சிவப்பு நிற மலரை வைத்து முருகப்பெருமானை முழுமனதோடு வழிபாடு செய்து எந்த பிரச்சினை தீரவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த பிரச்சினையை முருகப்பெருமானிடம் கூறி அது தீர வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும். ஒரே ஒரு கோரிக்கையை தான் முன்வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிறகு அந்த டப்பாவை மூடி முருகப் பெருமானின் படத்திற்கு முன்பாக வைத்து விட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஆறு வாரங்கள் துவரம் பருப்பு, ஆறு ரூபாய் நாணயம், சிவப்பு மலர் இவற்றை அதே டப்பாவில் போட்டு முருகப்பெருமானிடம் அதே வேண்டுதலை முன்வைக்க ஆறு வாரங்கள் நிறைவடைவதற்குள் அந்த வேண்டுதல் நிறைவேறுவதற்குரிய வழி உண்டாகும். ஆறு வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்து முடித்த பிறகு அடுத்து வரக்கூடிய செவ்வாய்க்கிழமை அன்று இந்த டப்பாவில் இருக்கக்கூடிய துவரம் பருப்பை யாருக்காவது ஒருத்தருக்கு தானமாக தர வேண்டும். இதில் இருக்கக்கூடிய 36 ரூபாயை முருகனின் ஆலயத்தில் இருக்கக்கூடிய உண்டியலில் சேர்த்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே:சதுர்த்தி, கார்த்திகை விரத பலன்கள்

முருகப்பெருமானை முழுமனதோடு நினைத்து இந்த ஒரு பரிகாரத்தை தொடர்ச்சியாக 6 வாரங்கள் செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருளால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் தீர்வதற்குரிய வழி உண்டாகும் என்ற தகவலை கூறு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -