- Advertisement -

தீய சக்திகள் விலக ஊதுபத்தி பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு முக்கியமான காரணம் அவர்களுடைய கர்ம வினைகள் என்று நமக்கு தெரிந்தாலும் பிறரது தீய எண்ணங்களாலும், தீய பார்வையாலும், பொறாமை குணத்தாலும் கஷ்டங்கள் உண்டாகிறது என்று பலரும் அனுபவபூர்வமாகவே உணர்ந்திருப்பார்கள். இதை தான் நாம் கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம் என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். இந்த எதிர்மறை ஆற்றல்களையும் தீய சக்திகளையும் விளக்குவதற்கு நாம் அடிக்கடி பரிகாரங்கள் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் நாம் செய்யக்கூடிய வழிபாடு நமக்கு முழுமையான பலனை தரும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் ஊதுபத்தியை வைத்து வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளை விளக்குவது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.

தீய சக்திகள் விலக ஊதுபத்தி பரிகாரம்

எவ்வளவுதான் தெய்வ வழிபாட்டை மேற்கொண்டாலும் எந்தவித நன்மையும் நடக்கவில்லை என்ற புலம்புபவர்கள் பலர் இருப்பார்கள். அவர்களுடைய அந்த வழிபாட்டிற்குரிய பலன் கிடைக்காததற்கு முக்கியமான காரணமாக திகழ்வது தீய சக்திகளே. அவர்களிடமும் அவர்கள் வீட்டிலும் இருக்கக்கூடிய இந்த தீய சக்திகள் எப்பொழுது விலகுகிறதோ அப்பொழுதுதான் அவர்கள் செய்த வழிபாட்டிற்குரிய பலன் கிடைக்கும் என்றே கூறலாம். அதனால் எந்த அளவிற்கு தெய்வ வழிபாட்டில் நாம் ஈடுபடுகிறோமோ அந்த அளவிற்கு வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகளையும் விலக்க வேண்டும் என்பது முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

- Advertisement -

அந்த வகையில் தீய சக்திகளை வீட்டிலிருந்து விலக்குவதற்கு நாம் பரிகாரம் செய்வதற்கு உகந்த நாட்களாக திகழ்வது மாதத்தில் ஒரு நாள் வரக்கூடிய அமாவாசை மற்றும் வாராவாரம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை. இந்த இரண்டு நாட்களிலும் நாம் வீட்டில் ஏதாவது ஒரு ரூபத்தில் தீய சக்திகளை வெளியே அனுப்புவதற்குரிய பரிகாரத்தை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் நாம் அதற்கு அடுத்தார் போல் செய்யக் கூடிய வழிபாடுகளுக்கும் முயற்சிகளுக்கும் நமக்கு பலம் கிடைக்கும். அந்த வகையில் அதிகப்படியான செலவுகள் எதுவுமே இல்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய ஒரே ஒரு ஊதுபத்தியை வைத்து எப்படி தீய சக்திகளை விரட்டியடிப்பது என்றுதான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

இதற்கு நமக்கு ஒரே ஒரு ஊதுபத்தி இருந்தால் போதும். ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6:00 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். ஊதுபத்தியை எடுத்து பற்ற வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது ஊதுபதியிலிருந்து புகை வர ஆரம்பிக்கும். இந்த ஊதுபத்தியை அப்படியே உங்கள் வீடு முழுவதும் காட்ட வேண்டும். ஒவ்வொரு அறைக்கும் சென்று ஒவ்வொரு அறையிலும் இருக்கக்கூடிய நான்கு மூலையிலும் காட்ட வேண்டும். அவ்வாறு காட்டும் பொழுது அந்த ஊதுபத்தியை பயன்படுத்தி காற்றிலேயே ஒரு எண்ணை எழுத வேண்டும். இந்த எண்ணை நாம் எழுதுவதன் மூலம் அந்த எண்ணின் பலனால் நம்முடைய வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட தீய சக்தியாக இருந்தாலும் அவை விலகி ஓடும். அந்த எண் தான் 0927 இந்த எண்ணை எழுதும்பொழுது ஊதுபத்தியிலிருந்து விழக்கூடிய சாம்பல் எந்த பொருளின் மீதும் விழுகக்கூடாது என்பதில் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்படி ஒவ்வொரு அறையிலும் நான்கு மூலையிலும் இந்த எண்ணை எழுதிவிட்டு கடைசியாக ஹாலிலும் இதே முறையில் செய்து ஊதுபத்தியை வீட்டிற்கு வெளியே கொண்டு போய் வைத்து விடுங்கள். இப்படி ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் இந்த பரிகாரத்தை செய்யலாம். இந்த பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும் செய்யலாம். நம் வீட்டில் நாம் செய்ய வேண்டும். அது மட்டும் தான் நிபந்தனையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:செல்வத்தடை நீக்கும் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
தீய சக்திகளை விரட்டியடிப்பதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன. அந்த பரிகாரங்களை நாம் செய்வதற்கு பொருள் செலவு என்பது கண்டிப்பான முறையில் ஏற்படும். ஆனால் இந்த பரிகாரத்தை நாம் செய்வதற்கு அந்த அளவிற்கு பொருட்செலவு எதுவுமே தேவைப்படாது. அனைவரின் இல்லங்களிலும் ஊதுபத்தி என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். முழு மனதோடு ஊதுபத்தியை பயன்படுத்தி இந்த முறையில் பரிகாரம் செய்து வீட்டில் இருக்கக் கூடிய அனைத்து விதமான தீய சக்திகளையும் விரட்டி அடிக்கலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -