- Advertisement -

தீய சக்திகளை விரட்டியடிக்கும் அஷ்டமி பரிகாரம்

- Advertisement -

உக்கிர தெய்வங்களின் வரிசையில் திகழக்கூடியவர்தான் காலபைரவர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட காலபைரவர் தான் அன்றைய காலத்தில் கோவிலை பாதுகாக்க கூடிய தெய்வமாகவும் திகழ்ந்தார் என்பதும் புராணங்களில் கூறப்பட்டிருக்கக்கூடிய ஒன்றுதான். அன்றைய காலத்தில் கோவிலின் நடையை சாத்திவிட்டு அதன் சாவியை காலபைரவரின் பாதத்தில் வைத்துவிட்டு செல்வார்களாம். யார் ஒருவர் தீய எண்ணத்துடன் அந்த சாவியை எடுத்து கோவிலில் ஏதேனும் பொருட்களை திருட நினைக்கிறார்களோ அவர்களை காலபைரவர் தண்டிப்பார் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கால பைரவரை நினைத்து வெற்றிலையை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

தீய சக்திகளை விரட்டியடிக்கும் பரிகாரம்

எப்படி தீமைகளை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களை காலபைரவர் அழிக்கிறாரோ அதேபோல்தான் நம்மை சுற்றி இருக்கக்கூடிய தீய சக்திகளையும் விரட்டி அடிக்க கூடிய தெய்வமாக காலபைரவர் திகழ்கிறார். மேலும் குழந்தைகள் முதற்கொண்டு பெரியவர்கள் வரை தாங்கள் செய்யக்கூடிய காரியங்களில் ஏதேனும் தடைகள் ஏற்பட்டு இருந்தாலும் அந்த தடைகளை நீக்குவதற்கு காலபைரவர் நமக்கு உதவி புரிவார் என்று கூறப்படுகிறது. சரி இப்பொழுது தீய சக்திகளை விரட்டியடிக்கும் பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை அஷ்டமி இரவு செய்ய வேண்டும். இரவு நேரத்தில் எந்த நாளில் அஷ்டமி இருக்கிறதோ அந்த நாளில் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது இன்று ஜனவரி 6ஆம் தேதி இரவு அஷ்டமி திதி என்பது முழுமையாக இருக்கிறது என்பதால் இன்று இரவு இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதற்கு நமக்கு ஒரு வெற்றிலை ஒன்று வேண்டும். அந்த வெற்றிலைக்கு நடுவே மஞ்சள் தூளை சிறிதளவு சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு மேல் 9 மிளகை வைத்து வெற்றிலையை நன்றாக மடித்துக் கொள்ளுங்கள். உங்களுடைய தலையணைக்கு கீழ் வைத்து படுத்து உறங்க வேண்டும். இப்படி வீட்டில் இருக்கக் கூடிய அனைவருமே செய்யலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து வைப்பதன் மூலம் அவர்களின் மந்த புத்தி என்பது நீங்குவதோடு படிப்பில் இருக்கக்கூடிய தடைகளும் விலகும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.

- Advertisement -

தொழிலில் தடைகள் ஏற்பட்டு தொழிலை சிறப்பாக செய்ய முடியவில்லை என்று நினைப்பவர்களுக்கும் அந்த தொழில் சிறந்து விளங்கும். மறுநாள் காலையில் எழுந்து இந்த வெற்றிலை மஞ்சள் மிளகை குளிக்கும் தண்ணீரில் போட்டு குளித்து விட வேண்டும். இதில் இருக்கக்கூடிய வெற்றிலையும் மிளகும் அடியில் தங்கிவிடும். அதை மட்டும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். மஞ்சள் தண்ணீரில் கலந்து விடும்.

இதையும் படிக்கலாமே:கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க அஷ்டமி பரிகாரம்

இந்த முறையில் அஷ்டமி இரவு வெற்றிலையை வைத்து பரிகாரம் செய்யும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகி ஓடும். அந்த தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகளும் விலகும். முழு மனதுடன் செய்து முழுப்பலனையும் பெறுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -