- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க அஷ்டமி பரிகாரம்

கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க அஷ்டமி பரிகாரம்

- Advertisement -

எட்டு திக்குகளுக்கும் அதிபதியாக திகழக்கூடியவரும் காலங்களை தன்னகத்தே கொண்டிருக்கக் கூடியவராகவும் திகழ்பவர்தான் காலபைரவர். அப்படிப்பட்ட காலபைரவருக்கு உரிய திதியாக திகழ்வதுதான் அஷ்டமி திதி. அதிலும் குறிப்பாக வளர்பிறை அஷ்டமி என்பது நம்முடைய செல்வ வளத்தை அதிகரிக்க உதவக்கூடியது என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அஷ்டமி திதி அன்று இரவு ஒரு ரூபாயை வைத்து எப்படி பரிகாரம் செய்தால் நாம் கொடுத்த பணமும் நகையும் நம்மை வந்து சேரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

அஷ்டமி பரிகாரம்

பொதுவாக வளர்பிறை அஷ்டமி சமயத்தில் அஷ்டலட்சுமிகள் அனைவரும் காலபைரவரை வழிபாடு செய்வார்கள் என்றும் அவர்களுடைய சக்திகளை புதுப்பித்துக் கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நாமும் காலபைரவரை வழிபாடு செய்தோம் என்றால் காலபைரவரின் அருளும் அஷ்டலட்சுமிகளின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்றே கூற வேண்டும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த வளர்பிறை அஷ்டமி என்பது இன்று மாலை 6:23க்கு தொடங்கி நாளை மாலை 4:27க்கு நிறைவடைகிறது. இரவு அஷ்டமியாக இன்று இரவே திகழ்கிறது என்பதால் அஷ்டமி இரவில் செய்ய வேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு ரூபாய் நாணயம் வேண்டும். அஷ்ட லட்சுமிகள் என்பதால் எட்டு ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் அஷ்டலட்சுமிகளின் பெயர்கள் நன்றாகவே தெரியும் அல்லவா? அவர்களின் பெயரை கூறி இந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வைக்க வேண்டும். வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. இதை எப்பொழுது செய்ய வேண்டும்? அனைத்து வேலைகளையும் நிறைவு செய்த பிறகு இரவு படுக்கச் செல்வோம் அல்லவா? அப்பொழுது செய்ய வேண்டும்.

ஏதாவது ஒரு நிறத்தில் சுத்தமான துணியை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது ஒரு பிளாஸ்டிக் கவரை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாரிடம் பணத்தை கொடுத்தீர்களோ அந்த பணம் உங்களிடம் திரும்பி வருவது போலும் யாரிடம் நகையை கொடுத்தீர்களோ அந்த நகை திரும்பி வருவது போலும் மனதிற்குள் நினைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொரு ஒரு ரூபாய் நாணயத்தையும் எடுத்து ஒவ்வொரு லட்சுமியின் பெயரை கூறியவாறு நாம் எடுத்து வைத்திருக்கும் துணியிலோ அல்லது கவரிலோ போட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு 8 லட்சுமிகளின் பெயரையும் கூறி 8 நாணயங்களையும் போட்ட பிறகு இதை அப்படியே நன்றாக சுருட்டி நம்முடைய தலையணைக்கு கீழ் வைத்து உறங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு இந்த ஒரு ரூபாய் நாணயங்களை நாம் எந்த இடத்தில் பணத்தை சேர்த்து வைப்போமோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். இயன்றவர்கள் அன்றைய தினம் அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று காலபைரவரை ராகு காலத்தில் வழிபாடு செய்வதும் காலபைரவரின் வாகனமான நாய்க்கு உணவளிப்பதும் நல்ல பலனை தரும்.

இதையும் படிக்கலாமே:தங்கம் சேர வளர்பிறை அஷ்டமி பரிகாரம்

இந்த எளிமையான ஒரு ரூபாய் பரிகாரத்தை முழுமனதோடு இன்று இரவு செய்பவர்களுக்கு அவர்கள் பிறரிடம் கொடுத்த பணமும் நகையும் அவர்களிடமே திரும்ப வந்து சேரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்