- Advertisement -

தேய்பிறை அஷ்டமி திதியில் குளிக்கும் முறை

- Advertisement -

பல வருடங்களுக்கு முன்பாக வாங்கிய கடனுக்கு கூட, இன்றும் சில பேர் வடிகட்டிக் கொண்டிருப்பார்கள். சில கடனை எல்லாம் வாங்கிய நேரம், திருப்பிக் கொடுக்கவே முடியாது. வாங்கிய அசல் தொகைக்கு ஈடாக, வட்டியே கட்டியிருப்போம். ஆனால் அசல் தொகையை திருப்பிக் கொடுத்திருக்க மாட்டோம்.

இப்படி காலம் காலமாக உங்களை தொடர்ந்து வரும் அந்த கடன் சுமையிலிருந்து வெளிவர வேண்டும் என்றால், நாளைய தினம் பைரவரை நினைத்து தேய்பிறை அஷ்டமி திதியில் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பாருங்கள். நீங்கள் வேலைக்கு செல்பவர்கள் ஆக இருக்கலாம், அல்லது வியாபாரம் செய்பவர்களாக இருக்கலாம்.

- Advertisement -

நாளை கோவிலுக்கு சென்று பைரவரை வழிபாடு செய்ய முடியாத சூழ்நிலை இருந்தாலும் சரி, இந்த எளிய பரிகாரம் உங்கள் கடன் சுமையை குறைக்கும். காலை இந்த குளியல் பரிகாரத்தை செய்தவர்கள் மாலை கோவிலுக்கு சென்று பைரவருக்கு விளக்கு போட்டால், இரட்டிப்பு பலன் சொல்லவே வேண்டாம். உங்களுக்கு கடன் தொல்லையே இருக்காது. நீண்ட நாட்களாக உங்களை பின் தொடரும் கடனும் சீக்கிரம் அடையும்.

கடன் தீர பரிகாரம்

நாளைய தினம் நீங்கள் குளிக்கின்ற தண்ணீரில் இந்த பொருளை சேர்த்து குளிங்க. உள்ளங்கைகளில் 3 மிளகு, 3 கல் உப்பு, கொஞ்சமாக புனுகு, இந்த மூன்று பொருட்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். கல்லுப்பில் இருந்து பெருசாக பார்த்து மூன்று கல் உப்பு எடுத்தால் போதும். கால பைரவரே என்னை பிடித்த கடன் பிரச்சனை இன்றிலிருந்து என்னை விட்டு விலக வேண்டும் என்று ஆழ்மனதில் நன்றாக பிரார்த்தனை செய்து, ‘கால பைரவரே துணை’ என்ற மந்திரத்தை 3 முறை சொல்லி, கையில் இருக்கும் பொருட்களை குளிக்கின்ற தண்ணீரில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

பிறகு அந்த குளிக்கின்ற தண்ணீரில் உங்கள் வலது கை ஆள்காட்டி விரலால் ‘ஓம்’ என்ற வார்த்தையை எழுதி விடுங்கள். பிறகு இந்த தண்ணீரில் குளித்துக் கொள்ளலாம். தலைக்கு குளிப்பது சிறப்பான பலனை தரும். முடியாது என்பவர்கள் உடம்புக்கு மட்டும் குளித்துக் கொள்ளுங்கள். ஆண்கள் பெண்கள் இரு பாலரும் இந்த குளியல் முறையை மேற்கொள்ளலாம்.

பச்சை தண்ணீரில் குளித்தாலும் சரி, நீங்கள் சுடுதண்ணீரில் குளித்தாலும் சரி, இந்த பரிகாரத்தை மேற்கொள்ளலாம். மிளகை முழுசாக சேர்ப்பதால் தண்ணீரில் காரம் இருக்காது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். பெரியவர்கள் மட்டும் இந்த தண்ணீரில் குளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு இந்த தண்ணீரில் குளிப்பாட்ட வேண்டாம்.

- Advertisement -

காரணம் கடன் பிரச்சனை என்பது பெரியவர்களுக்கு மட்டும் தானே இருக்கிறது. ஆகவே பெரியவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும். குளித்து முடித்துவிட்டு அந்த குளியல் தண்ணீரில் போட்ட மிளகு இருக்கும் அல்லவா. கடைசியாக அதை எடுத்து வெளியில் கொண்டு வந்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இந்த எளிமையான பரிகாரம் உங்கள் தரித்திரத்தை விளக்கும். கடன் சுமையை குறைக்கும். உங்கள் உடம்பை சுற்றி இருக்கும் ஆராவை தூய்மைப்படுத்தும். நம்மை சுற்றி இருக்கும் எதிர்மறையாற்றல் வேலகினாலே போதும். நமக்கு நடக்க வேண்டிய நல்லது தானாக நடக்கும். முடிந்தால் நாளை மாலை பைரவர் சன்னிதானத்திற்கு சென்று விளக்கு போட்டு வழிபாட்டை செய்ய தவற விடாதீர்கள்.

இதையும் படிக்கலாமே: பணக்காரனாக செய்ய வேண்டிய சனிக்கிழமை பரிகாரம்

உங்களை சுற்றி இருக்கும் கடனை விலக்கி, பணவரவை அதிகரிக்க இந்த எளிமையான பரிகாரம் அனைவருக்கும் பயன்படும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -