- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணக்காரனாக செய்ய வேண்டிய சனிக்கிழமை பரிகாரம்

பணக்காரனாக செய்ய வேண்டிய சனிக்கிழமை பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய ஜாதகத்தில் சரியான கட்டங்களும், கிரகங்களும் அமையாவிடில் எவ்வளவு உழைத்தாலும் அவர்களால் பணக்காரனாக முடியாது என்பது ஜோதிட கூற்று. ஆனால் இந்த எளிய பரிகாரத்தை செய்தால் எப்பேர்ப்பட்ட ஜாதகக்காரரும் குப்பையில் இருந்து கோபுரத்திற்கு ஏறி விடுவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. சனி பகவான் ஆசியோடு சனிக்கிழமையில் பணக்காரனாக செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? என்பது போன்ற தகவல்களை தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின் மூலம் பார்க்க இருக்கிறோம்.

சனி கொடுக்க யாரும் தடுக்க முடியாது, அது போல சனி கெடுத்தாலும் யாரும் ஒன்றும் செய்ய முடியாது. சனி கிரகத்திற்கு இருக்கும் நீதியும், நேர்மையும் மனிதனுக்கு இருந்து விட்டால் அவனை விட பணக்காரனாக யாரால் மாற முடியும்? நீதி தவறாது, நேர்மை தவறாது இருப்பவர்களுக்கு இன்று இல்லாவிட்டாலும் ஒரு நாள் நிச்சயம் அதிர்ஷ்டம் தானாகவே தேடி வரும் என்பது நம்பிக்கை.

- Advertisement -

நீதிநெறி தவறாது, செய்த பாவத்திற்கு உரிய தண்டனையை கொடுக்கும் சனி பகவானிடம் மன்றாடி வேண்டி கேட்டுக் கொள்ளும் பொழுது அவரின் மனம் குளிரும் பொழுது நம் உழைப்பு வீணாவதில்லை! உழைக்கின்ற பணம் மென்மேலும் சேர்ந்து நாம் பணக்காரனாவோம் என்பது விதியாகும். ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் சனி பகவான் சந்நிதிக்கு சென்று கருப்பு வஸ்திரம் சாற்றி, நல்லெண்ணெய் ஊற்றி எள்ளு தீபம் ஏற்றி, கருப்பு உளுந்தை ஏழை எளியவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இதனால் சனி பகவானால் உண்டாகக் கூடிய தோஷங்கள் விலகும், நன்மைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.

சனிக்கிழமையில் வீட்டிலேயே ஒரு மண்பானை ஒன்றை வாங்கி வையுங்கள். அந்த மண்பானையில் பச்சரிசியும், கருப்பு உளுந்தும் சேர்த்து, 101 ரூபாயை காணிக்கையாக வையுங்கள். அதை பூஜை அறையில் வைத்து காலையில் குளித்து முடித்து விட்ட பிறகு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பூஜைகள் செய்த பிறகு, காக்கைக்கு வெள்ளை சாதமும், எள்ளும் கலந்த உணவு வைக்க வேண்டும். பின்னர் மாலை வேளையில் பானையில் இருக்கும் அரிசி, உளுந்து, காணிக்கை ஆகியவற்றை இல்லாத ஏழை, எளியவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இது போல ஒரு கிழமை தவறாது ஒவ்வொரு சனிக்கிழமைகளும் நீங்கள் பானையில் இருக்கும் அரிசி, உளுந்து, காணிக்கையை தானம் செய்து வர செய்த பாவங்களுக்கு எல்லாம் நல்ல பரிகாரமாக அமையும்.

- Advertisement -

தெரிந்தும் தெரியாமலும் மனிதன் செய்த பாவங்களுக்கு பரிகாரத்தை தேடுவது கிடையாது, மேலும் மேலும் பாவத்தை செய்து கொண்டே தான் செல்கிறோம், எனவே ஒவ்வொரு சனிக்கிழமைகளும் இது போல மண்பானையில் இருந்து தானம் செய்யும் பொழுது, சனி பகவான் மனம் குளிர்கிறார். நாம் செய்த பாவங்களை மன்னித்து அருள்கிறார். மேலும் நம்மை பாவம் செய்யாமல் தடுக்கிறார். நாமே நினைத்தாலும் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நம்மால் மற்றவர்களுக்கு பாவத்தை தெரியாமல் கூட செய்ய முடியாது போகும்.

இதையும் படிக்கலாமே:
பண இழப்பு ஏற்படாமல் இருக்க பரிகாரம்

புதிய மண்பானையை வாரா வாரம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு புதிய மண்பானையில் மஞ்சள் தடவி, குங்குமம் வைத்து அலங்கரித்துக் கொள்ளுங்கள். அந்த பானையில் ஒவ்வொரு சனிக்கிழமையிலும் புதிதாக அரிசி, தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்து மற்றும் காணிக்கை வைத்து வழிபட்டு தானம் செய்யுங்கள். அவ்வளவுதான், உங்கள் பாவங்கள் தீர்ந்து, தொடர்ந்து இதை செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றமும், பணக்காரனாகும் வாய்ப்பும் அமையும்.

சற்று முன்