- Advertisement -

கடன் தீர தேய்பிறை சஷ்டி திதி வழிபாடு

பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய மிகப்பெரிய சுமை, கடன் சுமை. இந்த கடன் பாரத்தை தலையில் வைத்து சுமக்கவும் முடியாமல், கீழே இறக்கி வைக்கவும் முடியாமல் நிறைய பேர் கஷ்டப்பட்டு வருகிறார்கள். நிம்மதியாக சாப்பிட முடியாது, நிம்மதியாக தூங்க முடியாது, சந்தோஷமாக இருக்க முடியாது.

எந்த நேரமும் மனதிற்குள் கடன் பற்றிய சிந்தனை ஓடிக் கொண்டே இருக்கும். இதனால் ஆரோக்கிய பிரச்சனையும் வந்துவிடும். நிறைய பேருக்கு கடன் பிரச்சனையால் ஆயுசும் குறைவாகிறது. உங்களுக்கும் தீராத கடன் பிரச்சனை இருக்கிறதா. இன்று தேய்பிறை சஷ்டி திதியில் முருகப்பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்து பாருங்கள். அடுத்த சஷ்டி திதிக்குள் கடன் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கும்.

- Advertisement -

கடன் தீர தேய்பிறை சஷ்டி வழிபாடு

இன்று மாலை சஷ்டி திதியில் உங்கள் வீட்டிலேயே இந்த பரிகாரத்தை செய்யலாம். பூஜை அறையை சுத்தம் செய்து விடுங்கள். பூஜையறையில் இருக்கும் சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் முருகரின் திரு உருவப் படத்திற்கு சந்தனம் குங்குமப்பொட்டு வைத்து, செவ்வரளி பூக்களை கட்டாயம் வாங்கி போடுங்க.

செவ்வரளி பூ வாங்குவதற்கு பணம் காசு பாக்காதீங்க. பத்து ரூபாய் கூட குறைய இருந்தாலும் செவ்வரளி பூவை வாங்கி முருகப்பெருமானுக்கு வைத்து விடுங்கள். சிவப்பு நிறத்தில் சதுர வடிவில் ஒரு துணி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் முருகனை வேண்டி 11 ரூபாயை வைத்து காணிக்கையாக முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு ‘முருகா என் கடனை அடைக்க நீதான் வழியை காட்ட வேண்டும்’ என்று சொல்லுங்கள். இந்த காணிக்கையை முருகப்பெருமானின் பாதங்களில் வைத்து விடுங்கள். முருகருக்கு உங்களால் முடிந்த ஒரு நெய்வேதியம் வைத்துவிட்டு விளக்க ஏற்றி வைத்துவிட்டு,  பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இறுதியாக கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இன்று திங்கட்கிழமை 29.4.2024 தேய்பிறை சஷ்டி திதி இருக்கிறது அல்லவா. இன்று மாலை இந்த வழிபாட்டை முடித்து விடுங்கள். நாளை செவ்வாய்க்கிழமை சரியாக செவ்வாய் ஹோரை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்கு வரும். அப்போது முருகப்பெருமானை வணங்கி விட்டு இந்த முடிச்சை எடுத்துக்கிட்டு உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் முருகர் கோவிலுக்கு போயிட்டு, மனதார வேண்டுதல் வையுங்கள்.

- Advertisement -

அந்த கோவிலில் இருக்கும் முருகப்பெருமானுக்கு இரண்டு விளக்கை போட்டு இந்த முடிச்சை அந்த முருகனின் உண்டியலில் போட்டுவிட்டு வரவேண்டும். முடிச்சை உண்டியலில் போட்டுவிட்டு ‘முருகா என் கடனை தீர்க்க வேண்டிய வேலை உன்னுடையது. முயற்சிகளை நான் மேற்கொள்கின்றேன். எப்படியாவது எனக்கு நல்ல வழி காட்டு என்று சொல்லுங்கள்.

இதையும் படிக்கலாமே: தேய்பிறை சஷ்டியில் சொல்ல வேண்டிய மந்திரம்

கடன் சுமையிலிருந்து நான் வெளிவர வேண்டும் என்று முருகனை முழுசாக நம்பி வழிபாடு செய்து விட்டு வீடு திரும்புங்கள். கடனை அடைப்பதற்கு உண்டான அத்தனை வழியும் கடகடன்னு உங்க கண்ணுக்கு தெரிய ஆரம்பிக்கும். கடனை எல்லாம் சீக்கிரம் அடைத்து விட்டு மன நிம்மதியை பெறுவீர்கள். முழு நம்பிக்கையில் இந்த பரிகாரத்தை செய்தால் முழு கடனும் அடையும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் இன்று இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -