- Advertisement -

பணக்கஷ்டம் தீர தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டிய பொருள்

- Advertisement -

வாஸ்துபடி தென்கிழக்கு மூலையானது சுக்கிர பகவானுக்கு சொந்தமான இடமாக சொல்லப்பட்டுள்ளது. உங்கள் வீட்டில் தீராத பண கஷ்டம் இருக்கிறதா. தீராத கடன் சுமை இருக்கிறதா. பண பிரச்சனையில் இருந்து வெளிவரவும், கடன் சுமையை குறைக்கவும், இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் தாந்திரீக பரிகாரம் நல்லதொரு வழியை காட்டிக் கொடுக்கும். முழு நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.

பண வரவை கொடுக்கும் தென்கிழக்கு மூலை வாஸ்து பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு ஒரு கண்ணாடி பவுல் தேவை. கிழியாத பிரியாணி இலையாக பார்த்து ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த கண்ணாடி பவுல் நிரம்பும் அளவுக்கு பச்சரிசி தேவை. சிறிது குங்குமப்பூ தேவை. பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குல தெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

எடுத்து வைத்திருக்கும் பிரியாணி இலையில், பச்சை நிற பேனாவால் 897 என்று எண்களை எழுதி விடுங்கள். பிறகு அந்த பிரியாணி இலையில் எழுதி வைத்திருக்கும் எண்களுக்கு மேலே மூன்று குங்கும பூக்களை வைத்து அப்படியே அந்த பிரியாணி இலையை கண்ணாடி பௌலில் வைக்கவும். இப்போ இந்த பிரியாணி இலை வெளியில் தெரியாத அளவிற்கு, அந்த கண்ணாடி பவுல் நிரம்ப பச்சரிசியை கொட்டி நிரப்பி விடுங்கள்.

இதை அப்படியே கொண்டு போய் தென்கிழக்கு மூலையில் வைத்து விடுங்கள். 21 நாட்கள் இந்த பொருள் அப்படியே இருக்கட்டும். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றுவீர்கள் அல்லவா. அப்போது ஊதுவத்தியை மட்டும் இந்த கண்ணாடி பவுலுக்கு காண்பித்து மகாலட்சுமியையும் சுக்கிர பகவானையும் நினைத்து உங்களுடைய வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

21 நாட்கள் கழித்து பிரியாணி இலையை நெருப்பில் பொசிக்கி விடுங்கள். மற்ற பொருட்களை எல்லாம் எடுத்து அப்படியே ஒன்றும் இரண்டுமாக அரைத்துக் கொஞ்சம் வெல்லம் சேர்த்து காக்கை குருவிகளுக்கோ, ஈ, எறும்புகளுக்கோ இறையாக போட்டு விடுவோம்.

21 நாட்களுக்கு ஒரு முறை பௌலில் இருக்கும் பொருட்களை கட்டாயம் மாற்றி வைக்க வேண்டும். பழைய பொருட்களை அப்படியே தூசி படிந்து தென்கிழக்கு மூலையில் வைக்கக்கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்கிழக்கு மூலையில் இந்த பொருள் இருக்கும் வரை உங்களுடைய வீட்டை வறுமை அண்டாது. சுக்கிர பகவான் உங்களுக்கு பண பிரச்சனையை கொடுக்க மாட்டார். அந்த சுக்கிர பகவான் விரும்பி வந்து உங்கள் வீட்டிற்குள் அமர்ந்து கொள்வார்.

இதையும் படிக்கலாமே: திருவோண நட்சத்திரத்தில் பெருமாள் வழிபாடு

21 நாள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்தால் உங்கள் பணக்கஷ்டம் நிச்சயம் எதாவது ஒரு ரூபத்தில் தீரும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. மீண்டும் பதிவு செய்து கொள்வோம் நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளவும். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் நூறு சதவிகிதம் பலன் உண்டு.

- Advertisement -
Published by