இன்று தமிழ் மாதத்தின் முதல் திங்கட்கிழமை. இதோடு மட்டும் அல்லாமல், திருவோண நட்சத்திரமும் சேர்ந்து இருக்கிறது. இந்த நாளை பெருமாளுக்கு உரிய நாளாக நாம் கொண்டாடப்பட வேண்டும். பெருமாளை நினைத்து இந்த நாளில் நாம் செய்யக்கூடிய பரிகார முறைகள் நம் பணக்கஷ்டத்தை தீர்க்கும். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்றும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம்.
முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே பெருமாளின் திருவுருவப்படத்திற்கு முன்பாகவும் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம். இந்த பரிகாரத்திற்கு ரொம்பவும் முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள் என்றால் அது பச்சை கற்பூரமும், துளசியும்தான். இந்த இரண்டு பொருட்களையும் வாங்கிக் கொண்டு கூடவே பெருமாளுக்கு அர்ச்சனை செய்ய தேங்காய் பூ பழம் இந்த பொருட்களையும் வாங்கி பெருமாள் கோவிலுக்கு செல்லுங்கள்.
பெருமாளுக்கு துளசி இலைகளால் மாலை கட்டி போட்டு, உங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். கையில் இரண்டு துளசி இலைகள், ஒரு பச்சை கற்பூரத்தை வைத்துக்கொண்டு பெருமாள் கோவிலில் இருக்கும் கொடி மரத்தை 21 முறை வலம் வர வேண்டும்.
இப்படி வலம் வரும் போது, உங்கள் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர வேண்டும் என்று பெருமாளை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். தாயாரையும் கட்டாயம் வழிபாடு செய்ய வேண்டும். இந்த இரண்டு வழிபாட்டையும் முடித்துவிட்டு உள்ளங்கையில் இருக்கும் இரண்டு பொருட்களையும் அப்படியே வீட்டிற்கு கொண்டு வரவும். (பொதுவாகவே பெருமாள் கோவிலுக்கு சென்றால் முதலில் தாயாரை சேவித்து விட்டு, பிறகுதான் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.)
உள்ளங்கைகளில் வைத்திருக்கும் இரண்டு பொருட்களையும் வீட்டு பணப்பெட்டியில் வைக்கவும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு இந்த எளிய பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு நல்லதொரு பலனை கொடுக்கும். இந்த இரண்டு பொருளையும் கைகளில் வைத்துக்கொண்டு கொடிமரத்தை சுற்றும் போது அந்த பெருமாளின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுசாக கிடைத்துவிடும். பெருமாளின் அனுக்கிரகம் வாய்ந்த பொருளாக இந்த பொருட்கள் மாறிவிடும். நீங்கள் கையில் வைத்திருக்கும் பச்சை கற்பூரமும் துளசி இலையும்.
கோவிலுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டிலேயே பெருமாளின் பாதத்தில் இந்த இரண்டு பொருட்களையும் வைத்துவிட்டு, ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை 21 முறை சொல்லி பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு இந்த இரண்டு பொருளையும் எடுத்து பண பட்டியில் வைத்து விடுங்கள். கொஞ்சமாக பச்சை கற்பூரத்தை நுணுக்கி உங்கள் வீட்டில் இருக்கும் பெருமாளது திருவுருவப்படத்தில் நெற்றியிலும் பாதத்திலும் வைக்க வேண்டும். இன்று நீங்கள் மேற்கொள்ளும் இந்த எளிமையான பெருமாள் வழிபாடு உங்கள் பண கஷ்டத்தை எளிதாக குறைத்து விடும்.
இதையும் படிக்கலாமே: கடன் தீர ஆலமர பரிகாரம்
தமிழ் மாதம் பிறந்ததும் வரக்கூடிய முதல் திங்கட்கிழமை தொடர்ந்து பெருமாளை வழிபாடு செய்துவர நிச்சயம் உங்களுடைய வீட்டில் வருமை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறவும்.