- Advertisement -
ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval

சிவராத்திரி அன்று இந்த ராசிக்காரர்கள் இந்த பொருட்களை கொண்டு எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்தால் நிச்சயம் மோட்சம் கிட்டும்.

மேஷம்:

வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்கு நைவேத்தியமாக படைத்து, பால் அபிஷேகம் செய்து பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல நினைத்த காரியம் நிறைவேறும்.

ரிஷபம்:

எம்பெருமானுக்கு தயிரால் அபிஷேகம் செய்து, சக்கரை பொங்கலை நைவேத்தியமாக படைத்தால் வீட்டில் உள்ள பணப்பிரச்சனை தீரும்.

- Advertisement -

மிதுனம்:

எம்பெருமானுக்கு பன்னீர், கரும்புச்சாறு அபிஷேகம் செய்து, வெண்பொங்கல் நைவேத்தியமாக படைத்தால் வீட்டில் அமைதி நிலவும்.

கடகம்:

எம்பெருமானுக்கு சர்க்கரை சேர்த்த பால் கொண்டு அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக வைக்க வேண்டும். மந்தாரை பூவால் சிவபெருமானுக்கு அலங்காரம் செய்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

- Advertisement -

சிம்மம்:

எம்பெருமானுக்கு சந்தனம், பால் இவைகளைக் கொண்டு அபிஷேகம் செய்து, புளிசாதம் நைவேத்தியமாக படைத்தால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும்.

கன்னி:

சுத்தமான நீர், பால் இவைகளை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும். எலுமிச்சை சாதத்தை நைவேத்யமாக படைத்தால் ஆரோக்கியத்தைப் பெறலாம்.

- Advertisement -

துலாம்:

எம்பெருமானுக்கு சுத்தமான பசு மாட்டு பாலால் அபிஷேகம் செய்தால் செல்வச் செழிப்போடு வாழலாம். மிளகு, நெய் சேர்த்த பொங்கலை நைவேதனமாகப் படைக்க வேண்டும்.

விருச்சிகம்:

எம்பெருமானுக்கு சர்க்கரை தேன் கலந்த நீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். சர்க்கரைப் பொங்கலை நைய்வேதியமாக படிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

தனுசு:

எம்பெருமானுக்கு பாலுடன் சிறிதளவு குங்குமப்பூவைக் கலந்து அபிஷேகம் செய்யவேண்டும். ஓம் நமசிவாய மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வாழ்வில் கஷ்டங்கள் தீரும்.

மகரம்:

எம்பெருமானுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். வில்வ பழத்தினை நைவேத்தியமாக படைத்தால் வெற்றி நிச்சயம்.

கும்பம்:

எம்பெருமானுக்கு இளநீர், கடுகு எண்ணெய் இவைகளை கொண்டு அபிஷேகம் செய்வது நன்மை தரும். வெண் பொங்கலை நைவேதியமாக படைத்தால் பணவரவு அதிகரிக்கும்.

மீனம்:

எம்பெருமானுக்கு குங்குமப்பூ கலந்த பாலால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நல்ல முன்னேற்றம் அடையலாம். சக்கரை பொங்கலை நைவேத்தியமாக படைப்பது வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
மலை போல் இருக்கும் கஷ்டம் கூட பனிபோல் விலக, மகா சிவராத்திரி விரதத்தை எப்படி கடைபிடிப்பது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Maha shivaratri abhishekam. Maha shivaratri 2020 in Tamil. Maha shivaratri special Tamil. Maha shivaratri pooja vidhi in Tamil.

- Advertisement -