மலை போல் இருக்கும் கஷ்டம் கூட பனிபோல் விலக, மகா சிவராத்திரி விரதத்தை எப்படி கடைபிடிப்பது?

siva-lingam-abishegam

பல ஆண்டுகள் தவமிருந்து பெற்றாலும் ஓர் இரவு தரும் பலன் சொல்லில் அடங்காதவை என்றே கூறலாம். அந்த அளவிற்கு இன்று மகா சிவராத்திரி நன்னாளில் விரதமிருந்து சிவனை தொழுவதால் ஏராளமான நன்மைகளும், பலன்களும் உண்டாகப் பெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

மகா சிவராத்திரியன்று என்ன செய்யலாம்?
சிவனுக்கு அபிஷேகம் செய்யலாம். சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதன் மூலம் நம் ஆன்மா தூய்மை அடையும். அதுபோல் சிவலிங்கத்திற்கு குங்கும அர்ச்சனை செய்வதால் நல்ல குணங்களையும், பலன்களையும் அருள்வார். நிவேதனம் செய்தல். சிவனுக்கு உகந்த பொருட்களை நிவேதனம் செய்வதாலும் வேண்டிய வரங்களை அருள்வார். நீண்ட ஆயுளும் கிட்டும் என்பது ஐதீகம். சிவாலயங்களில் தீபம் ஏற்றுவதால் செல்வ வளம் பெருகும். விளக்கு போடுவதால் உங்களின் அறிவாற்றல் பெருகும். சிந்தனை சித்தியாகும். வெற்றிலை கொடுப்பது குடும்பத்திற்கு நல்லது. மலை போல் வருகின்ற பிரச்சினைகள் அனைத்தும் பனிபோல் விலகிவிடும். ‘ஓம் நமசிவாய’ என்னும் மந்திரத்திற்கு ஈடு இணை ஏதும் இல்லை.

லிங்கோற்பவ காலம்?
மகா சிவராத்திரியன்று நான்கு ஜாம பூஜையில் கலந்து கொள்வது புண்ணியம் சேர்க்கும். அதில் கலந்து கொள்ள முடியாதவர்கள் லிங்கோற்பவ காலத்தில் வழிபடுவது நல்லது. இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலம் ஈசன் அக்னி வடிவாக காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்நேரம் லிங்கோற்பவ காலம் எனப்படுகிறது.

Siva Lingam

விரதம் இருக்கும் முறை என்ன?
மகா சிவராத்திரி விரதத்தை வீட்டில் அனுஷ்டிக்க நினைப்போர் அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து நீராடி, நல்ல தூய்மையான ஆடை உடுத்தி கொள்ளுங்கள். விரதம் தொடங்கும் முறையாக மஞ்சள் கயிறு ஒன்றை கையில் காப்பு காட்டிக் கொள்ளுங்கள். பின்னர் சுத்தம் செய்யப்பட்ட பூஜை அறையில் சிவ உருவத்தின் முன்னே விளக்கு ஏற்றுங்கள். சிவனுக்கு ஏற்றும் போது மட்டும் எப்போதும் ஒரே விளக்கில் எதிர் எதிரே திரி போட்டு இரண்டு தீபம் ஏற்ற வேண்டும். சிவனுக்கு ஒன்றும், எதிரே இருக்கும் நந்தி தேவருக்கு ஒன்றுமாக ஏற்றுவது நல்லது. பின்னர் அன்று முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். சிவ புராணம், சிவ ஸ்தோத்ரம், சிவ நாமம் உச்சரித்து கொண்டே இருக்க வேண்டும்.

- Advertisement -

Thiyanam

மாலை நேரம் ஆனதும் பூஜையை தொடங்கலாம். 7 மணி அளவில் லிங்கம் இல்லாதவர்கள் படத்திற்கு மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். லிங்கம் வைத்திருப்போர் அபிஷேகம் செய்ய வேண்டும். தாம்பூலத்தில் லிங்கம் வைத்து பால், பன்னீர், மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர் போன்றவற்றால் முறையே அபிஷேகம் செய்யலாம். பின்னர் வில்வ இலைகளை கொண்டு அர்ச்சிக்க வேண்டும். அபிஷேகம் செய்யும் போது ‘சிவாய நம’ அல்லது ‘ஓம் நமசிவாய’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின்னர் நிவேதனமாக தயிர் சாதம், புளி சாதம், தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், காய்கறி கலவை சாதம் என உங்களால் முடிந்த அளவிற்கு செய்து படைக்கலாம். இரவு முழுவதும் உறங்காமல் சிவனை நினைத்து தியானம் செய்வது நல்ல பலன் தரும். மனம் ஒருநிலைபட்டு உள்ளம் தூய்மை அடைய வேண்டும்.

வீட்டில் சாதாரணமாக செய்ய நினைப்போர் மூன்று கால பூஜை செய்யலாம். 12 மணி அளவில் ஒன்று, இறுதியாக பிரம்ம முகூர்த்த நேரமான 4 மணி அளவில் என்று செய்ய வேண்டும். இதில் பிரம்ம முகூர்த்தத்தில் செய்யப்படும் பூஜையானது முக்கியமானது. உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஒவ்வொரு பூஜை நிறைவு பெற்ற பின் பால், பழம் சாப்பிடலாம். கங்கையில் நீராடினாலும், 100 அசுவமேத யாகம் செய்தாலும் கிடைக்காத வரம் மகா சிவராத்திரியன்று உறங்காமல் விழித்திருந்து செய்யும் ஒரு இரவு விரதம் தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
வேண்டினாலும் கிடைக்காத வரம் கூட, தூங்காமல் இருந்தால் கிடைக்கும். மகாசிவராத்திரியின் வரலாறு பற்றி தெரியுமா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Maha shivaratri valipadu Tamil. Maha shivaratri pooja vidhanam. Maha shivaratri viratham irupathu eppadi. Maha shivaratri vratham in Tamil. Maha shivaratri 2020 in Tamil.