- Advertisement -
- Advertisement -

கண்ணுக்கு மை அழகு என்று கூறுவார்கள். ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த கண்ணிற்கு அதன் புருவம் தான் மிகவும் அழகாக திகழ்கிறது. அப்படி அந்த புருவம் அழகாக திகழ வேண்டும் என்றால் அந்த புருவத்தில் இருக்கக் கூடிய முடிகள் நன்றாக அடர்த்தியாக இருக்க வேண்டும். அப்படியே அடர்த்தியாக இருக்கும் புருவம் தான் அழகாக இருக்கும். ஆனால் அந்த முடியை ட்ரிம் செய்து நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றார் போல் வைத்துக் கொள்ள முடியும் என்று இன்றைய தலைமுறையினர் நினைக்கிறார்கள்.

புருவ முடியை ட்ரிம் பண்ண கூடாது என்று அறிவியல் ரீதியாக கூறப்பட்டாலும் இன்றைய காலத்தில் இருக்கும் அனைவரும் அந்த புருவ முடியை ட்ரிம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அழகு குறிப்பு குறித்த பதிவில் புருவமுடி அடர்த்தியாக வளர செய்யக்கூடிய ஒரு எளிய சீரமை பற்றி தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

சிலருக்கு புருவத்தில் மிகவும் அடர்த்தியாக முடிகள் அதிகமாக இருக்கும். இன்னும் சிலருக்கு சாதாரணமாக இருக்கும். இன்னும் சிலர் இருக்கிறார்கள் அவர்களுக்கு புருவம் இருப்பதே தெரியாது. அப்படிப்பட்டவர்கள் புருவம் இருப்பதை காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மை தடவி புருவம் போல் உருவகப்படுத்திக் கொள்வார்கள்.

அன்றைய காலத்தில் உபயோகப்படுத்திய மை நம்முடைய கண்களுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய இயற்கையிலேயே உருவாக்கப்பட்ட மையாகத்தான் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் அப்படி கிடையாது. அதில் என்னென்ன கெமிக்கல்கள் சேர்ந்திருக்கிறது என்பதே தெரியாமல் பலரும் அதை வாங்கி பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள்.

- Advertisement -

புருவத்தில் இருக்கக்கூடிய முடியை அடர்த்தியாக வளர செய்வதற்கு நாம் மிகவும் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய மூன்றே மூன்று பொருட்களை வைத்து சீரம் தயார் செய்து தினமும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் புருவத்தில் தடவி விட்டு படுத்தாலே போதும். ஒரு மாதத்தில் புருவ முடி அடர்த்தியாக வளர்ந்து இருக்கும்.

முதலில் இதற்கு ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு கற்றாழை ஜெல்லை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ஸ்பூன் அளவு விளக்கெண்ணெய், ஒரு ஸ்பூன் அளவு தேங்காய் எண்ணெய் இவற்றை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் சீரம் தயாராகிவிட்டது. இந்த சீரத்தை நாம் அப்படியே கையில் தொட்டு நம் புருவத்தில் தடவிக் கொள்ளலாம்.

- Advertisement -

அப்படி கையில் தொட்டு தடவ விருப்பம் இல்லாதவர்கள் பட்ஸ் உபயோகப்படுத்தியும் புருவத்தில் தடவிக் கொள்ளலாம். இரவு படுக்கச் செல்வதற்கு முன் இந்த முறையில் தடவி விட்டு உறங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து எப்பொழுதும் போல் தங்கள் முகத்தை கழுவிக் கொள்ளலாம்.

இதில் நாம் சேர்த்துள்ள இந்த மூன்று பொருட்களும் இயற்கையிலேயே கிடைக்கக்கூடிய பொருட்களாக தான் திகழ்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு பொருளும் நம்முடைய சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கக் கூடிய பொருட்களாக திகழ்கிறது.

ஒரு இடத்தில் முடி வளரவில்லை என்றால் அந்த முடியின் வேர்க்கால்கள் வரும் அந்த துளையானது அடைக்கப்பட்டு இருக்கலாம். அந்த சருமத்துளைகளில் இருக்கக்கூடிய அடைப்புகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் அங்கு இருக்கக்கூடிய முடியின் வேர்க்கால்கள் தூண்டப்பட்டு முடி வளர ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்

இயற்கையாக கிடைக்கக்கூடிய இந்த மாதிரி பொருட்களை நாம் நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் நம்முடைய சருமத்தை மிகவும் ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ள முடியும்.

- Advertisement -