முடி வளர்ச்சியை அதிகரிக்கும் உணவுப்பொருட்கள்

healthy hair food
- Advertisement -

ஆரோக்கியமான தலைமுடி என்பது ஆரோக்கியமான உடலுக்கு ஒரு உதாரணமாக திகழ்கிறது. என்னதான் நாம் தலைக்கு தனியாக கவனம் செலுத்தினாலும் உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு எந்தெந்த உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டும் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

நம்முடைய தலைமுடி உதிராமல் அடர்த்தியாக வளர வேண்டும் என்பதற்காக நாம் தலைக்கு எண்ணெய் தேய்ப்போம். ஹேர் மாஸ்க் போடுவோம். ஹேர் பேக் போடுவோம். அதையும் தவிர்த்து இன்னும் சிலரோ மருத்துவரிடம் சென்று மருந்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். பியூட்டி பார்லர் சென்று சிகிச்சைகளை மேற்கொள்வார்கள். இவை அனைத்தையும் செய்தாலும் பலருக்கு முடி வளர்ச்சி என்பது ஏற்படாது. அதற்கு காரணம் அவர்கள் உட்கொள்ளும் உணவு தான்.

- Advertisement -

முடி வளர்ச்சியை அதிகரிக்க கூடிய உணவுகள்

பசலை கீரை

எந்த வகையான பசலைக்கீரையாக இருந்தாலும் பரவாயில்லை. பசலைக்கீரையில் ஒருவித வளவளப்புத் தன்மை இருக்கும். இந்த பசலைக்கீரையை நாம் உணவாக உட்கொள்ளும் பொழுது நம் தலை முடிக்கு தேவையான ஆரோக்கியமான சத்துக்களை அது தருகிறது. இந்த பசலைக் கீரையை நாம் பொரியலாக செய்து சாப்பிடாமல் வெங்காயம் தக்காளி சிறு பருப்பு இவற்றை சேர்த்து கடைசலாக செய்து சாப்பிடுவதன் மூலமே முழுமையான பலனை நம்மால் பெற முடியும். வாரத்திற்கு மூன்று முறை யாவது இந்த பசலைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

வாழைப்பூ

பெண்களுக்கு மிகவும் அற்புதமான வரப்பிரசாதமாக திகழக்கூடிய பூ என்றால் அது வாழைப்பூ தான். வாழைப்பூ உடலில் இருக்கக்கூடிய ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளை குறைக்க உதவுகிறது. அது மட்டுமல்லாமல் எந்த ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்கிறதோ அந்தப் பெண்ணின் முடியும் ஆரோக்கியமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கர்ப்பப்பையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவக்கூடிய மிகவும் முக்கியமான இன்றியமையாத பொருளாக தான் வாழைப்பூ திகழ்கிறது.

- Advertisement -

பழைய சாதம்

உடல் சூட்டினால் ஏற்படக்கூடிய முடி உதிர்வை தடுப்பதற்கு நாம் தினமும் காலையில் பழைய சாதத்தை சாப்பிட வேண்டும். இந்த பழைய சாதத்தை நாம் தயார் செய்வதற்கு குக்கரில் வைத்த சாதத்தை உபயோகப்படுத்தக்கூடாது. பானையில் வடிக்கும் சாதத்தில் முதல் நாள் இரவே தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் அதை கரைத்து குடிப்பதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய சூடு குறைய ஆரம்பிக்கும். இப்படி சூடு குறைவதால் சூட்டினால் ஏற்படக்கூடிய முடி உதிர்தல் என்பது நிற்கும்.

இளநீர்

தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளநீரை அருந்துவதன் மூலம் உடல் சூடு தணிக்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கிறது. மேலும் பெண்களுக்கு வாழைப்பூ எப்படி வரப்பிரசாதமான ஒரு உணவுப்பொருளோ அதேபோல் ஆண்களுக்கு இளநீர் என்பது மிகவும் இன்றியமையாத ஒரு முக்கியமான பொருளாக கருதப்படுகிறது.

நீர் காய்கறிகள்

பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர் காய்கறிகளை நம்முடைய உணவில் நாம் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி சேர்ப்பதன் மூலம் உடலில் இருக்கக்கூடிய தேவையில்லாத கழிவுகள் நீங்குவதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு தேவையான நீர் சத்துகளும் கிடைக்கிறது. இதனாலும் நம்முடைய முடி வளர்ச்சி என்பது அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: 20 நிமிடத்தில் பளிச்சிடும் முகம்

என்னென்ன பக்குவங்களை முடிக்கு பார்த்தாலும் முடி வளரவே இல்லை என்று வருத்தப்படுபவர்கள், மேற் சொன்ன இந்த ஐந்து உணவுப் பொருட்களை தங்களுடைய அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்டிப்பான முறையில் அவர்களின் முடி வளர்ச்சி என்பது அதிகரிக்கும்.

- Advertisement -