- Advertisement -

மனக்கவலை நீங்க திங்கட்கிழமை பரிகாரம்

- Advertisement -

பணம் இருக்கிறதோ இல்லையோ, மன கவலை இல்லாமல் வாழ்ந்தால் போதும். வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும். மனக்கவலை நமக்குள் வந்து விட்டால், அடுத்தடுத்து ஆரோக்கியம் கெட்டுப் போகும். தூக்கம் கெட்டுப் போகும். குடும்பத்தில் சந்தோஷம் நிலை குலைந்து போகும். வாழ்க்கை நரகமாகும். என்ன நடந்தாலும் சரி, மனதில் கவலை மட்டும் வந்து உட்காரவே கூடாது. அதற்கு ஆன்மிக ரீதியாக என்ன செய்வது? மனோகாரகன் சந்திரனுக்கு உரிய ஒரு சில எளிமையான பரிகாரம் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் உங்களுக்காக.

திங்கட்கிழமை என்றாலே அது சந்திர பகவானுக்கு உரிய கிழமை .சிவபெருமானுக்கு உரிய நாள். திங்களை தன் தலையில் சூடி வைத்திருக்கும் சிவபெருமான் வழிபாட மனக் கவலையை நீக்கும். இந்த நாளில் பச்சரிசி வெல்லம் தானம் செய்ய வேண்டும். பச்சரிசி சந்திர பகவானுக்கு உரிய தானியம். அவ்வளவு வசதி எங்களிடம் இல்லை. ஒரு கைப்பிடி பச்சரிசி மாவு, சிறிதளவு வெல்லம் கலந்து இந்த பொடியை ஒரு டப்பாவில் கொட்டி எடுத்து செல்லுங்கள்.

- Advertisement -

வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவபெருமான் கோவிலுக்கு சென்று, கோவிலில் இருக்கும் மரத்தடியில் இந்த பொடியை தூவி விட்டு வர வேண்டும். நூறு எறும்புகள் சாப்பிட்டால் உங்களுடைய மன கவலைகள் தீரும். திங்கட்கிழமை இதை மறக்காம செய்து விடுங்கள். மனக்கவலை என்பதே சொல்லப் போனால் வரவே வராது. மனம் எப்போதும் நிம்மதியாக இருக்க இந்த ஒரு பரிகாரம் போதும்.

கோவிலில் இருந்து வீடு திரும்பும் போது உங்கள் வீட்டிற்கு சமையலுக்கு தேவையான அரிசி, பச்சரிசியாக வாங்குவது சிறப்பு. உங்கள் வீட்டில் புழுங்கல் அரிசி தான் பயன்படுத்துவீர்கள் என்றால், 1/2 கிலோ புழுங்கல் அரிசி பணம் கொடுத்து, மளிகை கடையில் இருந்து வாங்கி வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள். மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். மனக்குழப்பங்கள் தீரும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உங்கள் வீட்டு பக்கத்தில் ஏதாவது சின்ன கோவில் இருக்கிறது. அந்த கோவிலில் சர்க்கரை பொங்கல் பிரசாதமாக செய்ய, பச்சரிசி வெல்லம் உங்களால் வாங்கி தர முடியும் என்றால் வாங்கி, உங்கள் கையால் மாதத்தில் ஒரு திங்கட்கிழமை அன்று தானம் கொடுக்க, பெரிய அளவில் இருக்கும் குழப்பங்கள் சரியாகும். இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு என்றே தெரியவில்லை, யோசித்து யோசித்து மண்டை காய்ந்து போனதுதான் மிச்சம் என்று, சில குழப்பங்கள் நிச்சயம் இருக்கும். குடும்பத்தில் இருக்கும் அந்த குழப்பத்தை தீர்த்துக் கொள்ள இந்த பரிகாரத்தை செய்யலாம்.

மனக்குழப்பங்கள் தீர திங்கட்கிழமையில் விநாயகர் வழிபாட்டையும் செய்யலாம். விநாயகருக்கு அருகம்புல் வாங்கி கொடுத்து, விநாயகருக்கு விளக்கு போட்டு, விநாயகரை மூன்று முறை வலம் வந்து, நமஸ்காரம் செய்து சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீடு திரும்பும் போது உங்கள் கையால் இரண்டு வாழைப்பழம் வாங்கி, பசு மாட்டிற்கு சாப்பிட கொடுத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணம் அதிக அளவில் சேர தாந்திரீக பரிகாரம்

இதன் மூலம் வேலை சம்பந்தப்பட்ட குழப்பங்கள் தீரும். வீடு சம்பந்தப்பட்ட குழப்பங்களும் தீரும். இத்தனை ஆன்மீகம் சார்ந்த விஷயங்களையும் ஒருவரால் நிச்சயம் மொத்தமாக செய்ய முடியாது. வாரம் தோறும் வரக்கூடிய திங்கட்கிழமையில் ஒவ்வொரு பரிகாரமாக உங்களால் எது முடியுமோ, அதை செய்து கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த நல்லது நடக்கும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -