- Advertisement -
- Advertisement -

ஒருவர் நன்றாக இருந்தால் அவர்களை சுற்றி இருப்பவர்கள் பொறாமையுடனும், வயிற்றெரிச்சலுடனும் சொல்லாலும், செயலாலும், மனதாலும் ஒன்றை நினைத்து விட்டால் அது திருஷ்டியாக மாறுகிறது. ஊர் கண் பொல்லாதது என்பார்கள். ஒருவருடைய கண் போல், மற்றவர்களுடைய கண் இருக்காது என்பார்கள். எல்லோரும் நம்மை ஒரே மாதிரியாக நினைக்க முடியாது.

இந்த திருஷ்டிகள் ஒருவருடைய நிலையில் தடங்கல்களையும், அசம்பாவிதங்களையும், நோய்களையும், நஷ்டங்களையும் ஏற்படுத்தும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. இதிலிருந்து விடுபட சில எளிய பரிகாரங்களை பாரம்பரியமாக நம் முன்னோர்கள் செய்து வருவது வழக்கம். அந்த வகையில் கிராம்பை கொண்டு பொல்லாத கண் திருஷ்டிகளை எப்படி அகற்றுவது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் இந்த பதிவில் தொடர்ந்து காண இருக்கிறோம்.

- Advertisement -

கண் திருஷ்டி தோஷங்களை போக்குவதில் முதலிடம் வகிப்பது எலுமிச்சை. எலுமிச்சையும், பச்சை மிளகாயும், கரித்துண்டுடன் சேர்த்து இரும்பு துண்டு ஒன்றுடன், கருப்பு கயிற்றினால் கட்டி தொங்க விட்டால் சகல விதமான கண் திருஷ்டி தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம். இதை சாதாரணமாக எல்லோருடைய வீடுகளிலும் செய்யலாம். கடைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் போன்ற தொழில் செய்யும் மிகப்பெரிய இடங்களில் பூசணிக்காய், தேங்காய் போன்றவற்றை அமாவாசை தோறும் திருஷ்டி கழித்து சுற்றி போடுவார்கள். ஒவ்வொரு அமாவாசை தவறாமல் இதை செய்வதால் தொழில் சிறப்பாக இருக்கும். தீய சக்திகள், திருஷ்டிகள் எதுவும் அண்டாது.

வீட்டில் சிறு குழந்தைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் கிழக்கு நோக்கி அமர வைத்து உப்பு, வற்றல், கடுகு, கற்பூரம் ஆகியவற்றை கையில் வைத்து திருஷ்டி கழித்து நெருப்பில் போடலாம். ஆனால் ஒருவருடைய வளர்ச்சியை கண்டு பொறாமை மற்றும் வயிற்று எரிச்சல் படுபவர்கள் மூலம் வரக்கூடிய திருஷ்டிகளை அகற்றுவதற்கு இவற்றை விட சிறந்த பரிகாரம் கிராம்பு செய்யும்.

- Advertisement -

சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில் வீட்டில் அனைவரும் இருக்கும் பொழுது சாம்பிராணி காண்பிக்கும் தூப காலில் இரண்டு பெரிய கற்பூர கட்டியை வைத்து எரித்து அதனுடன் உங்கள் வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கை ஏற்ப கிராம்புகளை போட்டு எரிக்க வேண்டும். இரண்டு பேர் இருந்தால் இரண்டு கிராம்புகள் போடுங்கள். நான்கு பேர் இருந்தால் நான்கு கிராம்புகளை போடுங்கள். கிராம்பு எரியும் பொழுது வரக்கூடிய புகையை வீட்டில் எல்லா மூலை, முடுக்குகளிலும் காண்பிக்க வேண்டும். இவ்வாறு காண்பிக்கும் பொழுது தேவையற்ற நஷ்டங்கள், பிணிகள், திருஷ்டியால் வரக்கூடிய தோஷங்கள், சங்கடங்கள் வராது தடுக்கலாம்.

இதையும் படிக்கலாமே:
தை அமாவாசை சோடசகலை நேரம்

நமக்கு திருஷ்டி இருக்கிறதோ, இல்லையோ நாம் பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டே இருக்கிறோம் என்றாலே இது போன்ற பரிகாரங்களை செய்து கொள்வது குடும்பத்திற்கு நல்லது. எதையும் மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விடாமல், சிலவற்றை நம்பிக்கையுடன் செய்யும் பொழுது நமக்கே ஆத்ம திருப்தி கிடைக்கும். மாத்திரை போட்டு அரைமணி நேரம் ஆனால் தான் அது தன் வேலையை செய்யும், ஆனால் போட்ட உடனே சரியானது போல பொய்யான ஒரு பிம்பம் நமக்குள் ஏற்படும். அது போலத் தான் பரிகாரங்களும்! நம்பிக்கையுடன் செய்யும் பொழுது அதன் பலனையும் அனுபவிக்கிறோம்.

- Advertisement -