மேஷம்
மேஷராசி அன்பர்களே! வருமானம் திருப்திகரமாக இருக்கும். ஆனாலும், திடீர் செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு உணர்வு மறைந்து, இணக்கமான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படக்கூடும். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு விலகும்.
அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு இந்த வாரம் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வியாபாரத்தை முன்னிட்ட கடன்கள் வாங்குவதைத் தவிர்க்கவும். பாக்கித் தொகை வசூலாவதில் தாமதம் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் குறைவாகவே கிடைக்கும். வருமானம் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். நண்பர்களுடன் பொழுது போக்குவதை குறைத்துக்கொண்டு படிப்பில் கவனமாக ஈடுபடுவது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சில சிரமங்கள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம் இது.
இதையும் படிக்கலாமே:
மேஷ ராசி பொதுவான குணங்கள்
ரிஷபம்
அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனாலும், அதற்கேற்ற சலுகைகளும் கிடைக்கும் என்பதால் உற்சாகமாகப் பணிபுரிவீர்கள். சக பணியாளர்கள் உங்கள் பணிகளுக்கு உதவுவார்கள்.
வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளித்துவிடுவீர்கள். லாபமும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாக முடியும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் சிரமம் இருக்காது. வருமானமும் நல்லபடியே உள்ளது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கும் என்பதால் சிரமம் எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படுகிறது.
மிதுனம்
அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சிலருக்கு பணியின் காரணமாக வெளி மாநிலங்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். அதனால் நன்மையே உண்டாகும்.
வியாபாரத்தில் பற்று வரவு நல்லபடியே இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் இந்த வாரம் ஈடுபடலாம். பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.
கலைத்துறையினருக்கு கடினமான முயற்சிக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். வருமானமும் ஓரளவே இருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். பாடங்களை நன்றாகப் படித்து ஆசிரியரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
கடகம்
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு சிறிய அளவில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது.
கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.வருமானமும் திருப்தி தருவதாக இருக்கும்.
மாணவ மாணவியர்க்கு இதுவரை இருந்து வந்த மந்தமான போக்கு மாறி, படிப்பில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான பணம் கிடைப்பதால், குடும்ப நிர்வாகத்தில் சிரமம் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.
சிம்மம்
அலுவலகத்தில் உங்கள் யோசனைகள் பாராட்டுப் பெறுவதுடன், மேலதிகாரிகளின் ஆதரவையும் தங்களுக்குப் பெற்றுத் தரும். அதன் காரணமாக சில சலுகைகளும் கிடைக்கும்.
வியாபாரத்தில் லாபம் சுமாராகவே இருக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளை இந்த வாரம் மேற்கொள்ளலாம்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் வாய்ப்புகள் நல்லபடியே கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளைக் கேட்பது நல்லது.
மாணவ மாணவியர்க்கு மனதில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும் என்பதால், படிப்பில் கவனம் குறையக்கூடும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பிரச்னைகள் எதுவும் இருக்காது. பண வரவும் திருப்தியாகவே இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் மகிழ்ச்சியான நிலையே காணப்படும்.
கன்னி
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் உடலும் மனமும் சோர்வுக்கும் படபடப்புக்கும் ஆளாகக் கூடும். அதிகாரிகளிடமும் சக பணியாளர்களிடமும் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
வியாபாரத்தில் பற்று வரவு சுமாராகத்தான் இருக்கும். புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். சக வியாபாரிகளையும் பங்குதாரர்களையும் அனுசரித்துச் செல்வது நல்லது.
கலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் சிறு சிறு தடைகள் உண்டாகும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் அறிவுரைகள் எதிர்காலத்துக்கு உதவுவதாக இருக்கும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களின் பாராட்டுகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பணவரவு போதுமான அளவுக்கு இருந்தாலும் மனதில் சிறு சிறு சலனங்கள் உண்டாகும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு வேலைச் சுமை அதிகரித்தாலும், சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக காணப்படுவீர்கள்.
துலாம்
அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும். உங்களுக்கான வேலைகளைக் குறித்த நேரத்தில் சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும் என்பதால், புதிய முதலீடு செய்வதற்கும், பழைய கடன்களைத் தீர்ப்பதற்கும் முடியும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படும். வருமானமும் எதிர்பார்த்தபடி இருக்காது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். இதனால் ஆசிரியர்களின் பாராட்டுகள் கிடைக்கும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரைகளுக்கு போதுமான பணவரவு இருக்கும் என்பதால், மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:
துலாம் ராசி பொதுவான குணங்கள்
விருச்சிகம்
இதுவரை அலுவலகத்தில் இருந்து வந்த இறுக்கமான சூழ்நிலை மாறி, உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பார்த்து தடைப்பட்ட பதவிஉயர்வு, ஊதியஉயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும்.
வியாபாரத்தில் பற்று – வரவு சுமாராகத்தான் இருக்கும். வரவேண்டிய பாக்கிப் பணத்தை போராடித்தான் வசூலிக்கவேண்டியிருக்கும்.
கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் வாய்ப்புகள் கிடைப்பதற்கு கடினமாக முயற்சி செய்யவேண்டும். வயதில் மூத்த கலைஞர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பாராட்டுகளையும் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தனுசு
அலுவலகத்தில் பணி செய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும் சலுகைகளும் கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் சக வியாபாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. பற்று – வரவு சுமாராகத்தான் இருக்கும். வேலையாள்களால் சிறு சிறு சங்கடங்கள் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்தபடியே நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வருமானத்துக்கும் குறைவிருக்காது. ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும்.
மாணவ மாணவியர்க்கு மனதில் சிறு சிறு சலனங்கள் ஏற்பட்டாலும், அவற்றை ஒதுக்கித் தள்ளி, படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரமாக இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாகும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
மகரம்
அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஒரு சிலருக்கு மட்டும் வேலையில் இட மாற்றம் ஏற்படவும், அதன் காரணமாக தற்காலிகமாக குடும்பத்தை விட்டு பிரிந்திருக்கக்கூடிய நிலையும் ஏற்படும்.
வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விடவும் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பிரச்னைகள் எதுவும் இல்லை. அதே நேரம் தங்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற்று ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சந்தோஷம் தரும் வாரம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால், படபடப்பாகக் காணப்படுவீர்கள். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையும் நிதானமும் மிகவும் அவசியம்.
வியாபாரத்தில் விற்பனை நல்லபடியே காணப்படுவதுடன், லாபமும் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளை அனுசரித்து நடந்துகொள்வது நல்லது.
கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகளும் தாமதமும் ஏற்படக்கூடும். சக கலைஞர்களிடம் பேசும்போது பொறுமை அவசியம். மூத்த கலைஞர்களின் ஆலோசனை உங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.
மாணவ மாணவியர்க்கு அடிக்கடி மனச்சோர்வு ஏற்பட்டு படிப்பில் ஆர்வம் குறையக்கூடும். ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் அறிவுரை உங்கள் சோர்வை அகற்றும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சற்று சிரமமான வாரமாகவே இருக்கும். விருந்தினர் வருகையால் அதிகப்படியான செலவுகள் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.
மீனம்
அலுவலகத்தில் இதுவரை எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை இப்போது எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும். ஆனாலும் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் பிரச்னை எதுவும் இருக்காது.
கலைத்துறையை சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் எதிர்பார்த்தபடியே கிடைக்கும். பணவரவும் கணிசமாக அதிகரிக்கும். சக கலைஞர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும்.
மாணவ மாணவியர்க்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். ஆனாலும், உடல் நலனில் சிறுசிறு பாதிப்புகள் வரக்கூடும் என்பதால் கவனமாக இருக்கவும்.
குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு தேவையான அளவுக்கு பணவரவு இருப்பதால் சந்தோஷமான வாரம் என்றே சொல்லலாம். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான நிலையே காணப்படும்.
வார ராசி பலன், மாத ராசி, தின பலன் மற்றும் ஜோதிடம் சம்மந்தமான பல்வேறு தகவல்கள் மற்றும் ஆன்மீக தகவல்களை பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.