- Advertisement -
வார பலன் | Vara rasi palangal

இந்த வார ராசி பலன் – மே 20 முதல் 26 வரை

மேஷம்

பணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.வேலையின் காரணமாக குடும்பத்தை தற்காலிகமாக பிரியவேண்டிய சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். வியாபாரத்தில் வங்கிக் கடன் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.

- Advertisement -

ரிஷபம்

திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களால் உங்களுக்கு பொருளாதார வரவு உண்டாகும். உறவினர்களின் வீடு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். வீட்டு பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுகள் செல்லும் யோகமும் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்

குடும்ப பொருளாதார நிலை நிறைவாக இருக்கும். பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள் தொலைதூர பயணங்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.பிரிந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் மீண்டும் வந்து உறவு கொண்டாடுவர். பணியிடங்களில் சக பணியாளர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.வியாபாரம், தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் லாபங்களை தரும். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களினால் சிறந்த ஆதாயம் அடைவீர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் குடும்பத்தினர் அவர்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள்.

- Advertisement -

கடகம்

உங்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உற்றார், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திருமணம், புது வீடு புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் காலம் இது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.புதிய தொழில், வியாபார முயற்சிகளை சற்று ஓதி வைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருளும், புகழும் ஏற்படுத்தும் வகையில் வாய்ப்புகள் அமையும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் உண்டாகும்.

Numerology calculator

சிம்மம்

குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. கணவன் மனைவிகிடைக்கே கருத்து வேறுபாடுகள் எழலாம். குழந்தைகள் வழியில் ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் மட்டுமே இருக்கும். கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே நல்ல வாய்ப்புகளை பெற முடியும். மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.

கன்னி

அதிகமான வருமானம் இருக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். வாரிசுகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் சிலருக்கு உரசல்கள் ஏற்படலாம். தொலைதூர புனிதத் தலங்களைத் தரிசிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். தொழில், வியாபாரங்களை பெருக்க வங்கி கடனும் கிடைக்கும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகளும், நற்பெயரும் ஏற்படும்.மாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால் சிறந்த வெற்றிகளை பெறலாம்.

துலாம்

பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். உடல் நலம் நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாது. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஊழியயர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். குடும்ப பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இந்த வாரம் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.

Rasi calculator

விருச்சிகம்

மனதில் குழப்ப நிலை இருக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் பாடாக இருக்கும். உறவினர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். பணியிடங்களில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுப காரியங்களுக்கான சுப செல்வுகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

தனுசு

எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெரும். விவசாய தொழில் மேற்கொள்பவர்கள் நல்ல லாபங்களை அடைந்து கடன்களை அடைத்து முடிப்பார்கள். மிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாரமாக இந்த வரம் இருக்கும்.

மகரம்

வருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிக்கப்படக்கூடும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். வீட்டில் மங்கல நடைபெறுவதற்கு வாய்ப்பு அதிகமாகும்.வேலைபளு அதிகரிக்கும். பணியிடங்களில் எல்லோரிடமும் இணக்கமான பழக்கம் வைத்து கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும். என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.பெண்களுக்கு மனதில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்டும்.

கும்பம்

உங்களின் நீண்ட நாள் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். உடல்நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும்.

மீனம்

உடலும் மனமும் உற்சாகத்துடன் இருக்கும். எதையும் சமாளிக்கும் மனோதிடம் உண்டாகும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மருத்துவ செலவு ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புது வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைக்கும் அமைப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். கலைஞர்கள் பொருள், புகழ் போன்றவற்றை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும்.தாமதித்து வந்த திருமண முயற்சிகள் வெற்றி பெரும். உத்தியோகிஸ்தர்களுக்கு அவர்கள் விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவார்கள்.

மாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -