
சில பொருட்களை எல்லாம் பத்திரமாக தான் வைத்திருப்போம். ஆனால் வைத்த இடத்தில் அந்த பொருள் இருக்காது. நம்மை அறியாமலேயே சில பொருட்களை, ஒரு சில சமயங்களில் தொலைத்து விட்டு தேடுவோம். அதிலும் குறிப்பாக தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களைக் கூட சில பேர் துளைத்து விடுவார்கள்.
பிறகு வீடு முழுவதும் தலைகீழாக புரட்டிப் போட்டு தேடினாலும் அந்த பொருள் கிடைக்காது. சில பேர் தங்களுடைய பைக் கார் போன்ற பொருட்களையும் தொலைத்து விடுவார்கள். போலீஸ்க்கேஸ் கொடுத்தும் அந்தப் பொருள் மீண்டும் கிடைக்காமல் கஷ்டப்படுவார்கள். சிலர் மனதிற்கு பிடித்த பொருளை தொலைத்து விட்டு கஷ்டப்பட்டு கொண்டிருப்பார்கள்.
இப்படி தொலைந்ததை மீண்டும் கண்டுபிடிக்கவும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்களுடைய பொருளை அடுத்தவர்கள் திருடி விட்டார்கள் என்ற சூழ்நிலை இருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயம் தொலைந்து போன பொருள் மீண்டும் கிடைக்கும்.
முதல் பரிகாரம் ஒரு ஸ்விட்ச் வோர்டு. காலையில் தூங்கி எழுந்தவுடன் மனது எந்த கவலையும் பற்றி யோசிக்காமல், தெளிவாக இருக்கும் அல்லவா. அந்த சமயத்தில் உங்களுடைய பொருள் மீண்டும் கிடைக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இந்த வார்த்தையை சொல்லுங்கள். ‘crystal reach’ இதுதான் அந்த வார்த்தை.
தொலைந்த பொருள் மீண்டும் என் கைக்கு வர வேண்டும் என்று வேண்டிக் கொண்டு ‘க்றிஸ்டல் ரீச்’ என்ற வார்த்தையை சொல்லுங்கள். இத்தனை முறைதான் இந்த வார்த்தையை சொல்ல வேண்டும் என்ற எந்த கணக்கும் கிடையாது. 10 முறை, 20 முறை எத்தனை முறை வேண்டுமென்றாலும் சொல்லிவிட்டு தொலைந்த பொருள் சீக்கிரம் கிடைக்க வேண்டும் என்று பிரபஞ்சத்திடம் வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் இந்த வார்த்தையை சொல்லும் போது நிச்சயமாக நீங்கள் தொலைத்த பொருளை திரும்பவும் மீட்டெடுக்கலாம் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு பரிகாரமாக இருந்தாலும், இன்னொரு பரிகாரத்தையும் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இது முழுக்க முழுக்க ஆன்மீகம் ரீதியான பரிகாரம்.
பூஜையறையில் ஒரு சிவப்பு துணியில், 1 தேங்காயை வைத்து, 1 ரூபாய் நாணயத்தை வைத்து, கட்டி விடுங்கள். இந்த முடிச்சை பூஜை அறையிலேயே வைத்து, அனுமனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளவும். தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை வையுங்கள். இப்படி செய்தால் 3 நாட்களில் நீங்கள் தொலைத்த பொருள் மீண்டும் உங்கள் கையை வந்து சேரும் என்பது நம்பிக்கை.
3 நாட்களுக்குப் பிறகு உங்களுடைய தொலைந்த பொருள் கிடைக்கவில்லை என்றால், இந்த தேங்காயை கொண்டு போய் அனுமன் கோவில் சிதறு தேங்காய் உடைத்து விட்டு, அந்த ஒரு ரூபாயை உண்டியலில் போட்டுவிட்டு, தொலைத்த பொருளை திரும்பவும் மீட்டுக் கொடுத்து விடு என்று அனுமன் கோவிலில் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே: கண் திருஷ்டி நீங்க சனிக்கிழமை தீபம்
இப்படி செய்தால் நிச்சயம் நீங்கள் தொலைந்த பொருள் மீண்டும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு பிடித்த பொருட்கள் அல்லது விலைமதிக்க முடியாத பொருள் ஏதாவது தொலைந்து போய் இருந்தால் நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறவும்.