வீட்டில் கண் திருஷ்டி இருந்தால், கலங்க வைக்கும் பிரச்சனைகள் வரத்தான் செய்யும். அதை சரி செய்ய எத்தனையோ பரிகாரங்களை செய்து பார்த்திருப்போம். ஆனால் கண் திருஷ்டியால் வந்த கஷ்டங்கள் நம்மை பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். உதாரணத்திற்கு உப்பு சுற்றி போடுவது, எலுமிச்சம் பழம் சுற்றி போடுவது, கடுகு மிளகாய் சுற்றி போடுவது இப்படி நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ள பழக்க வழக்கங்களை தொடர்ந்து பின்பற்றுவோம்.
இருந்தாலும் தீராத பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்காமல் வருத்தப்படும் குடும்பத்தினர் இன்று இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களை தொடரும் கடுமையான கண் திருஷ்டி, கடுமையான கஷ்டங்கள் எல்லாம் உடனடியாக விலகுவதற்கு ஒரு வழி கிடைக்கும். அது என்ன பரிகாரம் ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
கண் திருஷ்டி நீங்க தீபம்
உங்க வீட்டு பக்கத்தில் நவகிரக சன்னிதானம் உள்ள கோவிலுக்கு சென்று நவகிரகத்தில், சனிபகவானை வழிபாடு செய்ய வேண்டும். நவகிரக சன்னிதானத்தில், சனி பகவானுக்கு கருப்பு எள் மூட்டையை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபம் வெறும் ஏழரை சனி பாதிப்புக்காக மட்டும் கிடையாது. கண் திருஷ்டியை விளக்கவும் நமக்கு நல்வழியை காட்டித் தரும்.
இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் தீராத துன்பங்கள் தீர வேண்டும், கண் திருஷ்டி விலக வேண்டும், என்று சனிபகவானிடம் பிரார்த்தனை வைத்தால் உங்கள் கஷ்டங்களை குறைப்பதற்கான வழியை அவர் காட்டிக் கொடுப்பார். சனிகிழமை மாலை சரியாக 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்யுங்கள்.
முடிந்தால் காலை 6 மணியிலிருந்து ஏழு மணிக்கு இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். வீடு திரும்பிய பிறகு, உங்கள் வீட்டில் ஒரு மண் அகல் விளக்கு ஏற்றி வைத்து குலதெய்வத்தை மனப்பூர்வமாக நினைத்து வழிபாடு செய்யவும். கோவிலுக்கு செல்வதற்கு முன்பும் இந்த விளக்கை வீட்டில் ஏற்றலாம் தவறு கிடையாது. குலதெய்வத்தின் பெயரைச் சொல்லி ஒரு நெய் விளக்கு வீட்டில் ஏற்றி வைத்துவிட்டு, கஷ்டங்கள் தீர பிரார்த்தனை வைக்கவும். பெரும்பாலும் இந்த இரண்டு வழிபாடு உங்களுடைய கஷ்டத்தை போக்குவதற்கு உண்டான வழியை காட்டிவிடும்.
அடுத்தபடியாக, இரவு தூங்க செல்வதற்கு முன்பு ஒரு வெள்ளை துணியில் 1 ஸ்பூன் கருப்பு எள்ளு போட்டு மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். இந்த சின்ன மூட்டையை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு, உங்களைப் பிடித்த கண் திருஷ்டி, தரித்திரம் எல்லாம் நீங்க வேண்டும் என்று மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்து கொண்டு தலையணைக்கு அடியில் இந்த முடிச்சை வைத்துக் கொண்டு தூங்குங்கள்.
சனிக்கிழமை இரவு முழுவதும் இந்த முடிச்சு உங்கள் தலையணைக்கு அடியிலேயே இருக்கட்டும். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை எழுந்து இந்த முடிச்சை கொண்டு போய் வீட்டில் இருந்து தூரமாக ஏதாவது ஒரு இடத்தில் போட்டு விடுங்கள். வீட்டில் ஆண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்களும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் தேங்காய் பரிகாரம்
பெண்கள் தங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்து தூங்கிய முடிச்சு எடுத்து ஒரு கேரி பேக்கில் போட்டு கட்டி உங்கள் கணவரிடம் கொடுத்து விடுங்கள். அதை கொண்டு போய் அவர் தூர போட்டுவிட்டு வரவும். உங்களுடைய பிள்ளைகளுக்கும் இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது. இப்படி செய்தால் உங்களுடைய கண் திருஷ்டி பிரச்சனைகள் தீரும். நவகிரக தோஷங்களில் சனி பகவானால் உண்டாக்கப்படும் பிரச்சனைகள் நீங்கும் என்பது நம்பிக்கை. தேவைப்படுபவர்கள் மட்டும் இதை பின்பற்றி பலன் பெறவும்.