
நம்முடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், பணத்தை சம்பாதிப்பதற்காகவும் பலரும் பல விதங்களில் முயற்சி செய்வார்கள். அப்படி முயற்சி செய்யக் கூடிய வழிமுறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றுதான் சொந்த தொழில் செய்வது. பலரும் பிறரிடம் கைகட்டி வேலை செய்யாமல் தங்களுடைய சொந்த முயற்சியில் அல்லது பெற்றோர்களின் வழியிலோ ஏதாவது ஒரு தொழிலை செய்து அதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.
ஆரம்பத்தில் நன்றாக போய்க் கொண்டு இருக்கும். தொழில் திடீரென்று ஏதோ ஒரு மந்தை நிலைக்கு தள்ளப்பட்டு லாபமே ஏற்படாமல் நஷ்டம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். எவ்வளவு முயற்சி செய்தாலும் அந்த முயற்சிகள் வெற்றி அடையாமல் ஏதாவது ஒரு தடைகள் வந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட சமயத்தில் எந்த முறையில் நாம் எந்த பொருட்களை கல்லாப்பெட்டியில் வைத்தால் தொழில் சிறப்பாகவும் லாபகரமாகவும் நடைபெறும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சொந்தத் தொழிலை சிறப்பாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் புதன்கிழமையை நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புதன்கிழமை அன்று பெருமாளை வழிபாடு செய்து விட்டு தொழில் ஸ்தாபனத்திற்கு சென்று தொழிலை பார்ப்பவர்களுக்கு பெருமாளின் அருளால் தொழில் சிறப்பாக நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதே போல் பெருமாள் கோவிலில் பச்சைபயிரை தானமாக தருவதன் மூலமும் நல்ல பலனை பெற முடியும். இதோடு சேர்த்து மந்தமாக இருக்கக்கூடிய தொழிலையும் லாபகரமான சிறப்பான தொழிலாக மாற்றுவதற்கு புதன்கிழமை அன்று செய்ய வேண்டிய ஒரு பரிகாரமும் இருக்கிறது.
இந்த பரிகாரத்தை புதன்கிழமை அன்று வரக்கூடிய புதன் ஹோரையில்தான் செய்ய வேண்டும். காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள், மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள், இரவு எட்டு மணியிலிருந்து ஒன்பது மணிக்குள் புதன் ஹோரை வரும். அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை செய்வதற்கு நமக்கு சுத்தமான புதிதாக வாங்கிய ஒரு பச்சை நிற துணி வேண்டும். இந்த துணி பட்டு துணியாக இருக்கும் பட்சத்தில் அதிக அளவில் பலன் தரும். இயலாதவர்கள் சாதாரண துணியை கூட வாங்கிக் கொள்ளுங்கள்.
இந்த துணியை சதுரமாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த துணியில் நாம் மூன்று பொருட்களை வைக்க வேண்டும். அதில் தொழிலில் சாதிக்க வேண்டும் என்பதற்காக முதலில் நாம் ஜாதிக்காயை வைக்க வேண்டும். அடுத்ததாக குபேரரின் அருளை பெற வேண்டும் என்பதற்காக ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அடுத்ததாக புதன் பகவானின் அருளை பெற வேண்டும் என்பதற்காக ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வைக்க வேண்டும். இவை மூன்றையும் வைத்து அதை மூட்டையாக கட்டி தொழில் செய்யும் இடத்தில் இருக்கக்கூடிய கல்லாப்பெட்டியில் வைத்து விட வேண்டும்.
இப்படி நாம் செய்வதன் மூலம் தொழிலில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் படிப்படியாக விலகும். தொழில் சிறப்பாக நடைபெற ஆரம்பிக்கும். நாம் மேற்கொள்ளும் முயற்சிகளும் வெற்றியடையும். இந்த மூட்டையில் இருக்கக்கூடிய பொருட்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதில் இருக்கக்கூடிய ஜாதிக்காயையும் வெந்தயத்தையும் ஓடுகின்ற தண்ணீரிலோ அல்லது கால் படாத இடத்திலையோ போட்டுவிட்டு புதிதாக ஜாதிக்காய் மற்றும் வெந்தயத்தை வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து ரூபாய் நாணயத்தை திரும்பவும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி நாம் தொடர்ச்சியாக செய்யும் பொழுது தொழிலில் மிகப்பெரிய வெற்றியை நம்மால் பெற முடியும்.
இதையும் படிக்கலாமே:வீட்டில் நல்லது நடக்க
தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதற்காக நாம் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வோம். அந்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை முழுமனதோடு செய்தால் போதும். தொழிலில் வெற்றியும் லாபமும் பெற முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.