- Advertisement -

வீட்டில் நல்லது நடக்க

- Advertisement -

நம் வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருட்களுக்கும், ஒவ்வொரு விதமான தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. அவை ஆன்மீகத்துடனும் தொடர்புடையவையாக இருக்கின்றன. வீட்டில் இருக்கும் கெட்டது எல்லாம் நீங்கி, நல்லவை நடக்க இப்பொருட்களை நிலைவாசலில் என்ன செய்ய வேண்டும்? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை தான் தொடர்ந்து இப்பதிவில் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.

தொழில் நஷ்டம். வியாபார நஷ்டம். பணகஷ்டம், வறுமை, தோல்வி, அவமானம் என்று எந்த வகையிலும் உங்களுக்கு பிரச்சனைகள் இருந்தாலும், அவற்றை நீக்கி, அந்த இல்லத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க வைப்பதற்கு, இந்த பரிகாரம் பேருதவியாக இருக்கும். உபகாரம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யக்கூடாது என்பார்கள். வீட்டில் தேவையற்ற இரும்பு மற்றும் ரப்பர் குப்பைகளை வெளியேற்றுங்கள். இக்குப்பைகள் உபத்திரவம் செய்பவை.

- Advertisement -

நம் அடுப்படியில் இருக்கக்கூடிய நிறைய பொருட்களுக்கு தெய்வீக சக்தி உள்ளது. அதில் முதலாவதாக இருப்பது மிளகு! மிளகு நமக்கு வரக்கூடிய அதிர்ஷ்டத்தை தக்க வைத்துக் கொள்ள உதவி செய்யும். நினைத்த வேலையில் கொண்டு போய் அமர செய்யும் அற்புத பொருளாகும். நோய்கள் நீங்கவும், கடன்கள் தீரவும் காலபைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வழிபடுவார்கள். இப்படிப்பட்ட கரு மிளகை சிறிது எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக மஞ்சள் மங்களகரமான மங்களத்தை கொடுக்கக்கூடியது. சுப மங்கள யோகங்களை கொண்டு வரக்கூடியது. சுப காரியங்களை தடையில்லாமல் நடத்திக் கொடுக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்க, சிறிதளவு மஞ்சளையும் எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒன்றிரண்டு கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். கிராம்பு எதிர்மறை எண்ணங்களை விரட்டி அடிக்கும். நல்ல சிந்தனைகளை அதிகரிக்க வைக்கும்.

பின்னர் இவற்றுடன் பணத்தை ஈர்த்து தரக்கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த ஒரு அற்புதமான பொருள் ஏலக்காய்! இந்த ஏலக்காயையும் ஒன்றிரண்டு எடுத்துக் கொள்ளுங்கள். ஏலக்காய் பண வரவை அதிகரிக்கும், வீண் விரயங்களை தடுக்கும். அதே போல பட்டையும், பண வரவிற்கு தடைகளை ஏற்படுத்தாது பாதுகாக்கும். லவங்க பட்டை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். இது செழிப்பான வாழ்க்கை அமைய துணை புரியும். பின்னர் தெய்வீக அம்சம் பொருந்தி உள்ள, மருதாணி விதைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமியின் சாராம்சம் நிறைந்துள்ள, இந்த மருதாணியின் விதைகளில், நோயில்லா வாழ்க்கை தரும் அற்புத சக்தி உள்ளது. பிணிகள் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருக்க மருதாணி விதைகளையும் சிறிதளவு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மிளகு, மஞ்சள், கிராம்பு, பட்டை, ஏலக்காய், மருதாணி விதைகள் இந்த ஆறு பொருட்களிலும் குடும்பத்திற்கு தேவையான நேர்மறை பலன்களை கொடுக்கக்கூடிய ஆன்மீகத் தன்மை ஒளிந்து கொண்டுள்ளது. இவற்றை கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ஒரு சிகப்பு துணியில் கட்டிக் கொள்ளுங்கள். சிவப்பு நிற பட்டு துணியில் வைத்து மூட்டையாக கட்டி, அதை சிகப்பு கயிறினால் நன்கு உள்ளே இருக்கும் பொருட்கள் வெளிவராதவாறு, முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே:
பணத்தால் வரும் தோஷங்கள் விலக திருவோடு பரிகாரம்

இதை ஒரு நல்ல நாளில், சுப சுக்கிர ஹோரையில், வீட்டில் பூஜை அறையில் வைத்து உங்கள் இஷ்ட தெய்வத்தையும், குலதெய்வத்தையும் மனதார பிரார்த்தித்துக் கொண்டு, பின்னர் இதற்கு சந்தன, குங்குமம் வைத்து, மலர்களால் அர்ச்சனை செய்து, வீட்டில் நிலை வாசலில் மேல் புறத்தில் யாருடைய தலையிலும் இடிக்காத வண்ணம், நடுப்பகுதியில் ஆணியில் அல்லது ஏதாவது ஒன்றில் கட்டி வையுங்கள். அவற்றில் இருக்கும் பொருட்களை 48 நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். அதன் சக்தி அவ்வளவு நாட்கள் தான் நீடிக்கும். தொடர்ந்து கட்டி வாருங்கள், கெட்டது போய் நல்லதே நடக்கும்.

சற்று முன்