
இன்று பெரும் தொழிலதிபராக இருப்பவர்கள் எல்லாம் ஆரம்பிக்கும் போது பெரிய தொழிலாக தொடங்கி இருக்க மாட்டார்கள். சிறிய அளவில் தொடங்கி அதில் முழு முயற்சியுடன் நம்பிக்கையாக உழைத்து தெய்வ அனுகிரகத்தின் மூலம் இன்று இந்த நிலையை அடைந்திருப்பார்கள். இதில் எந்த வித சந்தேகமும் கிடையாது. ஆனால் தொழில் ஆரம்பிப்பவர்கள் அனைவரும் இப்படி வெற்றி அடைந்தார்கள் என்றால் அது கொஞ்சம் சந்தேகம் தான்.
நாம் தொடங்கும் தொழில் சிறிய அளவிலோ அல்லது பெரியதாகவோ எதுவாக இருந்தாலும் முதலில் அந்த தொழில் நன்றாக நடக்கும் என்ற நம்பிக்கையை நாம் முதலில் விதைத்துக் கொள்ள வேண்டும். அந்த நம்பிக்கையுடனே ஒவ்வொரு காரியத்தையும் செய்யும் போது நமக்கான வெற்றி நிச்சயம் உண்டு. அத்துடன் தெய்வ அனுகிரகமும் ஒரு சில தாந்திரீக பரிகாரங்களையும் செய்யும் பொழுது வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் ஈர்ப்பு ஏற்பட்டு தொழிலில் நல்ல லாபத்தை பெறலாம். இப்போது அதற்கான ஒரு தாந்த்ரீக பரிகாரத்தை தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
வியாபாரத்தில் வெற்றி பெற பரிகாரம்
இந்தப் பரிகாரத்தை செய்ய ஒன்றுக்கு ஒன்று அளவில் ஒரு கண்ணாடி வாங்கிக் கொள்ளுங்கள். இத்துடன் அரகஜா, கசகசா, குப்பைமேனி பொடி, பச்சை கற்பூரம் அனைத்தையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை அமாவாசை நாளில் செய்தால் நல்லது இல்லையெனில் ஞாயிறு, செவ்வாய் போன்ற தினங்களில் செய்து கொள்ளுங்கள்.
முதலில் முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கண்ணாடியை பரிகாரத்திற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். இதில் முகத்தைப் பார்த்து சரி செய்து கொள்வதோ, தலை வாருவது போன்றவற்றையெல்லாம் செய்யக் கூடாது. இந்த பரிகாரத்தை செய்யும் போது நம் முகம் தெரிவது அல்லது செய்த பிறகு பிறர் முகம் இதில் தெரிவதில் தவறு கிடையாது. அடுத்து இந்த கண்ணாடியில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ளுங்கள். அதற்கு நீல நிற ஸ்கெட்ச் அல்லது மார்க்ர் பேன் கொண்டு வரைந்து கொள்ளுங்கள். இதற்கு வேறு எந்த நிறத்தையும் பயன்படுத்தக் கூடாது.
கண்ணாடியில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்த பிறகு அதன் நடு பகுதியில் அரகஜா மையை வைத்து ஒரு சிறிய வட்டம் ஒன்றை போட்டுக் கொள்ளுங்கள். வட்டம் முழுவதிலும் மை இருக்க வேண்டும் அதாவது ஒரு பெரிய பொட்டு அளவில் இது இருக்க வேண்டும். இப்போது இதில் கசகசா, குப்பைமேனி பொடி, பச்சை கற்பூரம் மூன்றையும் ஒன்றாக கலந்து பொடி செய்து அதை ஒட்டி விடுங்கள்.
இதை செய்த பிறகு இந்த கண்ணாடி நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் வாடிக்கையாளர்கள் உள்ளே வரும் பொழுது இந்த கண்ணாடி தெரியும் படி மாட்டி வைத்து விடுங்கள். பொதுவாகவே ஸ்வஸ்திக் என்ற சின்னத்திற்கு லாபம் என்ற பொருள் உண்டு. கண் திருஷ்டி போன்றவற்றை கழிக்க பயன்படுத்தக் கூடிய பொருள் அது மட்டும் இன்றி இதில் சேர்த்து இருக்கும் அரகஜா, கசகசா, குப்பைமேனி இவையெல்லாம் நல்ல வசிய தன்மை உடையவை. பச்சைக் கற்பூரம் பணத்தை ஈர்க்கும் தன்மை உடையது.
வியாபாரம் செய்யும் இடத்தில் வாடிக்கையாளர்களை ஈர்த்து லாபத்தை பெருக்கி தக்க வைத்துக் கொள்ள கூடிய எளிய பரிகாரம் தான் இது. இதில் ஸ்வஸ்திக் சின்னம் அழிந்து விட்டாலோ அல்லது நாம் ஒட்டி இருக்கும் அரகஜா பொடி போன்றவை எல்லாம் உதிர்ந்து விட்டாலும் துடைத்து விட்டு மறுபடியும் புதிதாக போட்டுக் கொள்ளுங்கள். ஒரு வேலை கண்ணாடி உடைந்து விட்டாலோ கீறல் விழுந்து விட்டாலோ உடனே மாற்றி விட வேண்டும். அதை அப்படியே வைக்கக் கூடாது.
இதையும் படிக்கலாமே: மன பயம் கொண்டவர்கள், தினமும் இந்த ஒரு செயலை செய்து வந்தால் தைரியசாலிகளாக மாறலாம்.
தொழிலில் சிறந்து விளங்கி நல்ல லாபம் பெற்று முன்னேற இந்த எளிய பரிகாரத்தை செய்து கொள்ளலாம் என்று சொல்லப்படுகிறது. எந்த பரிகாரத்தையும் செய்வதற்கு நம்பிக்கை எப்படி முக்கியமோ அதே போல் எந்த தொழிலிலும் நாம் முன்னுக்கு வருவதற்கு முயற்சி மிகவும் முக்கியம். முயற்சியுடன் சேர்த்த இந்த பரிகாரம் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.