- Advertisement -
- Advertisement -

சில சமயங்களில் நாம் எதிர்பாராத சிலவற்றை செய்யும் பொழுது தான் தீர்வும் கிடைக்கிறது. நம் முன்னோர்கள் சொல்லிய சில விஷயங்களில் அர்த்தமே இல்லாமல் இருக்கும், ஆனால் அது நல்ல பலன் தருபவையாகவும் இருந்துள்ளது. அந்த வகையில் இந்த ஒரு விஷயமும் ஆச்சரியப்படும் வகையில் நிவாரணம் கொடுக்கக் கூடியது. தொண்டை வலிக்கு எவ்வளவு வைத்தியங்கள் பார்த்தாலும் தீராத இப்பிரச்சனை இந்த ஒரு பரிகாரம் செய்வதன் மூலம் உடனே தீர்ந்து போகிறது, வாருங்கள் அதைப் பற்றிய அலசலை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் பார்ப்போம்.

தொண்டை வலிக்கு பல காரணங்கள் உண்டு. தண்ணீரின் மூலமாகவோ, காற்றின் மூலமாகவோ பரவக்கூடிய தொற்று கிருமிகளால் தொண்டையில் தொற்று உண்டாகி வலி ஏற்படும். தண்ணீரின் மூலமாக வரக்கூடிய தொண்டை வலிக்கு சூடான தண்ணீரில் உப்பு கலந்து வெதுவெதுப்பாக தொண்டை குழியில் வைத்து கொப்பளிக்கலாம். ஐந்திலிருந்து பத்து நிமிடம் இது போல செய்வதால் நல்ல நிவாரணம் கிடைக்கும். தொண்டைக் குழியில் ஏற்பட்டுள்ள தொற்றுக் கிருமிகளை உப்பு நீர் அழிக்கிறது. சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றை லேசாக வறுத்து பொடித்து அதனுடன் தேன் குழைத்து சாப்பிட்டாலும் தொண்டை கரகரப்பு, தொண்டை வலி, எரிச்சல் போன்றவை முற்றிலும் நிவாரணம் காணும்.

- Advertisement -

பொதுவாக வீட்டில் கழிவறையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சுத்தம் இல்லாத வீடுகளில் லட்சுமி கடாட்சமும் இருப்பதில்லை. கழிவறைக்கு செல்லும் பொழுது எச்சில் உமிழ்வதோ, வாயை திறப்பதோ கூடாது. சிறுநீர் கழிக்கும் பொழுதும் தெரியாமலும் எச்சிலை துப்ப கூடாது. அறிவியல் ரீதியாக இது போன்ற காரியங்கள் செய்யும் பொழுது அசுத்த காற்றால் தொண்டையில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

தண்ணீரினால் ஏற்படக்கூடிய தொற்றுக்கிருமிகளை அழிக்க உப்பு நீர் அல்லது இஞ்சி சாறு, மிளகு போன்றவற்றை தேநீருடன் சேர்த்து அருந்த நல்ல நிவாரணம் கிடைக்கும். காற்றினால் பரவக்கூடிய தொற்றினால் ஏற்பட்ட வலிக்கு எலுமிச்சைச் சாறுடன், வெல்லம் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீரில் பருகலாம். நம் முன்னோர்கள் சொல்லியபடி இந்த விஷயத்தையும் செய்து பயனடையலாம்.

- Advertisement -

ஒரு துண்டு வெல்லத்தை எடுத்துக் கொள்ளுங்கள். தலையை திருஷ்டிக்கு சுற்றுவது போல வலது புறம் மூன்று முறையும், இடது புறம் மூன்று முறையும் சுற்றி, மூன்று முறை தூ தூ என்று சொல்லி அதை கொண்டு போய் நாய்க்கு வையுங்கள். இப்படி செய்வதாலும் தொண்டை வலி சரியாகும் என்பார்கள். இன்னொரு முறையும் உண்டு. ஒரு துண்டு வெல்லத்தை கையில் எடுத்துக் கொண்டு மேற்கூறியபடி திருஷ்டி சுற்றி நெருப்பிலும் போடலாம் அல்லது நெருப்பில் மூன்று முறை எச்சிலை துப்பினாலும் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்று பரிகாரமாக சொல்லப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே:
மார்கழி மாதம் சொல்ல வேண்டிய பணம் தரும் மந்திரம்

சில விஷயங்கள் எப்படி என்றெல்லாம் நமக்கு புரிவதில்லை, ஆனால் செய்து பார்த்து பயனடைந்தவர்கள் ஏராளம்! அனுபவ ரீதியாக சொல்லப்படும் இது போன்ற வியத்தகு எளிய பரிகாரங்கள் அல்லது நிகழ்வுகள் தான் இன்னும் நம் முன்னோர்களும், தெய்வங்களும் நம்முடன் இருந்து துணை புரிவதாக ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது.

- Advertisement -