- Advertisement -

துளசி திருமணம் செய்த பலனை பெற உதவும் துளசி வழிபாடு

- Advertisement -

மகாவிஷ்ணுவிற்கு உகந்த செடியாக கருதப்படுவது தான் துளசி செடி. இந்த துளசி செடியை மகாவிஷ்ணு மணந்து கொண்டார் என்று புராணங்கள் கூறுகின்றன. அப்படி அவர் மணந்த நாள்தான் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை துவாதசி. இந்த வளர்பிறைத்துவாதசி என்பது நேற்று மாலை 4 மணியிலிருந்து இன்று மதியம் 1:01 வரை இருக்கிறது. பொதுவாக இந்த திதியில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பலரும் விஷ்ணுவிற்கும் துளசி செடிக்கும் திருமணம் செய்து வைக்கும் வைபவத்தை வீட்டிலேயே செய்வார்கள். அப்படி திருமணம் செய்து வைக்கும் வைப்பதை வழக்கமாக கொள்ளாதவர்களோ அல்லது இயலாதவர்களோ எந்த முறையில் எளிமையாக துளசி செடியை வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

துளசி திருமணம் வழிபாடு

பொதுவாக ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை துவாதசி திதியன்று துளசி செடியை பெண்ணாக பாவித்து மணப்பெண் போல் அலங்காரம் செய்வார்கள். பிறகு விஷ்ணுவின் சிலையையோ அல்லது சாளக்கிராம கல்லையோ அல்லது நெல்லிக்கனியையோ வைத்து திருமணம் நடத்தி வைப்பார்கள். இது பலரது இல்லங்களிலும் வம்சாவளியாக செய்து கொண்டு வரும் நிகழ்வாகவே இருக்கிறது. வம்சாவளியாக செய்யாதவர்களும், புதிதாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களும், திருமணம் செய்து வைக்கும் அளவிற்கு வசதி இல்லை என்பவர்களும் செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை துவாதசி திதி நிறைவடைவதற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல நேரம் பார்த்து செய்து கொள்வது என்பது நல்ல பலனைத் தரும். துளசி செடிக்கு சுற்றி தண்ணீர் தெளித்து கோலம் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு துளசி செடிக்கு மஞ்சள் தண்ணீரால் அபிஷேகம் செய்ய வேண்டும். அதேபோல் மஞ்சள் கலந்த பச்சரிசியை அட்சதையாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். துளசி செடிக்கு முன்பாக கோலம் போட்டு இருப்போம் அல்லவா அதில் ஒரு அகல் விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு துளசி செடியின் வலது பக்கத்தில் ஐந்து கண்ணாடி வளையலும் இடது பக்கத்தில் ஆறு கண்ணாடி வளையலும் வைக்க வேண்டும். அடுத்ததாக அட்சதையை துளசி செடியின் மேல் தூவி விட்டு குங்குமத்தை வைத்து “ஓம் துளசியை நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்து முடித்த பிறகு தூப தீப ஆராதனை காட்டி முடித்து 27 முறை துளசியை வலம் வர வேண்டும். இப்படி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமை முற்றிலும் நீங்குவதோடு 16 வகையான செல்வங்களையும் பெறுவார்கள். திருமணம் நடைபெறாமல் திருமண தடைப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள் துளசி செடிக்கு தீபம் ஏற்றி வலம் வருவதன் மூலம் விரைவிலேயே திருமணம் கைகூடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: சகல பாவங்களை நீக்கும் அன்னாபிஷேகம்

பிரம்மாண்டமாகவோ அல்லது எளிமையாகவோ துளசி திருமணம் செய்ய இயலாதவர்கள் இந்த எளிமையான துளசி வழிபாட்டை மேற்கொண்டு அனைத்து விதமான நற்பலன்களையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -