
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பிரச்சனைகள் உங்களை விட்டு விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் இடையூறாக இருந்து வந்த இன்னல்கள் எல்லாம் உங்களை விட்டு நீங்கும். பணகஷ்டத்திலிருந்து விடுபடுவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய சுவாரஸ்யமான பேச்சினால் அனைவரையும் கவர்ந்திழிப்பீர்கள். பேசிபேசியே நிறைய நல்ல விஷயங்களை சாதிக்க போகிறீர்கள். குறிப்பாக இளைஞர்களுக்கு கலைஞர்களுக்கு இன்று நன்மைகள் நடக்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. அது பணமாகவும் இருக்கலாம், பரிசு பொருளாகவும் இருக்கலாம். அந்த பொருள் உங்களுக்கு மனதுக்கு நிறைவை கொடுக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் சரியாகும். பிள்ளைகளுடைய கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடக ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். நேரத்தை வீணடிக்கக்கூடாது. சின்ன சின்ன சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது. சிக்கல்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால், நீங்கள் விடா முயற்சியை மேற்கொள்ள வேண்டும். தன்னம்பிக்கை தைரியத்தை கைவிட வேண்டாம்.
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அலைச்சல் வேண்டாம். தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வயதானவர்கள், வெயில் சமையத்தில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். வேலையிலும் வியாபாரத்திலும் சீரான போக்கு நிலவும். பெருசாக பிரச்சனை வராது.
கன்னி ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வீண் விரைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை நீண்ட தூர பயணத்தை இன்று தவிர்த்துக் கொள்ளலாம். வேலையும் வியாபாரமும் சீராக நடக்கும்.
துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று உழைப்பதற்கு சிரமம் பார்க்கக் கூடாது. அயராது உழைத்தால் நிச்சயம் நல்லது நடக்கும். சின்ன சின்ன சிரமங்கள் வந்தாலும் அதை நீங்கள் பொருட்படுத்தாமல் உங்களுடைய பயணத்தை தொடர்ந்து பயணிக்க வேண்டும். இறை நம்பிக்கையை கைவிட வேண்டாம்.
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பயம் பதட்டம் வர வாய்ப்பு உள்ளது. இறைவழிபாடு செய்யுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். புது முடிவுகள் எடுப்பதை நாளை தள்ளி போடுங்கள். அவசரப்பட்ட அனாவசியமாக அதிகம் பேசாதீர்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போராட்டங்கள் எதிர்ப்புகள் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு வேலையை கையில் எடுத்த உடன் முடிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். வேலையிலும் வியாபாரத்திலும் அவ்வப்போது சின்ன பின்னடைவு வரலாம். பெரிய பாதிப்புகள் இருக்காது. கவனமாக செயல்பட வேண்டிய நாள் இன்று.
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். மனதளவில் இருந்த சந்தேகங்களும் விலகும். வேலையிலும் வியாபாரத்திலும் முழு கவனத்தோடு ஈடுபடுவீர்கள். இறை வழிபாட்டில் மனது ஆர்வம் காட்டும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாப நஷ்ட கணக்கு பார்த்து செயல்படக்கூடிய நாளாக இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் குறியாக இருப்பீர்கள். அனாவசியமாக ஒரு ரூபாயை கூட செலவு செய்ய மாட்டீர்கள். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடு சரியாகும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும்.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வேலை வியாபாரத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பெயர் புகழ் அந்தஸ்து உயரும். பிரச்சனைகள் பெருசாக வராது. ஆனால் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டும். இறை வழிபாடு செய்யுங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும்.