- Advertisement -

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வெளிநாடுகளில் வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும்.

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதிர்பாராத தனவரவு உண்டாகக் கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் அமைதி இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான நாளாக இருக்கும். மனதுக்கு பிடித்தவர்களால் மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய தகவல்கள் கிடைக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக குடும்பத்தை பிரிந்து இருப்பவர்கள் ஒன்று செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற விஷயங்களில் வெற்றிகிட்டும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நண்பர்கள் உறவினர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் நீடித்திருக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் இருப்பதற்கான சூழ்நிலை உருவாகும். பொருளாதாரத்தில் ஏற்றம் இருக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை காண்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். உத்தியோகத்தில் ஈடுபட்டவர்களுக்கு வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகள் கைகூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொலைதூரப் பயணங்களால் வெற்றி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 – 2022 சனி பெயர்ச்சி பலன்கள் இதோ.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் திருமணத்தை பற்றிய பேச்சுவார்த்தை நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வெளிநாடுகளில் வேலை கிடைக்க காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். உயர்கல்வி முடித்தவருக்கு நல்ல தகவல் வந்து சேரும்.

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கலைத் துறையைச் சேர்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். பத்திரிக்கை, மீடியா துறையில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்து சாதனைகள் புரியலாம். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான திட்டமிடல் வெற்றி பாதையில் செல்லும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே வாக்குவாதம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். இன்றைய நாளின் முற்பகுதியில் வீண் அலைச்சல் உண்டாகலாம். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். நண்பர்களால் வீண் செலவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பங்குசந்தையில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் கூடுதலாக இருக்கும். எனவே வியாபாரத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு அதிகமாக இருந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வீண் அலைச்சல், வீண் விரயங்கள் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. புதிய தொழில் தொடங்குபவர்கள் இன்றைய நாளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெற்றோரின் உடல்நலனில் அக்கறை தேவை. சொத்துகள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக காணப்படுவீர்கள். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பொருளாதார பற்றாக்குறை ஏற்படலாம். மன உளைச்சல் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். தொழில் விஷயமாக வெளியூர் செல்வதற்கான வாய்ப்புகள் உருவாகலாம். பயணங்களால் வெற்றி கிட்டும் என்பதால் தைரியத்துடன் பயணங்களை மேற்கொள்ளலாம். நீங்கள் எதிர்பார்த்தபடி தனவரவு திருப்தி தரும். கூட்டுத் தொழில் புரிவோருக்கு வெற்றி கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். வீடு கட்டுவது அல்லது சொத்துக்கள் வாங்குவது போன்ற விஷயத்தில் ஈடுபடுவீர்கள். எதிர்கால திட்டமிடல் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

மகரம்:

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வெளியிடங்களுக்கு செல்ல நேரிடலாம். வெளியிடங்களில் கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிட்டும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். சுபகாரிய முயற்சிகள் தடைப்படுவாதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன வகையில் ஆதாயம் உண்டாகலாம். கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். குடும்ப நபர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது சிறந்தது. மனதுக்கு பிடித்தவர்கள் உங்களை காயப்படுத்த நேரலாம். மன அமைதிக்கு தெய்வ வழிபாடு சிறந்த பலன் தரும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டவர்கள் வெற்றி அடைவார்கள். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் இருக்கும்.

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றின் எதிர்பார்ப்புகள் நிறைந்திருக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல நிலையை அடைவார்கள். உயர்கல்வியில் ஈடுபடுவோருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்த்தபடி எதிர்பார்த்த இடத்திலிருந்து தன வரவு திருப்திகரமாக வந்து சேரும். சொந்த தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். வெளிநாடுகளில் இருந்து வரவேண்டிய நற்செய்திகள் வந்து சேரலாம். திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றியில் முடியும்.

- Advertisement -