- Advertisement -

மேஷம்:

பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம்:

உற்சாகமான நாள். காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கடகம்:

- Advertisement -

நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

சிம்மம்:

சிலருக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியில் போகும்போது பொருள்கள் தொலைந்து போகக்கூடும் என்பதால் எச்சரிக்கை அவசியம். பேசும்போது பதற்றம் வேண்டாம். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பணிகளில் கவனமாக இருக்கவும்.

கன்னி:

- Advertisement -

பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். மனதுக்கு இனிய சம்பவங்களைக் கேட்பீர்கள். பிற்பகலுக்குமேல் நீங்கள் எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

துலாம்:

தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். மாலையில் நீண்டநாளாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்திப்பீர்கள். இன்று வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்:

பிற்பகலுக்குமேல் திடீர் செலவுகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மனம் உற்சாகமாகக் காணப்படும். வாழ்க்கைத்துணை வழியில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:

மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

ஜூன் மாத ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மகரம்:

மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் சற்று அதிகரிப்பதால் சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கும்பம்:

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தன லாபம் ஏற்படும்.

மீனம்:

வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணம் வாங்கும் யோகம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -