ஜூன் மாத ராசி பலன் 2018

June matha rasi palan

மேஷம்:
Mesham Rasiமேஷ ராசிக்கு இந்த மாதம் தனவரவுகள் இருக்கும். சிறிய மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். வாகனங்கள் மற்றும் இயந்திரங்களை இயக்கம் சமயங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். உடலில் அதிகம் உஷ்ணம் ஏற்படாமல் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். சகோதர சகோதரிகளிடம் சுமூகமான உறவு இருக்கும். எந்தவொரு பணியிலும் மிகவும் கடினப்பட்டு முயற்சித்தால் மட்டுமே வெற்றி கிட்டும் நிலை ஏற்படும். புதிய தொழில், வியாபார முயற்சிகளில் கடினமாக உழைத்தே வெற்றி பெரும் நிலை ஏற்படும்.

ரிஷபம்:
Rishabam Rasiரிஷப ராசியினருக்கு இம்மாதம் குடும்பத்தில் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும் சூழ்நிலை உருவாகும். உடலிலும் மனத்திலும் ஒரு புதிய உற்சாகம் ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களால் உங்களுக்கு நன்மைகள் ஏற்படும். உங்கள் வளர்ச்சியில் பொறாமை கொண்டவர்கள், உங்களுக்கு கேடு செய்ய முற்படும் சூழ்நிலை இருப்பதால் அனைத்திலும் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். உடல் நிலையில் அக்கறை செலுத்தாவிடின் பெரிய மருத்துவ செலவை செய்யும் சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு அவர்கள் தாய் வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

மிதுனம்:
Mithunam Rasiமிதுன ராசியினருக்கு இம்மாதம் சிறிய அளவிலான உடல் நலக் குறைபாடுகள் ஏற்படலாம். குடும்பத்தினர் மற்றும் உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதுடைய பெண்களுக்கு நல்ல வரன்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரங்களில் இருப்பவர்கள் நல்ல லாபத்தை ஈட்டுவார்கள். மாணவர்கள் கல்வியில் சாதனைகள் செய்து பரிசுகள் பெறும் அமைப்பு ஏற்படும். அரசியலில் உள்ளவர்கள் மக்களிடம் நற்பெயரைப் பெறும் சூழ்நிலை உண்டாகும். சிலருக்கு நண்பர்கள் வழியிலும் திடீர் தனவரவுகள் ஏற்படும்.

கடகம்:
Kadagam Rasiகடக ராசியினருக்கு ஆரோக்கிய குறைவு உண்டாகும் நிலை ஏற்படுகிறது. எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் தீர விசாரித்து சிந்தித்து செயலாற்றுவது நல்லது. நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிகழும் சூழல் உருவாகும். பணியிடங்களில் வீண் பேச்சுகள் மற்றும் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் யோகம் ஏற்படும். உங்கள் மற்றும் உங்களின் குடும்ப பொருளாதார நிலை சராசரி நிலையில் இருக்கும்.

சிம்மம்:
simmamசிம்ம ராசியினருக்கு இம்மாதம் உடல் மற்றும் மனம் உற்சாகமாக இருக்கும். உங்களுக்கு வந்து சேர வேண்டிய தனம் சரியான நேரத்தில் வந்துவிடும். நீங்கள் கேட்காமலேயே உங்களுக்கு உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வலிய வந்து உதவுவார்கள். ஒரு சிலருக்கு காதல் திருமணம் கைகூடும். நீங்கள் தொடங்கும் புதிய தொழில் மற்றும் வேலை முயற்சிகளில் வெற்றியடைவீர்கள். அரசியலில் இருப்பவர்கள், தங்கள் எதிர்ப்பாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து அனைத்திலும் வெற்றி வாகை சூடுவார்கள்.

கன்னி:
Kanni Rasiகன்னி ராசியினருக்கு இம்மாதம் சற்று சோதனையான மாதமாக இருக்கும். உடலில் ஏற்பட்ட அசதி மற்றும் மன உளைச்சல் காரணமாக எதிலும் முழு ஈடுபாட்டுடன் செயலாற்ற இயலாத நிலை இருக்கும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உருவாகலாம். தொழில் மற்றும் வியாபாரங்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சற்று தள்ளி வைப்பது நல்லது. பணவரவுகள் சராசரியாக இருக்கும். ஒரு சிலருக்கு நீண்ட நாள் சேமிப்பிலிருந்து எடுத்து செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகும்.பெண்களின் உடல் நிலை ஆரோகியமாக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasiதுலாம் ராசியினருக்கு வெளிநாடுகளுக்கு செல்லும் அமைப்பு ஏற்படும். உங்களின் நீண்ட நாள் திட்டங்கள், ஆசைகள் நிறைவேறும். சிலர் புதிய வீடு, வாகனம், நிலம் போன்ற சொத்துக்களை வாங்குவீர்கள். கலைத் துறையினர் வெளிநாட்டு பயணங்கள் மூலமாக பணம் மற்றும் விருதுகளை சம்பாதிக்கும் நிலை ஏற்படும். உணர்ச்சிவசப்படுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். தன வரவுகள் நன்றாக இருந்தாலும் சுப காரியங்களுக்கான செலவுகளும் ஏற்படும். மாணவர்கள் சிறிது கடினப்பட்டே எதிலும் வெற்றி அடையும் நிலை ஏற்படும்.

விருச்சகம்:
Virichigam Rasiவிருச்சிக ராசியினருக்கு அவ்வப்போது சிறு உடலாரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். ஒரு சிலர் கோவில் சம்பந்தமான காரியங்களைச் செய்வது, தீர்த்த யாத்திரை மேற்கொள்ளுதல் போன்ற ஆன்மிக சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். தம்பதிகளுக்குள் பாசம் அதிகரிக்கும். சிலருக்கு சமுதாயத்தில் உயரிய மனிதர்களால் லாபமும் மற்றும் பாராட்டுகளும் கிடைக்கப் பெரும் சூழ்நிலை உண்டாகும். பணிபுரிவோர்களுக்கு தாங்கள் விரும்பிய பதவி உயர்வுகளும்,பணிமாற்றல்களும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் அதிக நன்மைகள் ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasiதனுசு ராசியினருக்கு இம்மாதம் அந்நிய மனிதர்கள் மூலம் பல விதமான நன்மைகள் ஏற்படும். இவ்விஷயத்தில் கடினமான முயற்சிக்கு பின்பே வெற்றி கிட்டும். வீட்டு பெண்கள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். பணியிடங்களில் பிறரிடத்தில் எச்சரிக்கையாக இல்லாவிடின், அவப்பெயரை பெரும் நிலை ஏற்படலாம். குடும்பத்திலுள்ள பெரியோர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். பொருள் மற்றும் பண சேர்க்கைக்கு எந்த குறைவும் ஏற்படாது. உடல் நிலையிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

மகரம்:
Magaram rasiமகர ராசியினருக்கு எவ்வித புதிய முயற்சிகளிலும் சிறிது தாமதத்திற்கு பிறகே வெற்றி கிட்டும். திருமண வயதிலுள்ள வீட்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நல்ல பொருத்தமான வரன் அமையும். அரசியலிலிருப்பவர்களுக்கு மக்கள் அபிமானம் ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பதால், மனஸ்தாபங்கள் மற்றும் சண்டைகளை தடுக்கலாம். ஒரு சிலர் உஷ்ண சம்பந்தமான நோய்களால் அவதியுறுவர். நல்லதொரு பொருள், பண சேர்க்கை உண்டாகும். வாங்கிய கடன்கள் அனைத்தும் கட்டி தீர்க்கும் சூழ்நிலை உருவாகும்.

கும்பம்:
Kumbam Rasiகும்ப ராசியினருக்கு இம்மாத காலங்களில் அடிக்கடி சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தம்பதிகளுக்குள் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு சிறிது காலம் பிரிந்து வாழ்வார்கள். வெளிநாட்டு பணிகளுக்கு முயற்சித்தவர்களுக்கு அதில் வெற்றி உண்டாகும். சிலர் ஆன்மிக புனித யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். இரும்பு சம்பந்தமான தொழிலில் உள்ளவர்களுக்கு அதிக லாபம் ஏற்படும். கடின உழைப்பின் காரணமாக சிறு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். திருமண முயற்சிகளில் இருப்போர்களுக்கு சிறு தடங்கல்களுக்கு பின் அதில் வெற்றி உண்டாகும்.

திருமண ஜாதக பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

மீனம்:
Meenam Rasiமீன ராசியினருக்கு தன வரவுகள் சராசரி நிலையிலேயே இருக்கும். நிலுவைத் தொகைகள் அனைத்தும் வந்து சேரும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் உங்களுக்கும், உங்கள் பேச்சுக்கும் மதிப்பு ஏற்படும். உடலாரோக்கியம் நல்ல நிலையிலிருக்கும். பிரிந்த தம்பதியினர் தங்கள் மன வேறுபாடுகளை மறந்து ஒன்று சேருவார்கள்.வெளியில் செல்லும் போதும், வாகனங்களில் பயணிக்கும் போதும் சற்று கவனமாக இருக்க வேண்டும். மாணவர்கள் கல்வியில் சிறிது பின் தங்குவார்கள். பணிகளில் இருப்போர்களுக்கு தாங்கள் எதிர்பார்த்த கடன் மற்றும் பண உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும்.

தின பலன், வார ராசி பலன், மாத ராசி பலன், அதிஷ்டம் தரும் யோகங்கள் என ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிய தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.