- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். எல்லா வேலையையும் சரியான நேரத்தில் பக்காவாக முடித்துக் கொடுத்து விடுவீர்கள். நீங்கள் உங்களுடைய வேலையை செய்வது மட்டுமல்லாமல், உங்களுடன் இருப்பவர்களையும் வாழ்க்கையில் மேலே உயர்த்தி விட வேண்டும் என்று சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீங்கள், அடுத்தவர்கள் கண்ணுக்கு தெய்வமாக கூடிய நாள் இது. அடுத்தவர்கள் வாழ்க்கையில் விளக்கு ஏற்றி வைக்க இன்று ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் இல்லாத அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் விலகும். எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிக்கலாக இருந்த தடைகள் எல்லாம் விலகும். புதிய முதலீட்டை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கை துணை சப்போர்ட்டாக இருப்பார்கள்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் அதிகமாக இருக்கும். நிறைய பொருட்களை வாங்கி சேர்ப்பீர்கள். சுப செலவுகள் இருக்கும். தேவையில்லாமல் பணம் செலவாகுவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அதிக ஆசை, அதிக நஷ்டத்தை கூட கொடுக்கலாம். கொஞ்சம் ஆசையை கட்டுப்படுத்திக் கொண்டாலும் நல்லது தான். குறிப்பாக எதிர்பாலின நட்பு கூடாது. முன்பின் தெரியாத நபரிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள கூடாது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல ஓய்வு கிடைக்கப் போகிறது. கடந்த சில நாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் எல்லாம் இன்று ஒரு முடிவுக்கு வரும். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தை பார்க்கலாம்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன விஷயத்திற்கு கூட மூட் அவுட் ஆவிங்க. ஏனோ தெரியவில்லை சிரிக்கவே இன்று மறந்து போக வாய்ப்புகள் இருக்கிறது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்களை டென்ஷன் படுத்த காத்துக் கொண்டிருக்கிறது. டென்ஷனை குறைக்க பிடித்த இறைவனை வழிபாடு செய்யவும். பிடித்த இறைவனின் நாமத்தை மனசுக்குள் சொல்லிக் கொண்டே இருக்கவும். அடுத்தவர்கள் மனது புண்படும்படி நடந்து கொள்ள வேண்டாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியான நாளாக இருக்க போகின்றது. எந்த ஒரு வேலையை கையில் எடுத்தாலும் அதை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். விடாமுயற்சி உங்களுக்கு விஸ்வரூப வெற்றியை இன்று கொடுக்கும். பல பாராட்டுக்கள் கிடைக்கும். சில பேருக்கு பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய கஷ்டம் நிச்சயம் வீண் போகாது.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். நண்பர்கள் கூட பகைவர்களாக மாறுவார்கள். இதனால் மேனேஜர் டீம் லீடரிடம் அதிகமாக வாக்குவாதம் செய்ய வேண்டாம். என்ன சொன்னாலும் தலையை மட்டும் மாட்டிக் கொள்ளுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவது கிடையாது. அமைதியாக இருப்பதால் நாம் அடங்கி போவதாகவும் அர்த்தம் கிடையாது. பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம் அதற்காகத்தான்.

விருச்சிகம்

விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சங்கடங்கள் வரும். மனதிற்கு பிடித்தவர்கள் உங்களை திட்டி வெறுப்பதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் வரும். பிடிச்சவங்க திட்டினால் உடனே அழுகை வரும் என்றால் அழுது விடுங்கள். பாரத்தில் பாதி குடைந்து விடும். எதையும் தாங்கும் இதயம் உங்களுக்கு தேவை. காதல் கசக்கும் திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரலாம் கொஞ்சம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் நல்லதே நடக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். பார்ட்னரோடு சேர்ந்து நிறைய ஐடியாக்களை அறிமுகப்படுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு நிறைய ஆதாயத்தை கொடுக்கும். வேலை செய்பவர்களுக்கு டார்கெட்டை முடிக்க நிறைய வாய்ப்புகள் தேடி வரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு மன நிறைவை கொடுக்கும். கடன் சுமையை குறைக்கும். வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு தேவையான சேமிப்புகளை செய்வீர்கள். புதுசாக விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதன் மூலம் நல்ல லாபத்தை அடையலாம். கமிஷன் தொழில் நல்லபடியாக செல்லும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்ததை விட இன்றைய நாள் பாராட்டுகள் கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கப் போகின்றது. குறிப்பாக காவல்துறையில் இருப்பவர்கள் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கெல்லாம் இன்று நிறைய நல்லது நடக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் சீக்கிரம் வீடு திரும்பவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்பத்தில் புது வரவுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. திருமணம் குழந்தை பாக்கியம் போன்ற நல்ல விஷயங்களில் நேர்மறையான பதில்கள் வரும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்வீர்கள். தேவையில்லாமல் ஊரை சுற்றிக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் இன்று நல்ல காலம் பிறக்கும். நல்ல வேலை கிடைக்கும். புதுசாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வரும். பயன்படுத்திக் கொள்ளுங்கள். நினைத்தது கிடைக்கவில்லை என்றால், கிடைத்ததை வைத்து மேலே ஏறுவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொண்டால் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்.

- Advertisement -