
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. அவசரப்பட்டு எந்த வேலையையும் செய்யக்கூடாது. நிதானமாக செயல்பட்டால் நிச்சயம் வெற்றி உண்டு. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். கடன் வாங்காதீர்கள். இறை வழிபாடு செய்வது மனதிற்கு நிம்மதியை தரும்.
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பதட்டம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த வேலையை செய்வது, எந்த வேலையை விடுவது என்ற குழப்பம் இருக்கும். விடுமுறை நாளை என்ஜாய் பண்ண முடியாத சூழ்நிலை சில பேருக்கு வரலாம். கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லதற்கே. நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். எதிர்கால சிந்தனை மேலோங்கும்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்லது நடக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும்= சுப செலவுகள் ஏற்படும். விடுமுறை நாளை சந்தோஷமாக கழிப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் இருந்து வந்த டென்ஷன் குறையும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்திலும் சின்ன சின்ன டென்ஷன் வந்து போகும். பெருசாக பிரச்சினைகள் இல்லை. பிரச்சனைகளை சமாளிக்கும் தெம்பும் தைரியமும் உங்களிடத்தில் இருந்து வெளிப்படும்.
சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று தடைகள் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புது முயற்சிகள் மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். வீண் விரைய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செல்லுங்கள். கூடுமானவரை இன்று நீண்ட தூர பயணங்களை தவிர்த்து விடுங்கள்.
கன்னி ராசிக்காரர்கள் இன்று லாப நஷ்ட கணக்கு பார்த்து வேலை செய்வீர்கள். யோசிக்காமல் ஒரு வேலையை கையில் எடுக்க மாட்டீர்கள். அப்படி ஒரு வேலையை கையில் எடுத்து விட்டால், அதை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட தூர பயணங்கள் ஏற்படலாம். உடல் சோர்வு வர வாய்ப்பு உள்ளது. பெண்கள் குறிப்பாக இன்று ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுட கூடிய நாள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூர் பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவை இல்லாத எதிரி பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். விவசாயிகளுக்கு இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும்.
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று மன நிம்மதி கிடைக்கும். தேவையில்லாத சந்தேகங்கள் விலகும். ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட தூர பயணங்களால் கொஞ்சம் அலைச்சல் வர வாய்ப்பு உள்ளது.
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். எதிரிகள் தொல்லை விலகும். பிரச்சனை செய்தவர்களை மன்னிக்க கூடிய மனப்பக்குவம் வெளிப்படும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும். தேவையான அளவு பணம் கையில் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு.
மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபமான நாளாக இருக்கும். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலையில் முன்னேறுவதற்கு கொஞ்சம் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டும். உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். மாணவர்கள் கல்வியில் நிதானத்தோடு முடிவு எடுக்க வேண்டும்.
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. சின்ன சின்ன மறதியால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்ய வேண்டாம். புது முடிவுகள் எடுக்கும் போது சிந்தித்து செயல்படுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.
மீன ராசிக்காரர்களுக்கு இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் சுறுசுறுப்பு இருக்கும். தேவைக்கு ஏற்ப பணம் கையில் இருக்கும். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வண்டி வாகனம் ஓட்டும்போது கூடுதல் கவனம் தேவை.