- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். மேல் படிப்புக்காக ஏதாவது முயற்சிகளை செய்வதாக இருந்தால் மாணவர்கள் இன்று அதை தொடங்கலாம். விடுமுறையில் இருக்கும் மாணவர்கள் உங்களுடைய அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்கு புதுசாக ஏதாவது ஒரு வகுப்பில் சேர்வது நன்மையை கொடுக்கும். மேலும் மேலும் முன்னேற்றத்தை தரும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையில்லாத டென்ஷன் இருக்கும். இதனாலேயே அன்றாட வேலையை சரிவர செய்ய முடியாமல் தவிப்பீர்கள். அலுவலகப் பணி கொஞ்சம் பின்னோக்கி செல்லும். இன்று செய்யக்கூடிய வேலைகளில் சின்ன சின்ன தடைகள் வரும். இதனால் முதலில் உங்களுடைய டென்ஷனை குறைத்துக் கொள்ளுங்கள். பிறகு வேலை செய்யுங்கள். நல்லது நடக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சண்டை சச்சரவுகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. ஏதாவது ஒரு விஷயத்தில் வீட்டில் சண்டை வரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களிடம் சண்டை வரும். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். வாக்குவாதம் செய்து கொண்டே இந்த நாளை கடத்திச் செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. கூடுமானவரை இப்படிப்பட்ட சண்டை வரக்கூடிய சூழ்நிலைகள் எல்லாம் உங்களுக்கு வந்தால் அதிலிருந்து ஒதுங்கி செல்ல பாருங்கள்.

கடகம்


கடக ராசி காரர்கள் இன்று எப்படியாவது போராடி ஜெயித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்து விடுவீர்கள். சின்ன சின்ன தடைகள் வந்தாலும், அதை எல்லாம் கடந்து வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். உழைப்புக்கேற்ற பலன் பெறுவீர்கள். மனநிறைவை அடைவீர்கள். மனது ஆன்மீக ரீதியாக பக்குவப்படும். இறைவனின் அருள் ஆசி உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நிறைய நன்மைகள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் ஏற்படலாம். உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சண்டை வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுங்கள். பிள்ளைகளின் நலனில் கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். இறைவழிபாடு செய்வதில் அதிக கவனம் செலுத்துவீர்கள். கோயிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலைமை சீராகும். சேமிப்பை உயர்த்துவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத செலவுகள் நிதி நிலைமையை கொஞ்சம் மோசமாக மாற்றிவிடும். கையில் இருக்கும் சேமிப்பு கரைவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருங்க. அனாவசிய செலவுக்காக பணத்தை வெளியில் எடுக்க வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். சின்ன சின்ன வியாபாரிகள் கூட இன்று நல்லபடியாக லாபத்தை எடுப்பீர்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சிக்கல்கள் தீரும். காதல் கைகூடும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீக ரீதியான வழிபாட்டு முறைகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். அந்த இறைவனின் பரிபூரண ஆசை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கிடைக்கும் மன நிறைவான நாளாக இருக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சீக்கிரமாக உங்களுடைய வேலைகளை செய்ய தொடங்க வேண்டும். எந்த ஒரு வேலையிலும் தாமதம் இருக்கக் கூடாது. சுறுசுறுப்பாக இருங்கள் கொஞ்ச நேரம் கழித்து இந்த வேலையை செய்யலாம் என்று தள்ளிப் போட்டால், அதன்மூலம் சிக்கல்கள் வரும் ஜாக்கிரதை. தொழிலில் முதலீட்டின் செய்யும்போது கவனம் இருக்க வேண்டும். தெரியாத மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பாதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதுசாக ஏதாவது முயற்சிகள் செய்வதாக இருந்தால் இன்று அந்த முயற்சியை மேற்கொள்ளலாம். லாபம் நிறைந்த நாளாக இருக்கும். இன்று நீங்கள் தொடங்கும் விஷயம் உங்களுக்கு பல மடங்கு விருத்தி அடையும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். ஆரோக்கியத்தில் மேம்பாடு இருக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கப் போகிறீர்கள். உங்களுடைய நாள் சுமூகமாக நகர்ந்து செல்லும். எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மன அமைதியோடு இன்று நிம்மதியா தூங்குவீங்க. அந்த அளவுக்கு மனதில் சந்தோஷம் இருக்கும். அந்த அளவுக்கு பிரச்சனைகளுக்கு உண்டான தீர்வை கடவுள் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பான்.

மீனம்


மீன ராசி காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப முக்கியமான நாளாக இருக்கும் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கான பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள் வேலை செய்யும் இடத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும் கொஞ்சம் ஏமாந்தால் போதும் அடுத்தவர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள் நண்பர்களாகவே இருந்தாலும் அவரிடம் கவனமாக இருங்க உயர் அதிகாரிகளோடு மீட்டிங் ஏதாவது இருந்தால் அந்த இடத்துல கவனமா பேசுங்க.

- Advertisement -