- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் போட்டிகள் நிறைந்த தினமாக திகழப் போகிறது. யாரிடமும் வாக்குவாதங்கள் செய்வதை தவிப்பது நல்லது. முடிந்த அளவிற்கு அனுசரித்து செல்லுங்கள். பிரச்சனைகள் வராது. நினைத்த காரியங்கள் தாமதமாக நடைபெறும். வரவேண்டிய பண வரவும் தாமதப்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் திறமையை வெளிப்படுத்தும் தினமாக திகழப்போகிறது. கடுமையான வேலையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கும் சூழ்நிலை உண்டாக்கும். வரவை விட செலவு அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அமைதியான தினமாக திகழப்போகிறது. பயணங்களின் மூலம் நல்ல அனுபவம் உண்டாகும். நெருக்கமான உறவுகளின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் செயல்படுவீர்கள். கடன் ரீதியாக எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது. வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும் நிலை உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய தினமாக திகழப்போகிறது. ஆடம்பர செலவுகள் வீண் விரயங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உற்றார் உறவினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இருக்கக்கூடிய நுணுக்கங்களை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவீர்கள்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் பாராட்டு கிடைக்கும் தினமாக திகழப் போகிறது. புதிய அனுபவங்களை பெறுவீர்கள். மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழில் மற்றும் வேலையில் இருந்து வந்த எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு பிறகு எடுப்பது நன்மையை தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் நன்மைகள் நிறைந்த தினமாக திகழப்போகிறது. உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். முக்கியமான விஷயங்களுக்கு தைரியமாக முடிவெடுப்பீர்கள். மறைமுக எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகளை சரி செய்து வெற்றி காண்பீர்கள். விளையாட்டில் அதிக ஆர்வம் ஏற்படும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் கவலைகள் அற்ற மகிழ்ச்சியான தினமாக திகழப்போகிறது. உங்களின் பேச்சு சாதுரியத்தால் நன்மைகள் உண்டாகும். இருப்பினும் குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது. இறைவழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். இதுவரை இருந்த நெருக்கடிகள் அனைத்தும் படிப்படியாக குறைந்து மனதளவிலும் உடலளவிலும் ஒரு புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய தினமாக திகழப்போகிறது. உங்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். மற்றவர்களின் நடத்தையைப் பற்றி பேசுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருக்கும் நபர்களை அனுசரித்து செல்ல வேண்டும். இறுக்கமான சூழ்நிலை உண்டாகும். தேவையற்ற சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் விவேகத்துடன் செயலாற்றும் தினமாக திகழப்போகிறது. வெளியூர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதனால் உடல் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்திலும் தொழிலிலும் பணிகளை திட்டமிட்டு செய்தால் அனைத்தையும் விரைவாக முடிக்க முடியும். சுப காரியங்கள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் ஆசைகள் நிறைவேறும் தினமாக திகழப் போகிறது. இதுவரை இழுபறியாக இருந்த செயல்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடைபெறும். பணவரவு ஏற்படும். அதனால் சேமிக்கும் சிந்தனையும் அதிகரிக்கும். புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய லட்சியம் மனதில் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் விருப்பங்கள் நிறைவேறும் தினமாக திகழப் போகிறது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். வேலையை செய்யும் பொழுது முழு கவனத்துடன் செய்வது நல்லது. பணத்தை அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். தடைப்பட்டிருந்த அரசு காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் ஆதரவு கிடைக்கும் தினமாக திகழப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். அதனால் மனதில் ஒருவித புத்துணர்ச்சி ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

- Advertisement -