- Advertisement -
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வேலையிலும் வியாபாரத்தையும் கொஞ்சம் நிதானம் தேவை. இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். சுறுசுறுப்பு வெளிப்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனதிற்கு பிடித்த கல்லூரியில் சீட்டு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. காரியத்தடை விலகும் நாள் இன்று.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று பேசி பேசி நிறைய நல்ல காரியங்களை சாதிக்கப் போகிறீர்கள். வசீகரத் தோற்றம், வசீகரப் பேச்சு உங்களை நல்வழிப்படுத்தும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் எதிர்பார்த்த சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்திலும் எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். முன் கோபம் வேண்டாம். பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. வாக்குவாதம் செய்யாதீர்கள். தேவையில்லாமல் பேசுவதை இன்று குறைத்துக் கொள்ளுங்கள். வீண் விரைய செலவுகளாக வாய்ப்பு உள்ளது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பாசம் அன்பு காதல் வெளிப்படக் கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பகை விலகும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். பிரிந்த கணவன் மனைவிக்குள் இருந்து வந்த விரிசல்கள் சரியாகும். வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாடு செய்வதும் மனதிற்கு அமைதியை தரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று உற்சாகமான நாளாக இருக்கும். தலை குனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து பெருமையாக நிற்பீர்கள். உங்கள் மீது விழுந்த பழி விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று துடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இன்று நிச்சயம் நல்ல செய்தி உண்டு.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று அலைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். நல்ல ஓய்வு கிடைக்கும். உங்களுக்கு தேவையான வேலைகள் அனைத்தும் தேவையான நேரத்தில் நடந்து முடியும். வேலை வியாபாரத்தில் பெருசாக பிரச்சனை வராது. ஆக மொத்தத்தில் இந்த நாள் சொர்க்கம் தான். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். காரிய தடை விலகும். புது முயற்சிகள் மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. தீராத உடல் உபாதைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். மருந்து மாத்திரை செலவு குறையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மனம்மகிழ்ச்சியாக இருக்கும். தேவையில்லாத பிரச்சினைகள் உங்களை விட்டு விலகும். சந்தேகத்தில் இருந்து விடுபட்டு ஒரு தெளிவுக்கு வந்து விடுவீர்கள். எதிர்பார்த்த பண வரவு மனதை நிம்மதி அடையச் செய்யும். உங்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொறுத்தவரை கொஞ்சம் மன பயம் இன்று வந்து போகும். புது முடிவுகள் எடுக்கும் போது மட்டும் கவனமாக செயல்பட வேண்டும். அன்றாட வேலையில் அலட்சியம் வேண்டாம். ஒருவருக்கு ஒருவர் குறை கூறிக்கொண்டு பேச வேண்டாம். புது மனிதர்களை முழுசாக நம்ப வேண்டாம். வேலையில் அக்கறை காட்டுங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரையில் இன்று நிறைய நல்ல வேலைகளை செய்வீர்கள். அடுத்தவர்களுடைய கஷ்டத்தை புரிந்து கொண்டு அதற்கான ஆறுதலையும் தெரிவிப்பீர்கள். கஷ்டத்திற்கு உண்டான தீர்வையும் உங்களால் கொடுக்க முடியும். மன நிம்மதி கிடைக்கும். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த ஒரு நல்ல விஷயம் இன்று நடக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை உண்டாகும். மனதிற்கு பிடித்த நபருடன், நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள். எதிர்பாராத அதிசயம் நடக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

- Advertisement -