- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்ப்பாராத நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் புகழ் கிடைக்கும். வியாபாரத்தில் யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். சொந்த பந்தங்கள் உங்களை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு உங்களுடைய வளர்ச்சி இருக்கும். எதிரிகளிடம் சவால் விட்டு ஜெயிக்க கூடிய நல்ல நாள் இது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் வரக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதிலும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்களுக்கு வேண்டியவர்களே தேவையில்லாத பிரச்சினைகளில் உங்களை இழுத்து விடுவார்கள். ஆகவே நெருங்கிய உறவுகள், நெருங்கிய நண்பர்களிடத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுங்கள். உங்களுக்கோ, உங்கள் மனைவிக்கோ, உங்கள் பிள்ளைக்கோ நடக்கக்கூடிய நல்லதை அனாவசியமாக வெளி ஆட்களிடம் சொல்லாதீங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர் பார்த்த நல்லது நடக்கும். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்திருந்த காரியங்களில் இன்று வெற்றி கிடைக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பை கொடுக்கும். எதிர்பாராத பண வரவு சொத்து சேர்க்கைக்கு வழிவகுக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சிக்கல்கள் விலகும். பிள்ளைகளின் நலனில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வீர்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று எண்ணில் அடங்காத நல்லது நடக்கும். எதிர்பார்க்காத பணவரவு இருக்கும். நிதிநிலைமை சீராகும். சேமிப்பு இரட்டிப்பாகும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நன்மை நடக்கும். இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கூடுதல் லாபமும் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். எந்த ஒரு வேலையையும் சுறுசுறுப்பாக செய்ய முடியாது. உடல் சோர்வு காணப்படும். கூடுமானவரை உடலுக்கு குளிர்ச்சி தரும் பொருட்களை சாப்பிடுங்கள். அதிகமான வெயிலில் வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். கவனக்குறைவு காரணமாக சின்ன சின்ன தவறுகள் வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரம் விருத்தி அடையக்கூடிய நாளாக இருக்கும். சின்னதாக பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் முதல், பெரியதாக தொழில் செய்பவர்கள் வரை இன்று இரட்டுப்பு மடங்கு நன்மை கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்திலும், உங்களுக்கு உண்டான மதிப்பும் மரியாதையும் அதிகமாக இருக்கும். நீங்கள் இன்று செய்யும் சின்ன முதலீடு எதிர்காலத்தில் பெரிய அளவில் லாபத்தை கொடுக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பிள்ளையார் சுழி போட்டு தொடங்கக்கூடிய எல்லா நல்ல விஷயமும் சுகமாக முடியும். வீட்டில் தடைப்பட்டு வந்திருந்த சுபகாரியப் பேச்சுக்களை தொடங்கலாம். கணவன் மனைவியிடம் வெளிப்படையாக அன்பை வெளி காட்டுங்கள். அன்பை மனதிற்குள்ளேயே வைத்திருந்தால் நிச்சயம் மனைவி யின் பாசம் உங்களுக்கு கிடைக்காது. வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் இருந்தால் அதையும் வெளிப்படையாக பேசுங்கள். நிறைய விஷயங்களை மனதில் போட்டு பூட்டும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று ஆதரவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. இதனால் நண்பர்கள் உறவுகள் இவர்களுடைய அருமை பெருமைகளை சரியாக புரிந்து கொள்வீர்கள். வீண் செலவை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக ஊர் சுற்றும் பழக்கத்தை அறவே தவிர்த்துக் கொள்ளவும்.‌ நேரத்தை வீணடிக்க கூடாது. நீண்ட தூர பயணத்தின் போது சிக்கல்கள் வர வாய்ப்பு உள்ளது‌. இன்று பயணத்தை தவிர்க்கவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களை இன்று சுலபமாக ஏமாற்றி விடலாம். நீங்க யார்கிட்டயும் ஏமாறாமல் இருக்க வேண்டும் என்றால், மனதை பலமாக வைத்துக் கொள்ள வேண்டும். பலவீன மனதோடு இன்று நீங்கள் இருந்தால், நான்கு பேர் வந்து, உங்களை பேசி மயக்கி, உங்களிடம் இருக்கும் பணத்தை ஏமாற்றி வாங்கிச் செல்ல நிறையவே வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. இலக்கிய மனசு இருக்கலாம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் மனசும் இருக்கலாம். ஆனால் இளிச்சவாயனாக இருக்காதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். எல்லாத்துக்கும் முன்கோபம் படுவீர்கள‌. நீங்கள் உயர் அதிகாரிகளாக இருந்தால் உங்களுக்கு கீழே வேலை செய்பவர்கள் ரொம்ப ரொம்ப பாவம். டென்ஷனை குறைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லது கிடையாது. எந்த பிரச்சனையாக இருந்தாலும் நின்று நிதானமாக பொறுமையாக யோசிங்க. நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வெற்றி கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். கூடுதல் வருமானம் இருக்கும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து வெளி வருவீர்கள். மனைவி பிள்ளைகள் என்று நேரத்தை சந்தோஷமாக செலவு செய்வீர்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். பெரியவர்களுக்கு மரியாதை கொடுத்து பேசினால் இன்னும் பெரிய நல்லது உங்களை வந்து சேரும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று சக ஊழியர்கள் சக நண்பர்களோடு பழகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உங்களுக்கு நடக்கும் நல்லதை அப்படியே வெளிப்படையாக அடுத்தவர்களிடம் சொல்லாதீங்க. அது அத்தனை நல்லதாக இருக்காது. உங்களை பார்த்து பொறாமைப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். உங்களுடைய வாய் தான் உங்களுக்கு முதல் எதிரியாக இருக்கும். பேச்சை குறைத்தால் இன்று நிறைய சாதிக்கலாம்.

- Advertisement -