- Advertisement -

மேஷம்:

இன்று உங்கள் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். திடீர் செலவுகள் ஏற்படக்கூடும். காரியங்கள் அனுகூலமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:

தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

- Advertisement -

மிதுனம்:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். அதிகமாக உழைக்கவேண்டி இருக்கும். உணவு தொடர்பான அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. சிலர் வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.

கடகம்:

சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும்.

- Advertisement -

சிம்மம்:

சிம்ம ராசிக்கு இன்றைய ராசி பலன் படி பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கன்னி:

சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

துலாம்:

வீடு, மனை வாங்க நினைத்த முயற்சி சாதகமாக முடியும். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை ஆபரணங்கள் சேரும்.

விருச்சிகம்:

இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். தாயின் உடல்நலன் சிறிய அளவில் பாதிக்கப்பட்டு, மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்திகள் வரும். இன்று அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாகன யோகம் உண்டாகும்.

தனுசு:

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும்.

மகரம்:

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணிய தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:

புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமாக அமையும். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி வேலைச் சுமை இருக்கும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

மீனம்:

உற்சாகமான நாள். மனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். எதிர்பார்க்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் ஆதாயம் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -
Published by