- Advertisement -
ராசி பலன் | Indraya rasi palan

இன்றைய ராசிபலன் – 29 அக்டோபர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் உஷாராக இருக்க வேண்டும். போட்டி பொறாமை பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். சின்ன சின்ன எதிரி பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபம் வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். நல்லது நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் வரும். பிரச்சனைகள் வந்து போகும். வேலையிலும் வியாபாரத்திலும் நிம்மதியற்ற சூழ்நிலை இருக்கும். பரபரப்பாகவே ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும். கவனத்தோடு இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அனுபவ சாலிகளின் பேச்சைக் கேளுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உற்சாகமாக உங்களுடைய வேலையை செய்வீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பண பிரச்சனை சரியாகும். தேவைக்கு ஏற்ப பணம் கையை வந்து சேரும். பண்டிகையை கொண்டாட குடும்பத்தோடு சுறுசுறுப்பாக ரெடியாக துவங்குவீர்கள்.

கடகம்


கடக ராசி காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை, சின்ன சின்ன சிக்கல்களில் சிக்குவதற்கு வாய்ப்பு உள்ளது. பெருசாக பாதிப்பு இல்லை. அதற்காக பயப்பட வேண்டாம். அன்றாட வேலையில் முழு கவனத்தோடு இருந்தால் போதும். நேரத்தை வீணடிக்க கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பேசுவதை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். காரிய தடை விலகும். விநாயகர் வழிபாடு செய்வது மேலும் முன்னேற்றத்தை கொண்டு வந்து சேர்க்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்யலாம். வங்கி கடன் முயற்சிக்கலாம். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடை விலகும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்க வாய்ப்பு இருக்கு. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனம் தேவை. புதிய முதலீடுகளின் போது ஒன்றுக்கு பலமுறை சிந்திக்கவும். வீண்விரய செலவுகளை கூடுமானவரை குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வண்டி வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் அதிகரிக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்தையும் பெரிசாக பாதிப்புகள் இருக்காது. ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். இன்று நேரம் போவதே தெரியாது. நேரத்தை வீணடிக்காமல் வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். சந்தோஷத்தில் கடமையை மறந்து விடக்கூடாது.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு பாசம் காதல் கைகூடும் நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்த வாழ்க்கை துணையோடு நீண்ட நேரம் பேசி நேரத்தை செலவு செய்ய வாய்ப்புகள் அமையும். சுபகாரிய தடை விலகும். குடும்ப பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் டென்ஷன் குறையும். பிரமோஷனுக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டும். விநாயகர் வழிபாடு செய்துவிட்டு இந்த நாளை துவங்குங்கள். பிரச்சனைகளிலிருந்து சுலபமாக விடுபடலாம். கவனக்குறைவு வேண்டாம். உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உறவுகளுக்கு மதிப்பும் மரியாதையையும் கொடுப்பீர்கள். செய்த தவறை எண்ணி மனம் வருத்தப்படுவீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். இறைவழிபாடு செய்வது மனதிற்கு அமைதியைத் தரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன அமைதி இருக்கும். தேவையான அளவு ஓய்வு கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் கொஞ்சம் பிரஷர் அதிகமாக தான் இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் சமாளிக்கும் அளவுக்கு உங்களிடம் திறமை வெளிப்படும் நாள் இன்று. இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நல்லதே நடக்கும்.

- Advertisement -