- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரும் பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சில மாற்றங்கள் மூலம் முன்னேற்றத்தை காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் குடும்பத்தினரின் ஆதரவை பெறுவீர்கள். பெண்களுக்கு திடீர் பணவரவு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளால் உள்ளம் மகிழும். கணேசனை துதியுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்பாக செயலாற்ற இருக்கிறீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் தொழில் ரீதியான பயணங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகம் செய்பவர்கள் உங்களுடைய வேலையில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முகத்தில் பொலிவு அதிகரித்து காணப்படும்.தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் சோர்ந்திருந்த மனதில் புதுவித உற்சாகம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். பெண்கள் குடும்பத்தின் மீது கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். ஆரோக்கியத்தை சரிபார்ப்பது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வரவுக்கு மீறிய செலவுகள் தலை வலியாக வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் தீர்க்கமாக ஆலோசித்து பின் முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகளை தள்ளிப் போடுவது நல்லது. பெண்கள் சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் வெற்றி காண்பீர்கள். பயணங்களில் கவனம் தேவை.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நபர்களின் வருகையால் உற்சாகம் பிறக்கும். கணவன்-மனைவி இடையே நல்ல நிகழ்வுகள் ஏற்படும். தொழில் செய்பவர்கள் புதிய திட்டங்கள் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நட்பு வட்டம் விரிவடையும். ஆரோக்கியத்தை பேணிக் காப்பது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் முடிவுகளில் சாதக பலன்களை காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபார செலவுகள் வரவை விட கூடுதலாக அமையும். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி காணலாம். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக இருக்கும். மகேஸ்வரனை வழிபடுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். நண்பர்களின் ஆதரவு தகுந்த சமயத்தில் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எடுப்பவர்களுக்கு வாய்ப்புகள் கை நழுவிப் போக கூடிய வகையில் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொது இடங்களில் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க முன்னெச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பாராட்டத்தக்க வகையில் நடந்து கொள்வார்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணவரவு தாராளமாக அமையும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உருவாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்க கூடுமானவரை கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பெண்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தொல்லை கொடுத்து வரும் எதிரிகளின் தொல்லைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியாளர்களை புரிந்துகொண்டு நடந்து கொள்வீர்கள். புரியாத புதிர் ஒன்றுக்கு விடை தெரியும் நாள் இன்று.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். புதிய பொருள் செயற்கை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் பிரச்சனைகள் தீரும். இதனால் நிலுவையில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். ஆரோக்கியம் கவனம் தேவை.

- Advertisement -