- Advertisement -
வீட்டு குறிப்புகள்

இத வச்சி கூட வீடு, பாத்திரம் எல்லாம் பளிச்சுன்னு மாத்தலாமா? இதுவரைக்கும் இந்த டிப்ஸை யாரும் சொல்லி இருக்கவே மாட்டாங்க. ஆனா இந்த டிப்ஸை நீங்க ட்ரை பண்ணிட்டு மத்தவங்களுக்கும் மறக்காம சொல்லுங்க.

- Advertisement -

வீட்டை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது என்பது ஒரு கலை என்பதையும் விட ஆரோக்கியமான விஷயமும் கூட. அது மட்டும் இல்லாமல் சுத்தமான வீட்டை பார்க்கும் போது நம் எண்ணங்களும் கூட நல்ல விதமாக செயல்பட்டு நாமும் சுறுசுறுப்பாக இருப்போம். அழுக்கு படிந்த தரைகளையும், டைல்ஸ்களையும் பார்க்கும் பொழுது ஒரு வித எரிச்சல் ஏற்படும். சில கறைகள் எத்தனை தான் துடைத்தாலும் போகவே போகாது. இதற்காக நாம் தினமும் வீட்டையும் மற்ற இடங்களையும் துடைத்துக் கொண்டே இருக்கவும் முடியாது அல்லவா. வீட்டில் உள்ள கறைகளை மட்டுமல்லாது பாத்திரங்களில் உள்ள அடி பிடித்த கறைகளை கூட எளிதாக போக்க ஒரு அருமையான டிப்ஸை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கறைகளை சுத்தம் செய்ய ஒரு பவுலில் அரை ஸ்பூன் அளவிற்கு டூத் பேஸ்ட், அத்துடன் சமையலுக்கு பயன்படுத்தும் வினிகர் இரண்டு ஸ்பூன் இரண்டையும் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை தரைகளில் எந்த கறை இருந்தாலும் அங்கே லேசாக தெளித்து விட்டு ஒரு ஐந்து நிமிடம் கழித்து துடைத்தால் கறை காணாமல் போய் விடும்.

- Advertisement -

சிங்கிள் இருக்கும் கறைகளை போக்க கூட இந்த முறையை பயன்படுத்தலாம். டைல்ஸில் இருக்கும் கறைகளும் கூட இந்த லிக்விட் தெளித்து விட்டு சிறிது நேரம் கழித்து தேய்த்தால் கறை காணாமல் போய் விடும். இது மட்டுமில்லாமல் இதை வைத்து வீட்டில் வேறு எந்த கறைகள் இருந்தாலும், அதை சுத்தம் செய்து விடலாம். குழந்தைகள் பயன்படுத்தும் பிளாக் போர்டு போன்றவையில் இருக்கும் கறைகள், கோடுகள் போன்றவை கூட இந்த முறையில் சுத்தம் செய்து புதிது போல் மாற்றி விடலாம்.

இந்த ஒரு லிக்விட் உங்கள் கையில் இருந்தால் போதும் உங்கள் வீட்டில் உள்ள கறைகள் அனைத்தையும் காணாமல் போக செய்து விடலாம்.

- Advertisement -

இப்போது பாத்திரத்தில் உள்ள அடிபிடித்த கரைகளை நீக்க எளிய குறிப்புகளை பார்க்கலாம்.

பாத்திரம் அடி பிடித்து விட்டால் அதை தேய்த்து சுத்தம் செய்வது எத்தனை பெரிய வேலை. அதிலும் இந்த குக்கர் போன்றவை அடிபிடித்து விட்டால் தேய்த்து கைவலியே வந்து விடும். அடிப் பிடித்த குக்கரை சுத்தம் செய்ய ஒரு டம்ளர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு படுத்துங்கள். தண்ணீர் சூடானவுடன் அதில் ஒரு ஸ்பூன் துணி துவைக்க பயன்படுத்தும் பவுடரையும், ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சாறை பிழிந்து விட்டு தோலையும் அதனுடன் சேர்த்து போட்டு விடுங்கள். இப்போது தண்ணீர் இரண்டு நிமிடம் வரை நன்றாக கொதித்த பிறகு அப்படியே அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீர் நன்றாக ஆறும் வரை அப்படியே இருக்கட்டும் அதன் பிறகு தண்ணீரை ஊற்றி விட்டு லேசாக தேய்த்து பாருங்கள் அடிப்பிடித்த குக்கரா இது என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

- Advertisement -

அதே போல் பெரும்பாலும் வீடுகளில் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து நாம் இட்லி வேக வைக்கும் போது தண்ணீர் பட்ட அந்த இடம் மட்டும் நிறம் மாறி இருக்கும். அதை கறையை கூட இதே முறையில் சுத்தம் செய்தால் கறை மறைந்து இட்லி பாத்திரம் முழுவதும் ஒரே நிறமாக இருக்கும். ஆனால் அதற்கு நீங்கள் எந்த இடம் வரைக்கும் கறை இருக்கிறதோ அதைவிட ஒரு இன்ச் அளவிற்கு அதிகமாக தண்ணீர் ஊற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: ரேஷன் பச்சரிசி இருந்தால் போதும் இப்படி சூப்பரா அரிசி மாவு கோலம் போட்டு அசத்தலாம். ஒருமுறை இப்படி அரைச்சி வைச்சிகோங்க இனி வருடம் முழுதும் கவலையே இல்ல

இந்த முறையில் நீங்கள் சுத்தம் செய்து பாருங்கள். உங்கள் வீடு, பாத்திரம் அனைத்துமே பளிச்சென்று பளிச்சென்று மாற்றி உங்கள் வீட்டையே அழகாக மாற்றி விடலாம்.

- Advertisement -