கோலம் என்றாலே அது மங்களகரமானது தான். அப்படி மங்களகரமாக நாம் செய்யும் ஒரு விஷயமானது வெறும் அழகிற்காக மட்டுமல்லாமல் அதில் இடம் கூட புண்ணியம் தேடிக் கொள்ள வேண்டும் என்று தான் பச்சரிசி மாவில் இந்த கோலம் போடும் முறையை நம் வீட்டு பெரியவர்கள் பழக்கத்தில் வைத்திருந்தார்கள். இப்போது எல்லாம் அதை எல்லாம் யாரும் செய்வதில்லை. ஆனால் இன்னுமும் கிராமங்களில் விஷயம் தெரிந்தவர்கள் பச்சரிசியில் தான் கோலம் போடுவார்கள். ஆனால் இங்கு கோலம் போடா நினைத்தால் கூட அதற்கு இடம் வேண்டும் அது ஒரு பெரிய பிரச்சனை தான். இந்த முறையில் கொஞ்சம் இடம் இருந்தால் கூட போதும் அழகா கோலம் போட்டு விடலாம். அதற்கு இந்த பச்சரிசி மாவை அரைத்து உருண்டு பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். வருடம் முழுவதும் உங்கள் வீட்டு பூஜை அறை, சமையலறை போன்ற இடங்களில் கோலத்தால் அலங்கரித்து மங்களகரமாக வீட்டை மாற்றலாம். புதுமையான இந்த முறையை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றின பதிவு தான் இது.
அதற்கு முதலில் அரை கிலோ பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு ரேஷன் பச்சரிசியே போதும் இதற்கென தனியாக கடையில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. பச்சரிசியை ஒரு முறை அலசி நன்றாக மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஊற வைத்த பச்சரிசியை தண்ணீர் இறுத்து விட்டு அரிசியை மிக்ஸி ஜாரில் போட்டு நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அரிசியில் கொஞ்சம் ஈரப்பதம் இருந்தால் பரவாயில்லை அப்படியும் தண்ணீர் போதவில்லை என்றால் அரிசி ஊற வைத்த தண்ணீரை லேசாக தெளித்துக் கொள்ளுங்கள் அதிகம் ஊற்றி விட வேண்டாம்
அரைத்து எடுத்த மாவை ஒரு காட்டன் துணி விரித்து அதில் கொட்டி துணியில் மாவை வைத்து மூட்டை போல் கட்டினால் ஐந்து நிமிடம் அப்படியே வைத்தால் மாவில் இருக்கும் அதிகப் படியாக தண்ணீரை அந்த துணி இழுத்து விடும்.
இதை இப்படி துணியில் கட்டி தண்ணீரை வடிக்க வில்லை எண்டால் மாவு உருண்டை பிடிக்க வராது. எனவே இந்த முறையில் தண்ணீரை இறுத்து விட்டு மாவை எடுத்து வைத்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு அகலமான தட்டு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சின்ன சின்ன உருண்டைகளாக இந்த மாவை உருட்டி (அதாவது குட்டி இட்லி போல) நன்றாக வெயிலில் ஒரு நாள் காய வைத்தாலே போதும். அதன் பிறகு எடுத்து ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
தினமும் இதில் இருந்து ஒன்று அல்லது இரண்டு உருண்டை எடுத்து கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அதில் ஒரு சின்ன காட்டன் துணி நனைத்து எடுத்து கோலம் போட்டு பாருங்கள் அவ்வளவு அழகாக, மங்களகரமாக இருக்கும். மாவு அரைத்து வைத்தால் கூட அது சீக்கிரம் கேட்டு விடும். அது மட்டும் இன்றி அரிசி மாவு கோலம் அப்படியே போடும் போது அது சீக்கிரம் அழிந்து விடும்.
இனி நீங்கள் ரேஷன் அரிசியை வீணாக்குவும் வேண்டாம். தனியாக மாவு கடைகளில் காசு கொடுத்து வாங்கவும் வேண்டாம். இப்படி மாவு அரைத்து கோலம் போடும் போது எறும்பு போன்ற சிறு உயிர்களுக்கு உங்கள் கையால் உணவு வைத்தது போலவும் இருக்கும். ஒரு சிறிய விஷயத்தை நாம் செய்யும் போது இத்தனை பலன்களும் நன்மைகளும் கிடைக்கும் என்றால். இதை உங்கள் ஓய்வு நேரங்களில் செய்து வைத்துக் கொள்ளலாம் தானே. இப்படி ஒரு முறை அரைத்து வைத்து கொண்டாலே போதும் ஒரு வருடம் முழுவதும் இந்த மாவு வரும்.
இந்த முறை உங்களுக்கு பிடித்திருந்தால் முயற்சி செய்து பாருங்களேன்.