
எல்லோரும் முருகனை வழிபாடு செய்கின்றோம். எல்லோரும் முருகனை நினைத்து, முருகனுக்கு உகந்த நாட்களில் விரத முறைகளை கடைப்பிடிக்கின்றோம். எல்லோருக்கும் முருகனை பிடிக்கும். எல்லோராலும் முருகனை நெருங்கி விட முடியுமா என்று கேட்டால், நிச்சையம் எல்லோராலும் முருகனை நெருங்க முடியும். நேரமும் காலமும் கைகூடி வரும்போது முருகப்பெருமாரின் அருள் நமக்கும் பரிபூரணமாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ இப்போது முருகனை நெருங்கும் நேரமும் காலமும் உங்களுக்கு கை கூடி வந்துவிட்டது. நாளை வைகாசி விசாகம். முருகனுக்கு எவ்வளவோ வேண்டுதல்கள் வைக்கலாம். எவ்வளவோ விரத முறைகளை பின்பற்றலாம். தான தர்ம காரியங்களை செய்யலாம். ஆனால் முருகப்பெருமானை நினைத்து நாளைய தினம் நீங்கள் இந்த ஒரு விரதத்தை மட்டும் மேற்கொண்டு பாருங்க. நாளைக்கு உங்களுக்கு முருகனின் பரிபூரண அருள் கிடைக்கும். கூடிய விரைவில் முருகனுடைய இதயத்தில் நீங்கள் குடி கொள்ள பாக்கியம் கிடைத்துவிடும். அப்படி என்னங்க விரதம். அதை தெரிந்து கொள்ள ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை தொடர்ந்து படியுங்கள்.
பொறுமை பெருமையை சேர்க்கும். அமைதி ஆனந்தத்தை கொடுக்கும். இந்த வரிகள் உங்களுக்கு தெரியுமா. நாளைய தினம் முருகனை நினைத்து நீங்கள் “மௌன விரதம்” இருக்க வேண்டும். இது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லைங்க. சாப்பிடாமல் கூட இருக்கலாம். பேசாமல் ஒரு மனிதரால் இருக்கவே முடியாது. மனதில் முருகனை நிறுத்தி “முருகா முருகா” என்ற வார்த்தையை மனதிற்குள் சொல்லிக் கொண்டு, ஒரு நாள் முழுவதும் பேசாமல் இருந்து பாருங்கள். இறைவனை நிச்சயமாக நீங்கள் உணருவீர்கள்.
எல்லோராலும் அவ்வளவு எளிமையாக இந்த மௌன விரதத்தை கடைபிடிக்க முடியாது. ஏன் 1 மணி நேரம் கூட மௌன விரதம் இருக்க முடியாது. மௌன விரதம் இருக்க வேண்டும் என்றால் அதற்கு இறைவனின் அருள் நமக்குத் தேவை.
நாம ரொம்ப நல்லவங்க தான். யாருக்கும் தீங்கு செய்ய மாட்டோம். ஆனாலும் நம்முடைய வார்த்தைகள் ஒரு சில நேரத்தில் யாரையாவது புண்படுத்தி இருக்கும். அடுத்தவர்களுக்கு நம்மை அறியாமலேயே சாபம் கொடுத்திருப்போம். இதனால் கர்ம வினையால் நம்முடைய வாழ்க்கையில் கஷ்டப்பட்டு கொண்டிருப்போம். இதிலிருந்து எல்லாம் விடுபட வேண்டும் என்றால், ஒரு நாள் முருகனுக்காக மௌன விரதம் இருக்க வேண்டும்.
தேவையில்லாத விஷயங்களை பேசாமல் இருந்தாலே, பிரச்சனையில் பாதி முடிந்து விடும். நம்முடைய பிரச்சனைக்கு காரணம் நம்முடைய வாய்தான். எங்களால் மௌன விரதம் இருக்க முடியாது அது ரொம்ப ரொம்ப கஷ்டம் என்ன செய்வது. முடிந்தவரை தேவையில்லாத விஷயங்களை பேசாமல் ஆவது அந்த ஒரு நாள், வைகாசி விசாகத்தன்று இருந்து, முருகனை மட்டுமே மனதில் நினைத்து பாருங்கள். முருகன் உங்களுடைய பாவங்களை எல்லாம் போக்கிவிடுவார்.
இதையும் படிக்கலாமே: இன்று 8-06-2025 ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் பிரதோஷம்.
முருகன், சிவபெருமான் நெற்றி கண்ணில் இருந்து வந்த நெருப்பில் தான் அவதரித்தார் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம்தான். அந்த நெருப்பு உங்களுடைய மனதில் இருக்கும் அழுக்கை பொசுக்கிவிடும். தீய எண்ணத்தை பொசிக்கி விடும். உங்களுடைய மனதிற்குள் என்னென்ன அழுக்குகள் எல்லாம் இருக்கிறதோ, அதை எல்லாம் அந்த நெருப்பில் போட்டு பொசுக்கி முருகா என்று முருகனிடம் சரணடைந்து விடுங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்ற இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.