ஞாயிற்றுக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பிரதோஷ நாளை ரவி வாரபிரதோஷம் என்று சொல்லுவார்கள்.இதை ராகு கால பிரதோஷம் என்றும் சொல்லுவார்கள். ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை ராகுகால நேரம். இந்த நேரம் தான் பிரதோஷ நேரம் ஆகவும் சொல்லப்படுகிறது. ஆகவே ராகு காலமும் பிரதோஷமும் சேரக்கூடிய அந்த நேரத்தில் ஈசனை வழிபாடு செய்வது நமக்கு கோடான கோடி பலனை தரும் என்பது நம்பிக்கை.
இந்த நாளில் ஈசனை வழிபாடு செய்ய ஒரு எளிமையான மந்திர வார்த்தையை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். எந்த வழிபாடாக இருந்தாலும், ஆத்மார்த்தமாக நம்பிக்கையோடு செய்ய வேண்டும். இது முதல் விஷயம். நாம கோவிலுக்கு போறோமோ, சிவனுக்கு விளக்கு போடுறோமோ இல்லையோ, சிவனுக்கு வில்வ இலை வாங்கி கொடுக்கின்றோமோ இல்லையோ, அந்த பிரதோஷ நேரத்தில் மனதார ஈசனை நினைத்து வழிபட்டாலே சிவபெருமானின் அருள் நமக்கு கிடைக்கும். ஏதாவது ஒரு ரூபத்தில் அந்த சிவபெருமானின் தரிசனத்தையும் நம்மால் பெற முடியும்.
வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் இதை நாம் உணர்ந்திருப்போம். இவர் வந்து சிவன் ரூபத்தில் எனக்கு உதவி செய்தார். அன்று இவர் இல்லை என்றால், இன்று நான் உயிரோடு இருந்திருக்க முடியாது. இப்படி எல்லாம் ஏதாவது ஒரு அதிசயமான தருணம் நம் வாழ்க்கையில் நிச்சயம் நடந்திருக்கும். அந்த இக்கட்டான சூழ்நிலையில் உங்களை காப்பாற்றிய ஒரு மனிதர் தான் நிச்சயம் சிவனின் ரூபம். அந்த சிவனை நெருங்க சிவபெருமானை ஐக்கியம் அடைய வேண்டும் என்றால், பிரதோஷ நேரத்தில் சொல்ல வேண்டிய அந்த ஒரு வரி மந்திரம் என்ன.
சக்தி வாய்ந்த சிவ மந்திரம்
மஹாதேவ சம்போ சிவ !
பிரதோஷ நேரத்தில் கோவிலில் இருந்தால் அந்த கோவிலில் ஈசனை பார்த்து இந்த மந்திரத்தை சொன்னால் அதி அற்புதமான பலன் உங்களுக்கு கிடைக்கும். பிரதோஷ நேரத்தில் நான் வேலை காரணமாக வெளியில் இருக்கிறேன். கோவிலுக்கு போக முடியாத சூழ்நிலை என்றால் இருந்த இடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை இந்த மந்திரத்தை சொல்லுங்கள். நிச்சயமாக சிவபெருமானின் தரிசனம் ஏதாவது ஒரு ரூபத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
சிவனை உணரக்கூடிய பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். வாய்ப்பு உள்ளது என்றால் ஒரு வில்வ இலையை உள்ளங்கைகளில் வைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள். அந்த வில்வ இலையை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள் சிவபெருமான் அந்த வில்வ இலையின் ரூபத்தில் உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் துணையாக வருவார். அதிசக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை ஒரு முறை படித்தாலும் சிவனின் பரிபூரண ஆசி உங்களுக்கு கிடைத்துவிட்டது என்று தான் அர்த்தம்.
இதையும் படிக்கலாமே: பூஜைகளற்ற வைகாசி விசாக வழிமுறை
சூரிய திசை நடப்பவர்கள் சூரிய பகவான் ஜாதக கட்டத்தில் சரியில்லை என்று நினைப்பவர்கள், நல்ல வேலை கிடைக்காமல் கஷ்டப்படுபவர்கள் வருமானம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் எல்லோரும் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ நேரத்தில் கட்டாயம் ஈசனை கும்பிட வேண்டும். நிச்சயம் நாளைய தினம் நீங்கள் செய்யும் இந்த சிவ வழிபாடு வாழ்நாளில் பெரிய அளவில் நல்ல மாற்றங்களை கொண்டு வந்து சேர்க்கும் என்ற தகவலுடன் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.