
வைகாசி மாதம் தான் முருகப்பெருமான் பூலோகத்தில் அவதரித்ததாக நமக்கு புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. வைகாசி மாத பௌர்ணமி திதியும், விசாக நட்சத்திரமும் சேர்ந்து வரக்கூடிய அந்த நாள் முருகனுக்கு ரொம்ப ரொம்ப விசேஷம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான்.
முருகனுக்கு சிறப்பு வாய்ந்த இந்த மாசி மாதம், செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து பிறந்திருப்பது இன்னும் கூடுதல் விசேஷம். இன்றைய தினம் முருகப்பெருமானை நினைத்து செய்ய வேண்டிய எளிமையான ஒரு பூஜையை பற்றிய தகவலைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.
முருகப்பெருமான் இந்த பூமியில் அவதாரம் செய்வதற்கு முதல் காரணம் அசுரனை அழிப்பதற்கு, தீமைகளை அழிப்பதற்கு தான். இந்த கலியுகத்தில் அசுரனாக வளர்ந்து நிற்கக்கூடிய பிரச்சனை கடன் பிரச்சனை. அந்த காலத்தில் அசுரர்கள் மனித ரூபத்தில் வலம் வந்தார்கள். இந்த காலத்தில் பிரச்சனைகள் பண ரூபத்தில், கடன் ரூபத்தில் அசுரனாக வளம் வருகின்றது. இந்த கடன் என்ற அசுரனை அழிக்கக்கூடிய சக்தியும் முருகனுக்குத் தான் இருக்கின்றது.
இன்று மாலை சுத்தபத்தமாக குளித்துவிட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். முருகப்பெருமானுக்கு செவ்வரளி பூக்களை போட்டு விடுங்கள். உங்களுடைய வீட்டில் வேல் இருந்தால் அந்த வேலைக்கு, அபிஷேகம் செய்து, சந்தன குங்கும பொட்டு வைத்து பூஜை அறையில் வைக்கவும்.
இந்த பரிகாரத்திற்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய பொருள், 1 கைப்பிடி அளவு துவரம் பருப்பு, அந்த துவரம் பருப்பை உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, இரு கைகளையும் ஏந்தி, முருகப் பெருமானை பார்த்து உங்கள் கடன் சுமை குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பூஜை அறையிலேயே ஒரு பிளாஸ்டிக் டப்பா வைத்து விடுங்கள். அதில் இந்த துவரம் பருப்பை போட்டு மூடி விடுங்கள். வழக்கம்போல முருகப்பெருமானுக்கு ஒரு நெய்வேதியம் வைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
இன்றைக்கான செவ்வாய் கிழமை வழிபாடு செய்து விட்டீர்கள். இதேபோல தொடர்ந்து 9 வாரம் செவ்வாய்க்கிழமை செய்ய வேண்டும். 9 வாரமும் புதுசாக ஒவ்வொரு கைப்பிடி துவரம் பருப்பு எடுத்து, அந்த டப்பாவில் போட்டு சேகரித்து வர வேண்டும். கடன் பிரச்சனை தீர வேண்டும் என்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும்.
9 வாரம் இந்த வழிபாடு நிறைவான பிறகு, அந்த துவரம் பருப்பை எடுத்து உங்களுடைய வீட்டிலேயே உங்கள் கையால் சாம்பார் சாதமாக செய்யுங்கள். இந்த சாம்பார் சாதத்தை ஒரு டப்பாவில் போட்டு பேக் செய்து வீதி ஓரங்களில் யாசகம் கேட்பவர்களுக்கு அன்னதானம் கொடுங்கள். இந்த ஒன்பது கைப்பிடி துவரம் பருப்பை வைத்து, நான்கு பேருக்கு சாம்பார் சாதம் செய்து கொடுத்தாலும் போதும்.
இல்லை இதோட இன்னும் கொஞ்சம் துவரம் பருப்பை அதிக அளவில் சேர்த்து, 11 பேருக்கு அன்னதானம் செய்ய முடியும் என்றாலும் செய்யலாம் தவறு கிடையாது. அதற்கு மேற்பட்டவர்களுக்கும் அன்னதானம் செய்யலாம். அது உங்களுடைய நிதி நிலைமையை பொறுத்தது. இந்த வைகாசி மாதம், வளர்பிறை செவ்வாய்க்கிழமையில் தொடங்கக்கூடிய இந்த வழிபாடு உங்கள் கடன் பிரச்சனையை குறைக்கும் என்பது நம்பிக்கையாக சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே: இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
அது மட்டும் இல்லாமல் உங்களுடைய செல்வ வளத்தை முருகப்பெருமான் உயர்த்திக்கொண்டே செல்ல இந்த எளிமையான வழிபாடு கை கொடுக்கும் என்பதும் நம்பிக்கை தான். முருகன் வழிபாடு செய்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளபடி அமையும் என்ற தகவலோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.