இதுவரை கேள்விப்படாத வித்தியாசமான ரெசிபி முட்டைகோஸ் கோதுமை சப்பாத்தி. இந்த சப்பாத்திக்கு பக்க சைட் டிஷ் தேங்காய் சட்னி ரெண்டையும் சேர்த்து எப்படி செய்வது என்று பார்க்கலாமா?

- Advertisement -

முட்டை கோஸ் சேர்த்து பல வகையான சமையல்கள் நாம் கேள்விப்பட்டிருப்போம். கூட்டு, பொரியல், குழம்பு, பக்கோடா இன்னும் பல வகை சமையலில் இந்த முட்டைகோசை பயன்படுத்தி செய்வோம். ஆனால் முட்டைக்கோசை பயன்படுத்தி சப்பாத்தி செய்யலாம் என்பது கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறது. இதன் சுவை எப்படி இருக்கும் என்றும் தோன்றும். முட்டைகோஸ் வைத்து செய்யும் இந்த சப்பாத்தி மிகவும் அருமையாகவே இருக்கும். வாங்க அதை எப்படி செய்வது என்று இந்த சமையல் குறிப்பு பதிவு தெரிந்து கொள்ளலாம்.

முட்டைகோஸ் சப்பாத்தி செய்முறை:
முதலில் ஒன்னரை கப்பளவிற்கு கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் 250 கிராம் கோசை நல்ல பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இரண்டையும் பொடியாக நறுக்கி சேர்த்த பிறகு 1ஸ்பூன் மிளகாய்த்தூள், 1 ஸ்பூன் கரம் மசாலா, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் உப்பு சேர்த்து 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி லேசாக தண்ணீர் தெளித்து நன்றாக பிசைந்து வைத்து விடுங்கள். அரை மணி நேரம் வரை இந்த சப்பாத்தி மாவு ஊற வேண்டும்.

- Advertisement -

இப்போது சப்பாத்தி மாவை எடுத்து சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு தட்டில் கொஞ்சம் மாவு வைத்து மாவில் இந்த உருண்டைகளை தொட்டு, மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து தோசைக் கல்லில் போட்டு, எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் திருப்பி போட்டு சிவக்க விட்டு எடுத்து விடுங்கள். சுவையான கோதுமை கோஸ் சப்பாத்தி தயார்.

தேங்காய் சட்னி செய்முறை:
இந்த சப்பாத்திக்கு தேங்காய் சட்னி நல்ல காம்பினேஷன் அதையும் எப்படி செய்வது என்று பார்த்து விடலாம். இதற்கு கால் கப் தேங்காய் எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காயின் தோலை நீக்கி விட்டு எடுத்து கொள்ளுங்கள். அது மட்டும் இல்லாமல் தேங்காய் சட்னிக்கு தேங்காய் உடைத்த உடனே அரைத்தால் தான் நன்றாக இருக்கும். இத்துடன் 2 பச்சை மிளகாய், 1 சின்ன துண்டு இஞ்சி, 1 ஸ்பூன் பொட்டுக் கடலை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள் அவ்வளவு தான் சட்னியும் தயார்.

- Advertisement -

இந்த சட்னியும், கோதுமை கோஸ் சப்பாத்தியும் வைத்து சாப்பிடும் போது அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த மாதிரி ஒரு டிஷ் நீங்க ட்ரை பண்ணி இருக்கவே மாட்டிங்க.

இதையும் படிக்கலாமே: சுவையான ரவை இனிப்பு போண்டா 5 நிமிடத்தில் எப்படி சுட்டு எடுப்பது? பாட்டி காலத்து ரவை பணியாரம் இப்படித்தான் செய்யணும்!

இந்த கோதுமை கோஸ் சப்பாத்தி இவ்வளவு அருமையாக இருக்குமா? என்று நீங்களே யோசிக்கும் அளவிற்கு இதன் சுவை அபாரமாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -