- Advertisement -

வைகாசி ஒன்று விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

- Advertisement -

ஒரு வருடத்தில் மொத்தம் 12 மாதங்கள் வரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரக்கூடியது தான் விஷ்ணுபதி புண்ணிய காலம். அதாவது வைகாசி ஒன்று, ஆவணி ஒன்று, கார்த்திகை ஒன்று, மாசி ஒன்று இந்த நான்கு மாதங்களிலும் வரக்கூடிய முதல் நாள் அன்று விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது வரும். இந்த நேரத்தில் பெருமாளை நாம் வலம் வந்து வழிபாடு செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய அனைத்து விதமான வறுமையும், தரித்திரமும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும். அந்த வகையில் வைகாசி முதல் நாள் செய்யவேண்டிய விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

விஷ்ணுபதி புண்ணிய கால வழிபாடு

செல்வ செழிப்புடன் வாழ்ந்தவர்கள் ஏதாவது ஒரு சூழ்நிலையில் செல்வத்தை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருந்தாலும், எவ்வளவு முயற்சிகள் செய்தும் வறுமை நிலையில் இருந்து எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பவர்களாக இருந்தாலும் அவர்கள் தவறாமல் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபாடு செய்வதன் மூலம் பெருமாள் மற்றும் மகாலட்சுமியின் அருளால் அனைத்து விதமான செல்வங்களையும் பெற முடியும்.

- Advertisement -

அந்த வகையில் வைகாசி ஒன்றாம் தேதி மே மாதத்தின் 15 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று பிறக்கிறது. அன்று காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு கையில் சிறிதளவு பச்சரிசியை வைத்துக்கொண்டு கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு “ஓம் குரு குரு வசி வசி” என்னும் மந்திரத்தை 27 முறை கூறி வீட்டிற்கு வெளியே சென்று வடக்கு திசை பக்கம் போட்டுவிட வேண்டும்.

அடுத்ததாக அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது 27 என்ற எண்ணிக்கையில் நாணயங்களையும், பூக்களையும் எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். முதலில் கோபுர தரிசனத்தை செய்துவிட்டு கொடி மரத்தை முழு மனதோடு வழிபாடு செய்து கொள்ளுங்கள். இப்பொழுது கொடி மரத்துடன் சேர்த்து பெருமாளின் கருவறையை 27 முறை சுற்றிவர வேண்டும். ஒவ்வொரு முறையும் நாம் சுற்றி வரும் பொழுது நாம் கையில் வைத்திருக்க கூடிய பூக்களில் இருந்து ஒவ்வொன்றாக கொடி மரத்தில் சமர்ப்பணம் செய்து கொண்டே வரவேண்டும். மேலும் இவ்வாறு பெருமாள் ஆலயத்தை சுற்றி வரும் பொழுது “ஓம் ஸ்ரீம் லலிதாம் லம்போதரம்” என்னும் மந்திரத்தை மனதார உச்சரித்துக் கொண்டே வலம் வர வேண்டும்.

- Advertisement -

27 முறை சுற்றி முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய 27 நாணயங்களில் சிறிதளவு மஞ்சள் மற்றும் குங்குமத்தை போட்டு கருடாழ்வாரை முழுமனதோடு வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது கண்டிப்பான முறையில் நம்முடைய கைகளில் அந்த 27 நாணயங்கள் இருக்க வேண்டும். பிறகு நேராக பெருமாள் சன்னதிக்கு சென்று பெருமாளின் திருவடிகளை தரிசனம் செய்ய வேண்டும். அடுத்ததாக பெருமாளின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தாயாரை தரிசனம் செய்ய வேண்டும். பிறகுதான் பெருமானின் முகத்தை நாம் தரிசனம் செய்ய வேண்டும். இப்படி தரிசனம் செய்து முடித்த பிறகு கையில் இருக்கக்கூடிய அந்த 27 நாணயங்களையும் அந்த கோவில் உண்டியலில் சமர்ப்பணம் செய்துவிட்டு மற்ற தெய்வங்களை வழிபாடு செய்ய வேண்டும்.

மற்ற தெய்வங்களை வழிபாடு செய்த பிறகு ஆலயத்திலேயே அமர்ந்து பெருமாளின் நாமங்களை கூற வேண்டும். அடுத்ததாக மகாலட்சுமியின் அஷ்டகம், கனகதாரா ஸ்தோத்திரம் போன்றவற்றை ஒருமுறை பாராயணம் செய்ய வேண்டும். இவ்வாறு வழிபாட்டை நிறைவு செய்த விட்டு வீடு திரும்பும் பொழுது கடையிலிருந்து ஒரு பாக்கெட் கல் உப்பை வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். மறுநாள் இந்த கல் உப்பை சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் செய்வதன் மூலம் பெருமாளின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ முடியும்.

இதையும் படிக்கலாமே:தோஷங்களை நீக்கும் சித்திரை கடைசி நாள் பரிகாரம்

சக்தி வாய்ந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருளால் அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பொருளாதார ரீதியான கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -