- Advertisement -

சொந்த வீடு யோகம் கிடைக்க வைகுண்ட ஏகாதசி வழிபாடு

- Advertisement -

பெருமாளுக்குரிய மிகவும் விசேஷமான விரத நாட்களில் ஒன்றாக திகழ்வதுதான் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசியான வைகுண்ட ஏகாதசி. இந்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. வெள்ளிக்கிழமை என்பது மகாலட்சுமிக்கு உரிய கிழமை. அந்த கிழமையில் வைகுண்ட ஏகாதசி வருவது என்பது அதீத பலனை தரும். அன்றைய தினம் விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் மகாவிஷ்ணுவின் அருளோடு மகாலட்சுமியின் அருளையும் பெற முடியும். அப்படிப்பட்ட நாளில் சொந்த வீடு அமைவதற்கு செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வைகுண்ட ஏகாதசி வழிபாடு

வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. பலரும் அன்றைய நாளில் விரதம் இருந்து இரவு முழுவதும் கண்விழித்து பல வகையான வழிமுறைகளில் விரதத்தை நிறைவு செய்வார்கள். இன்னும் சிலரோ அருகில் இருக்கக்கூடிய பெருமாளின் ஆலயத்திற்கு சென்று சொர்க்கவாசல் திறப்பதை பார்த்துவிட்டு வருவார்கள். இப்படி பலரும் பல விதங்களில் வைகுண்ட ஏகாதசியை பின்பற்றுவார்கள். அன்றைய தினத்தில் சொந்த வீடு அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாட்டை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை துளசி மாடத்திற்கு அருகில் தான் செய்ய வேண்டும். வீட்டில் இருக்கக்கூடிய துளசி செடியை சுற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். மாலை நேரத்தில் தான் இந்த வழிபாட்டை செய்ய வேண்டும். இதற்கு நமக்கு சுத்தமான பச்சரிசி மாவு வேண்டும். இதில் சிறிதளவு மட்டும் தண்ணீர் ஊற்றி அதை விளக்காக தயார் செய்து கொள்ளுங்கள். இந்த விளக்கில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

துளசி மாடத்திற்கு முன்பாக ஒரு சிறிய மனைப் பலகையை வைத்து அதற்கு மேல் பெருமாளின் பாதத்தை பச்சரிசி மாவினால் வரைய வேண்டும். பிறகு பெருமாளின் பாதத்திற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அந்த பாதத்திற்கு மேல் ஒரு தாம்பாள தட்டை வைக்க வேண்டும். அந்த தாம்பாள தட்டிற்கும் சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும். அந்த தாம்பாள தட்டிற்கு மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இரண்டு விளக்குகளையும் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி சொந்த வீடு அமைய வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைக்க வேண்டும். இப்படி தொடர்ச்சியாக வைகுண்ட ஏகாதசியான வெள்ளிக்கிழமை அன்றிலிருந்து தொடங்கி 16 வாரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் இந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் கண்டிப்பான முறையில் பெருமாளின் அருளால் சொந்த வீடு அமைவதற்குரிய யோகம் உண்டாகும்.

தீபம் எரிந்து முடித்த பிறகு அன்றைய நாள் முழுவதும் அது அப்படியே இருக்கட்டும். மறுநாள் அதாவது சனிக்கிழமை அன்று இந்த மாவிளக்கை பசு மாட்டிற்கு தானமாக தரலாம். பசுமாடு இல்லை என்பவர்கள் கால் படாத இடத்திலோ செடியிலோ போட்டு விடலாம்

இதையும் படிக்கலாமே:தீய சக்திகளை விரட்டியடிக்கும் அஷ்டமி பரிகாரம்
பல சிறப்புகள் நிறைந்த வைகுண்ட ஏகாதசி அன்று இந்த முறையில் துளசி செடிக்கு அருகில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் பெருமாளின் அருளால் சொந்த வீட்டில் குடியேறும் யோகம் உண்டாகும் என்று தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -