- Advertisement -

செவ்வாய்க்கிழமை வளர்பிறை சதுர்த்தி வழிபாடு

- Advertisement -

விநாயகர் பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுவது சதுர்த்தி திதி. சதுர்த்தி திதி அன்று விநாயக பெருமானை வழிபாடு செய்தால் பல நன்மைகள் உண்டாகும். அதிலும் வளர்பிறை சதுர்த்தி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக திகழ்கிறது. தேய்பிறை சதுர்த்தியை தான் நாம் சங்கடஹர சதுர்த்தி என்று கூறுகிறோம். எந்த அளவிற்கு சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டுமோ அதே அளவிற்கு நாம் வளர்பிறை சதுர்த்தியிலும் வழிபாடு செய்வது மிகவும் நல்ல பலனை தரும். அப்படிப்பட்ட வளர்பிறை சதுர்த்தியானது செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருவதால் அன்றைய தினம் விநாயகப் பெருமானே எந்த முறையில் வழிபாடு செய்வது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சதுர்த்தி வழிபாடு

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு திதி உகந்த திதியாக கருதப்படுகிறது. அதேபோல் ஒவ்வொரு கிழமையும் உகந்த கிழமையாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் நாளைய தினம் சதுர்த்தி திதி வருகிறது. அதுவும் முருகப்பெருமானுக்கு உகந்த செவ்வாய்க்கிழமையில் வருகிறது. அண்ணனுக்கும் தம்பிக்கும் உகந்த தினமாக நாளைய தினம் திகழப் போகிறது. அன்றைய தினத்தில் எந்த முறையில் விநாயகப் பெருமானை வழிபட்டால் தீராத கஷ்டங்கள் தீரும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை நாம் வீட்டிலும் செய்யலாம். கோவிலுக்கு சென்றும் செய்யலாம். கோவிலில் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் நாளைய தினம் ஒற்றைப்படை எண்ணிக்கையில் முருகப்பெருமானுக்கு பிடித்தமான செவ்வாழை பழத்தை வாங்கிக் கொண்டு அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும்.

அங்கு இருக்கக்கூடிய விநாயகரின் பாதத்தில் இந்த பழங்களை வைத்து விநாயகரை மனதார வழிபட வேண்டும். இவ்வாறு வழிபாடுகள் அனைத்தையும் முடித்த பிறகு அந்த வாழைப்பழங்களை திரும்பவும் வாங்கி அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும். அந்த வாழைப்பழத்தில் ஒரு வாழைப்பழத்தை மட்டும் வீட்டிற்கு எடுத்து வந்தால் போதும். இது ஆலயத்தில் செய்யக்கூடிய வழிபாடு.

- Advertisement -

இதுவே வீட்டிலிருந்து செய்வதாக இருந்தால் வீட்டில் இருக்கக்கூடிய விநாயகர் படத்திற்கு முன்பாகவோ அல்லது சிலைக்கு முன்பாகவோ ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தை ஏற்றி வைத்த பிறகு அதே ஒற்றைப்படை எண்ணிக்கையில் செவ்வாழை பழத்தை வாங்கி விநாயகருக்கு முன்பாக வைத்து விட்டு விநாயகரின் மந்திரங்களையோ, போற்றிங்களையோ, பாடல்களையோ, விநாயகர் அகவலையோ, மனதார விநாயகர் பெருமானை நினைத்து படிக்க வேண்டும்.

பிறகு உங்களுக்கு எந்த கஷ்டங்கள் தீராமல் உங்களை தொந்தரவு செய்து கொண்டிருக்கிறதோ அது தீர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்து முடித்துவிட்டு அந்த வாழைப்பழங்களை பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு கொடுத்து விட வேண்டும். வீட்டில் இருப்பவர்களுக்காக ஒரே ஒரு பழத்தை மட்டும் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த முறையில் நாளைய தினம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு தீராத கஷ்டமாக இருந்தாலும் அந்த கஷ்டங்கள் தீர்ந்து நன்மைகள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: பண அதிர்ஷ்டத்தை தரும் குபேரர் மந்திரம்

மிகவும் எளிமையான இந்த செவ்வாழை பழ பரிகாரத்தை நாளைய தினம் நாமும் செய்து நம்முடைய கஷ்டங்களில் இருந்து விடுபடுவோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

- Advertisement -